ரெயிலில் மின்சாரம் தாக்கிய வாலிபருக்கு நிதியுதவி

ரயில் மீது ஏறி சமுதாய கொடியை அசைத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி விபத்தில் விபத்துக்குள்ளானார்.சிவகங்கை மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துலெட்சுமி ஆகியோர் உடனிருந்து விஜய் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
Published on

திருத்துறைபூண்டி:

திருத்துறைபூண்டி வட்டம் எடையூர் ஊராட்சி வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

தேசிய தலைவர் தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழாவினை முன்னிட்டு சிவக ங்கை மாவட்டம் தேவக்கோட்டை அதங்குடி ஊரை சேர்ந்த விஜய் மதுரையிலிருந்து பரமக்குடியை நோக்கிச் செல்லும் ரயில் மீது ஏறி சமுதாய கொடியை அசைத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானார்.

இதனையடுத்து மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விபத்துக்கு ள்ளாகியவிஜய் மற்றும் அவரது குடும்பத்தை சந்தித்து வளரும் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.பாலை.

பட்டாபி ராமன் ரூ.25,000 நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார்.

மாநில துணை பொதுச் செயலாளர் இ.க.பாலுச்சாமி, மாநில இளைஞரணி இணைச் செயலாளர் கருப்பு, மாநில தகவல் தொழில்நுட்பம் தலைவர் வீரா முகிலன் சிவகங்கை, ராமநாதபுரம் மண்டல செயலாளர் ராசைய்யா மதுரை மண்டல செயலாளர் துரைப்பாண்டி, சிவகங்கை மாவட்ட செயலாளர் மணிகண்டன், சிவகங்கை மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துலெட்சுமி ஆகியோர் உடனிருந்து விஜய் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com