search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்வம்"

    • கொரோனா பரவல் எதிரொலி
    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிக ரிக்க தொடங்கியதையடுத்து மத்திய அரசு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தியது.

    இதைத் தொடர்ந்து தமிழ கம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்க ளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களிலும் தடுப்பூசி செலுத்த ப்பட்டு வந்தது. முதல் மற்றும் 2-ம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்தினார்கள்.

    குமரி மாவட்டத்தை பொருத்த வரை 14 லட்சத்து 1650 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 11 லட்சத்து 87 ஆயிரத்து 764 பேர் 2-ம் கட்ட தடுப்பூசியும், 2 லட்சத்து 96 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தியிருந்தார்கள். முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

    முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். கொரோனா பரவல் குறைந்ததால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகா தார நிலையங்களில் புதன்கிழமை மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. புதன் கிழமை தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி செலுத்தி வந்தாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் மற்ற நாடுகளில் அதிகரிக்க தொடங்கியதையடுத்து தமிழகத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

    இதையடுத்து இன்று நாகர்கோவில் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு பொது மக்கள் வந்திருந்தனர். மேலும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி னார்கள்.

    இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் தடுப்பூசி செலுத்துவதற்கு ஆர்வமாக வந்திருந்தனர்.

    • மாணவர்கள் ஆர்வத்தோடு அச்சோதனைகளை செய்து பார்த்தனர்.
    • கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிர் கணக்கு கொடுக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள் அருளானந்தம், துரைராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வானவில் மன்ற ஒன்றிய தன்னார்வலர் லாவண்யா, காற்றுக்கு அழுத்தம் உண்டு என்பதற்கும், காற்று இடத்தை அடைத்துக்கொள்ளும் என்பதற்கும் பல எளிய சோதனைகளை மாணவர்களிடையே செய்து காட்டினார்.

    அப்போது மாணவர்கள் ஆர்வத்தோடு அச்சோதனைகளை செய்து பார்த்தனர்.

    மேலும், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிர் கணக்கு கொடுக்கப்பட்டது. வானவில் மன்ற தன்னார்வ லரோடு மாணவர்கள் உற்சாக த்தோடும், ஆர்வத்தோடும் கலந்துரையாடினர்.

    தன்னார்வலர் செய்து காட்டியவை அனைத்தும் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    முன்னதாக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் உமாராணி அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் முருகையன் நன்றி கூறினார்.

    • அரையாண்டு விடுமுறை முடிந்து மதுரை மாவட்டத்தில், இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் 23-ந் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டும் இந்த விடுமுறை நாட்களில் வந்ததால் மாணவர்கள் உறவினர்கள் வீடுக ளுக்கும், பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.

    இந்த நிலையில் நேற்று புத்தாண்டு பிறந்ததை யடுத்து இன்று 2ந்தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொறுத்த வரை 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.தொடக்கப்பள்ளி ஆசிரி யர்களுக்கு பயிற்சிகள் இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டதால் காலை வழக்கமான நேரத்தில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர். இதனால் சாலை களில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மாணவ-மாணவிகள் சென்றதால் பள்ளி மற்றும் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    அரையாண்டு விடுமுறை முடிந்து திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டுமென அந்தந்த பள்ளிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். இதில் ஒரு சில மாணவர்கள் முக கவசம் அணியாமல் பள்ளிக்கு வந்தனர். அவர்களையும் அணிந்து வரும்படி பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டது.

    • தேங்காய் பூ கிடைக்க முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்.
    • வாகனங்களை நிறுத்தி தேங்காய் பூவை சர்க்கரையுடன் வாங்கி சாப்பிட்டு விட்டு செல்கின்றனர்.

    உடுமலை :

    தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சி ஆகும். தேங்காய் பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் உள்ளது. இளநீரில் இருக்கும் சதை பற்றினை போல ருசி இருக்கும் என்பதால் இதை சர்க்கரை உடன் கலந்து விற்பனை செய்கின்றனர்.மேலும் தேங்காய் பூவில் அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்.

    தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை கட்டுப்படுத்த இயல்கிறது. ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த மருத்துவமாகவும் பயன்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தேங்காய் பூ கிடைக்க முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்.

    பின்னர் 20 நாட்களுக்கு பின்னரே தேங்காய் குருத்து வளர ஆரம்பிக்கும். அந்தப் பக்குவத்தில் தேங்காய் உடைத்தால் தேங்காய் பூ கிடைக்கும். தென்காசியை சேர்ந்த கணேசன்என்பவர் கடந்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு மேலாக உடுமலை தாராபுரம் ரோட்டில் கோட்டமங்கலம்பகுதியில் தேங்காய் பூ விற்பனை செய்து வருகிறார் .

    அவர் இது குறித்து கூறுகையில், ஆரம்பத்தில் அதிகப்படியான விற்பனை இல்லாமல் இருந்தது. தற்போது தேங்காய் பூவின் மகத்துவம் தெரிய வந்துள்ளதால் வாகனங்களில் செல்வோர் அங்கு வாகனங்களை நிறுத்தி தேங்காய் பூவை சர்க்கரையுடன் வாங்கி சாப்பிட்டு விட்டு செல்கின்றனர் என்று தெரிவித்தார்.

    • பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம், பிபிஏ, பி.காம்., பி.எஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தது.
    • வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருக்காட்டுப்பள்ளி கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக பூதலூரில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய கட்டிடவளாகத்தில் செயல்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

    இந்த கல்லூரியில் சேர்வதற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது. தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பின் பேரில் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன. கல்லூரியில் பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம், பிபிஏ, பி.காம்., பிஎஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று இருந்தது.

    நேற்று வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா இனிப்பு கொடுத்து வரவேற்றார்.

    பேராசிரியர்கள் ஆகாஷ், பாலு, முருகானந்தம், பாலாஜி, கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் தேவிகலா ஆகியோரும் மாணவர்களை வரவேற்றனர். இதனை தொடர்ந்து அனைத்து மாணவ மாணவிகளையும் ஒருங்கே அமர வைத்து கல்லூரி நடைமுறை மற்றும் நல்லொழுக்க அறிவுரைகள் கூறப்பட்டன.

    மாணவ-மாணவிகள் தங்கள் பகுதியிலேயே கல்லூரி அமைவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    • 33-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது.
    • 36 ஆயிரத்து, 700 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 33-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது. இதில் 29 ஆயிரத்து 600 பூஸ்டர் தடுப்பூசி உட்பட 36 ஆயிரத்து, 700 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    இதற்கான பணியில் மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் என 2,681 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சுகாதாரத்துறையினர் கூறுகையில், முந்தைய முகாமை ஒப்பிடுகையில் 33-வது முகாமில் கூடுதலாக 14 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாவட்ட மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கிறது என்றனர்.

    • ஒன்றை பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல.
    • சிந்திக்க துவங்கியதால் தான் இறைவன் உருவெடுத்தார்.

    திருப்பூர்:

    ரவுத்திரம் வாசகர் வட்டம் சார்பில், வாழ்வே ஒரு மந்திரம் நூல் அறிமுக விழா திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. இதில் இறைவன் இருப்பது எங்கே? எனும் தலைப்பில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசிய தாவது:-

    ஒன்றை பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல. அவற்றை வேண்டுபவர் வேண்டுமென்ற நேரத்தில் திருப்பி தருவது தான் வாழ்க்கை. இரு கலைகளையும், நிலைகளையும் கொண்டது வாழ்க்கை. நாம் பிறந்தது முதல் பெற்றோரிடம் பெறுகிறோம். அவர்கள் வாழ கடைசியாக நம்மால் இயன்றதை தருகிறோம். தரவேண்டும். அதுவே அறம்.சாகும் வரை ஒருவர் பெற்றுக்கொண்டு மட்டுமே இருந்தால் அவர் வாழ்வதில் அர்த்தமில்லை. எண்ணம், செயலில் அவரவர் பாதையில் பயணிக்க வேண்டும். சாதி, மதம், இனத்தால் நம் பிரிந்து நிற்கிறோம். ஆனால்தமிழ் மொழியால் நாம் இணைந்திருக்கிறோம். அனைவரும் மனிதர் என்பதை உணர்ந்திருக்கிறோம். 700 கோடி மக்களை ஒன்றாக இணைப்பது மொழி.மதத்துக்கும், ஆன்மிகத்துக்கும் உள்ள வித்தியாசம் புரிந்து கொள்ள வேண்டும். மதம் மனிதனை பிரிக்கும். ஆன்மிகம் அரவணைக்கும். நம் அறிவை வளர்க்க, புத்தக வாசிப்பும், தெரிந்து கொள்ளும் ஆர்வமும் வேண்டும்.

    உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் நம்மை காண்பதும், நம்மில் காண்பதும் தான் ஆன்மிகம். ஆதி மனிதனுக்கு வியப்பும், அச்சமும் ஏற்பட்ட விடை காண முடியாத சில கேள்விகள் தோன்றின. அப்போது, நம்மை மீறியும் ஒரு சக்தி இருக்கிறது என்பதை அவனே எண்ணத்தோன்றினான். அதுவே வேதங்களாகவும், உபநிடதங்களாகவும் மாறி கடவுள் உருவாக அடித்தளமாக அமைந்தது. சிந்திக்க துவங்கியதால் தான் இறைவன் உருவெடுத்தார்.இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

    • நீண்ட தூர ெரயில்களுக்கான முன்பதிவு, 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
    • ஒரே நாளில் 6.24 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.

    திருப்பூர்:

    வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதி தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரத்துக்கான (அக்டோபர் 21 - 23)ெரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

    திருப்பூரில் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பயணிக்க, வடமாநிலத்தினர் அதிக அளவு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இது குறித்து ெரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பயணிக்க வடமாநிலத்தினர் அதிக ஆர்வம் காட்டினர்.ராஜ்கோட், பாட்னா, ஜெய்ப்பூர், அகமாதபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். வட மாநிலங்களுக்குப் பயணிக்கும் நீண்ட தூர ெரயில்களுக்கான முன்பதிவு, 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. அதே நேரம் நாகர்கோவில், திருநெல்வேலி, சென்னை, திருவனந்தபுரம் செல்வதற்கான 30 சதவீத இடங்கள் கூட இன்னமும் நிரம்பவில்லை.தமிழகத்திற்குள்ளான ெரயில் டிக்கெட் முன்பதிவில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கடந்த, 23ந்தேதி, 1,011 பேர் டிக்கெட் முன்பதிவுக்கு வந்தனர். ஒரே நாளில் 6.24 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது என்றனர்.

    • சிறப்புத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
    • நிலையான விலை காரணமாக விவசாயிகள் லாபம் பெற்றனர்.

    உடுமலை:

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டு வந்தது.பி.ஏ.பி., மண்டல பாசனத்தில் தண்ணீர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல், விலை வீழ்ச்சி ஆகிய காரணங்களால் பருத்தி சாகுபடியை விவசாயிகள் கைவிடத்துவங்கினர்.கடந்த 2000ம் ஆண்டுக்குப்பிறகு, பருத்தி சாகுபடி முற்றிலுமாக கைவிடப்பட்டு, மக்காச்சோள சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரித்தது.

    பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்புத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், கடந்த 2008ல் நூற்பாலை நிர்வாகத்தினர் ஒப்பந்த சாகுபடி முறையில் பருத்தி சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஊக்கமளித்தனர்.அந்த ஆண்டு பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு 100 ஏக்கர் பரப்பு வரை பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.பின்னர், மிக நீண்ட இழை பருத்தி மற்றும் நீண்ட இழை பருத்தி ரகங்களுக்கு நல்ல விலை கிடைக்க தொடங்கியது.இது விவசாயிகளை பருத்தி சாகுபடியை நோக்கி திரும்ப செய்தது.கடந்த 2009ல் உடுமலை பகுதியில் பரவலாக 200 நாட்கள் வயதுடைய மிக நீண்ட இழை பருத்தி, 150 நாட்கள் வயதுடைய நீண்ட இழை பருத்தி ரகம் பயிரிடப்பட்டு ஏக்கருக்கு 15 குவிண்டால் வரை விளைச்சல் கிடைத்தது.

    மிக நீண்ட இழை பருத்திக்கு ஒரு குவிண்டாலுக்கு 9 ஆயிரம் ரூபாயும், நீண்ட இழை பருத்தி 6 ஆயிரம் ரூபாயும் விலை கிடைத்தது. நிலையான விலை காரணமாக விவசாயிகள் லாபம் பெற்றனர்.கடந்தாண்டு பருத்தி சாகுபடி பரப்பு குறைவாகவே இருந்தது. ஆனால்அனைத்து ரக பருத்திக்கும் நல்ல விலை கிடைத்தது. இதனால் விவசாயிகள் ஆர்வம் பருத்தி சாகுபடிக்கு அதிகரித்துள்ளது.காரிப் பருவம் மற்றும் வரும் ஆகஸ்டு மாதத்தில் துவங்கும் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கும், பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதற்கேற்ப வேளாண்துறை வாயிலாக பருத்தி சாகுபடிக்கு ஊக்கமளிக்க வேண்டும்.இதனால் பருத்தி வரத்து அதிகரித்து நூற்பாலைகளின் தேவையில் நிலவும் பற்றாக்குறையை சிறிது சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×