search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலாமாண்டு மாணவர்களை இனிப்பு கொடுத்து வரவேற்ற கல்லூரி முதல்வர்
    X

    முதலாமாண்டு மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்து கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர்.

    முதலாமாண்டு மாணவர்களை இனிப்பு கொடுத்து வரவேற்ற கல்லூரி முதல்வர்

    • பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம், பிபிஏ, பி.காம்., பி.எஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தது.
    • வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருக்காட்டுப்பள்ளி கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக பூதலூரில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய கட்டிடவளாகத்தில் செயல்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

    இந்த கல்லூரியில் சேர்வதற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது. தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பின் பேரில் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன. கல்லூரியில் பி.ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம், பிபிஏ, பி.காம்., பிஎஸ்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று இருந்தது.

    நேற்று வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர்.கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா இனிப்பு கொடுத்து வரவேற்றார்.

    பேராசிரியர்கள் ஆகாஷ், பாலு, முருகானந்தம், பாலாஜி, கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் தேவிகலா ஆகியோரும் மாணவர்களை வரவேற்றனர். இதனை தொடர்ந்து அனைத்து மாணவ மாணவிகளையும் ஒருங்கே அமர வைத்து கல்லூரி நடைமுறை மற்றும் நல்லொழுக்க அறிவுரைகள் கூறப்பட்டன.

    மாணவ-மாணவிகள் தங்கள் பகுதியிலேயே கல்லூரி அமைவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×