search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளர்கள்"

    • கடந்த சில நாட்களாக ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
    • உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தை சேர்ந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி, 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு மட்டும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

    சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று விரைவில் திரும்புவர். இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின் தைப்பூசம், குடியரசு தினம், சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருந்தது. மேலும் சில நாட்கள் சேர்த்து வடமாநில தொழிலாளருக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும், கடந்த மாதத்தில் இருந்து ஆர்டர் வரத்து தொடங்கி உள்ளது. இதையடுத்து தொழிலாளர்களுக்கு பனியன் நிறுவனங்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளன.

    அதன்படி, திருப்பூரில் இருந்து சென்ற, ஒடிசா, பீஹார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    விடுமுறை முடிந்து தொழில் நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்ததும் கடந்த சில நாட்களாக, ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

    இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், தீபாவளிக்கு பிறகு, பொங்கல் பண்டிகை வரை, உற்பத்தி மந்தமாக இருந்தது. புதிய ஆர்டர் விசாரணை சூடுபிடித்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும். அதற்காகவே சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். புதிய தொழிலாளர்களையும் அழைத்து வருகின்றனர் என்றனர்.

    • இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • இருவரையும் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காந்திநகர் ஏபி., நகரில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு சப்ளை செய்வதாக அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வட மாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் தங்கி இருந்த வீட்டில் 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் பாரிக் (24), மனோஜ் பொகாரா (36) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்திய போது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரெயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து சப்ளை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர். 

    • பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் ரகுபதிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தலையில் 5 தையல் போடப்பட்டு உள்ளது.
    • சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இங்கு நேற்று இரவு ஆயுதபூஜை விழா நடைபெற்றது. அப்போது சில வடமாநில தொழிலாளர்கள் மது போதையில் ரகளையில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலைய போலீஸ்காரர் ரகுபதி சென்று அவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் போலீஸ்காரர் ரகுபதியை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தலையில் 5 தையல் போடப்பட்டு உள்ளது.

    மேலும் இது பற்றி விசாரிக்க வந்த மேலும் 5 போலீசாரையும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சில வடமாநில தொழிலாளர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர்.
    • ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் போலீஸ்காரர் ரகுபதியை சரமாரியாக தாக்கினர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இங்கு நேற்று இரவு ஆயுத பூஜை விழா நடைபெற்றது. அப்போது சில வடமாநில தொழிலாளர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலைய போலீஸ்காரர் ரகுபதி சென்று அவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் போலீஸ்காரர் ரகுபதியை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தலையில் 5 தையல் போடப்பட்டு உள்ளது.

    மேலும் இதுபற்றி விசாரிக்க வந்த மேலும் 5 போலீசாரையும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காயமடைந்த 4 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • நிர்மல் தாஸ் (வயது 28), பிரஞ்சநாதன் தாஸ் (26), சூர்யா (24), ரஞ்சன் தாஸ் (25) ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் உள்ள நூல் மில்லில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த நிர்மல் தாஸ் (வயது 28), பிரஞ்சநாதன் தாஸ் (26), சூர்யா (24), ரஞ்சன் தாஸ் (25) ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஓலப்பாளையம் அருகே உள்ள ஒரு நூல் மில்லில் இவர்கள் நான்கு பேரும் வேலை செய்து வந்ததாகவும், அப்போது மில்லின் உரிமையாளர் விஸ்வநாதன் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடிக்கடி மில்லில் இருந்து பணம் மற்றும் மின் மோட்டார்கள் காணாமல் போவதாக கூறி, இந்த 4 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 4 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மருத்துவர்கள் அவர்களது ரத்தம் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
    • சம்பந்தப்பட்ட உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் உணவகங்கள் மற்றும் சிக்கன் ரைஸ் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி பகுதியில் டெல்டா எலக்ட்ரானிக் தனியார் நிறுவனத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கொல்கத்தாவை சேர்ந்த 150 தற்காலிக தொழிலாளர்களுக்கு ஆனந்தன் என்பவர் நேற்று கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் சேட்டு என்கிற சென்னயன் என்பவரது தனியார் உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சென்றுள்ளார். அனைவரும் சாப்பிட்ட நிலையில் பலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி இருந்துள்ளது.

    இதில் கடும் வயிற்று வலி ஏற்பட்டு 26 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    மருத்துவர்கள் அவர்களது ரத்தம் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர். இரவு சாப்பிட்ட சிக்கன் ரைஸ் அதில் இருந்த சிக்கன் காலாவதியானதா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த நிலையில் அதன் தொடர் சம்பவமாக சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 பேர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் உணவகங்கள் சிக்கன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் உணவு பாதுகாப்பு துறையினர் கடந்த நாட்களாக ஆய்வு செய்து வந்தனர். ஆனாலும் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்திற்கு சாதகமாக செயல்படுவதாகவும், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • வழக்கில் தலைமறைவாக இருக்கும் புகழேந்தி, மோதிலால் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
    • தொழிலாளர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் வால்மிகி. இவர் தனது நண்பர்களான ஜிதேந்திர குமார், வினய்குமார், பவன்குமார், அசோக்குமார், சித்தார்ய குமார், ஆகியோருடன் கடந்த மாதம் 14-ம் தேதி பீகாரில் இருந்து வேலை தேடி கேரளாவிற்கு ரெயிலில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பீகாரை சேர்ந்த பிபீன் குமார் என்பவர் தனது நண்பர் மூலமாக வால்மியை தொடர்பு கொண்டு தான் வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் தன்னுடன் இருக்கும் நண்பர்களை அழைத்துக் கொண்டு ஈரோட்டிற்கு வரும் படியும் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

    ஏற்கனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் பிபீன் குமார் தனது நண்பர்களுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் வந்தவுடன் அவர்களை ஈரோடு பெரிய சேமூர் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கொடுக்க வேண்டும் என்றும் கொடுத்தால் தான் தங்களை விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.

    மேலும் ஆன்லைன் மூலமாக பணம் அனுப்ப வேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பீகாரில் உள்ள தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு ரூ.1.10 லட்சம் ஜி.பே. மூலமாக அனுப்பி வைத்து உள்ளனர்.

    பணம் வந்த உடனே பிபீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி வைத்திருந்த 6 பேரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து டெம்போ டிராவலர் மூலமாக அவர்களை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் விட்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து வால்மீகி உட்பட 6 பேரும் சென்னையில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று அங்கிருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். தொடர்ந்து இது குறித்து சென்னை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை போலீசார் புகார் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு அந்த புகார் நகலை அனுப்பி வைத்தனர்.

    அதன் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் பெரிய சேமூர் பகுதியில் இருந்த பீகாரை சேர்ந்த பிபீன் குமார் மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த ஈரோட்டை சேர்ந்த தமிழ் செல்வன், சுபாஷ், பிரகாஷ், சசிகுமார், பூபாலன், கண்ணன் ஆகிய 7 பேரை 8 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் புகழேந்தி, மோதிலால் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். குடும்பத்தை காப்பாற்றி அனைத்து உறவுகளையும் விட்டுவிட்டு குறைந்த ஊதியத்திற்காக மாநிலம் விட்டு மாநிலம் வரும் வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரெயில்களில் சுமார் 400 பேர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றனர்
    • திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் 50 சதவீதம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பகுதியில் பின்னலாடை தொழில்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களான டையிங், நிட்டிங், காம்பேக்டிங், வாசிங், விசைத்தறி உள்ளிட்ட தொழில்களும் மற்றும் உடுமலை பகுதியில் விவசாயம், காங்கயம் பகுதியில் தேங்காய் களம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த தொழில்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான அசாம், ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    தினசரி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரெயில்களில் சுமார் 400 பேர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றனர். இடைத்தரகர்கள் மூலம் ரெயில் நிலையத்திலேயே அவர்களுக்கான பணி இடத்தை தேர்வு செய்து பிரித்து அனுப்புகிறார்கள். மேலும் ரெயில் நிலையங்களில் தினசரி இறங்கும் வடமாநிலத்தவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் மெட்டல் டிடெக்டர் உதவியோடு போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூரில் கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு ஆகிய சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசி பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களில் குடும்பத்தோடு வருபவர்களை குறி வைத்து துப்பாக்கிகளை காட்டி மிரட்டி பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டனர். அவர்கள் யார்? என போலீசார் தேடியபோது அந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேருமே வட மாநிலத்தவர்கள் என தெரியவந்தது.

    மேலும் திருப்பூரில் மோசடி சம்பவங்களை பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே அரங்கேற்றம் செய்கின்றனர். இப்படி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட பின் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விடுகின்றனர்.வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களிலும் அவர்களிடம் முறையான ஆவணங்களை பெறுவதில்லை. இதனால் குற்றங்கள் நடைபெற்ற பின் வடமாநில தொழிலாளர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் திருப்பூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களிடம் முறையான ஆவணங்களை பெற்றுக்கொண்டு அடையாள அட்டை வழங்க வேண்டுமென பொது மக்கள்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் திருப்பூரில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களுக்கு முறையான அடையாள அட்டை வழங்க வேண்டுமென தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சட்டபணிகள் ஆணைக்குழு, திருப்பூர் மாவட்ட போலீஸ், தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தகவல் சேகரிப்பு முகாம் ஜெய்வா பாய், நஞ்சப்பா., கே.எஸ். சி., பழனியம்மாள் ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் 50 சதவீதம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும் வடமாநிலத்தவர்களின் பாதுகாப்பிலும் அடையாள அட்டை வழங்குவது அவசியமாகும். தற்போது நீதித்துறையின் முன் முயற்சியில் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தகவல் சேகரிப்பது பாராட்டுக்கு உரியது என்றனர்.

    • வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன், சப்- இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிறுவன் ஒருவன் பிடிபட்டான்.

    புதுச்சேரி:

    புதுவை மிஷன் வீதியை சேர்ந்தவர் ஆசிப் நசிர் பட் (39). இவரது சொந்த மாநிலம் காஷ்மீர்.

    இவர் கடந்த 15 ஆண்டுகளாக புதுவையில் வசித்து வருகிறார். புதுவை - வில்லியனூர் மெயின் ரோட்டில் கடந்த 9 மாதமாக ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இங்கு மேற்குவங்கத்தை சேர்ந்த ஷேக் ரகிமுதின் (21), அப்துல் ரசாக்கான் (19) ரூப் கான் (21) உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஷன் அலி (19) போலநாத் (26) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வில்லியனூர் பெரம்பை மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது உள்ளூரை சேர்ந்த சிலர் அவர்களை வழிமறித்து சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் அவர்கள் ஷேக் ரகி முதினை பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆசீப் நசிர் பட் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன், சப்- இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கியவர்கள் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் என்பதும், ஏற்கனவே மளிகை கடையை உடைத்து திருட முயன்ற வழக்கு, கொலைக்கு உதவி செய்வது உள்ளிட்டவற்றில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிறுவன் ஒருவன் பிடிபட்டான்.

    அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜேஷ் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
    • ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கடந்த 13-ந் தேதி அதிகாலை, ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்கள் தங்கியுள்ள அறையில் மர்ம நபர்கள், தீ வைத்தனர்.

    இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 19), சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுகிராம் (22) ஆகியோர் தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்வந்த் (19), கோகுல் (23) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜேஷ் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். சுகிராம் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஜேடர்பாளையம், பரமத்திவேலூர் பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஒருவருக்கு 80 சதவீதக்கு மேல் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையம் சரளைக்காடு பகுதியை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். என்ற முத்துசாமி. இவரது வெல்ல ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து வடமாநில தொழிலாளர்கள் கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் சிலர் சிமெண்டு அட்டையை உடைத்தனர்.

    பின்னர் அதன் வழியாக தாங்கள் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரோகி என்ற ராகேஷ் (வயது 19), சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சுகிராம் (20), யஸ்வந்த் (19) மற்றும் கோகுல் (24) ஆகிய 4 பேர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவருக்கு 80 சதவீதக்கு மேல் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மநபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே நேற்று இரவு தமிழக கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜேடர்பாளையத்திற்கு வந்தார். அவர், வடமாநில தொழிலாளர்கள் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜேடர்பாளையம் பகுதியில் இனி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இருதரப்பு மக்களும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலைச்செல்வன் (நாமக்கல்), சக்திகணேசன் (ஈரோடு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்தநிலையில் தனிப்படையினர் சந்தேகத்தின்பேரில் 5-க்கும் மேற்பட்டோரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் கூறியுள்ளனர். இதை அடுத்து தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.

    • பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் 2 பேர் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தேடி வந்தனர்.
    • போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொருவரான மணீஷ் காஷ்யப் என்பவரை பீகார் மாநிலம் பாட்னாவில் தமிழ்நாடு தனி படை போலீசார் கைது செய்தனர்.

    ஆலந்தூர்:

    தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு கொடுமைகள் நடப்பதாக சமூக வலைதளங்களில் பொய்யான வதந்தியை பரப்பியதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு போலீசார் விசாரணை நடத்தி வதந்தி பரப்பியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் 2 பேர் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தேடி வந்தனர். இந்த நிலையில் அதில் ஒருவர் நீதிமன்றத்தில், முன் ஜாமின் பெற்று விட்டார்.

    இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொருவரான மணீஷ் காஷ்யப் என்பவரை பீகார் மாநிலம் பாட்னாவில் தமிழ்நாடு தனி படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தமிழ்நாடு தனி படை போலீசார் மணீஷ் காஷ்யப்பை பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து விமானத்தில் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வநதனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    ×