search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் பூ"

    • தென்னை விவசாயிகள் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • சிறு கன்றுகளாக இருக்கும்போதே தேங்காய் பூவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயிகள் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதில் லட்சக்கணக்கில் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து அதனை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பெருமளவு அனுப்பப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பெருமளவு மழை பெய்ததால் லட்சக்கணக்கான தென்னங்கன்றுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்தன.

    எதிர்பார்த்த அளவு தென்னங்கன்றுகளை வாங்க வியாபாரிகள் முன் வராததால் இதை சிறு கன்றுகளாக இருக்கும்போதே தேங்காய் பூவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவ குணம் கொண்ட இந்த தேங்காய் பூவை வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து பெற்று செல்வதாக தெரிவிக்கின்றன.

    • தேங்காய் பூ கிடைக்க முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்.
    • வாகனங்களை நிறுத்தி தேங்காய் பூவை சர்க்கரையுடன் வாங்கி சாப்பிட்டு விட்டு செல்கின்றனர்.

    உடுமலை :

    தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சி ஆகும். தேங்காய் பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் உள்ளது. இளநீரில் இருக்கும் சதை பற்றினை போல ருசி இருக்கும் என்பதால் இதை சர்க்கரை உடன் கலந்து விற்பனை செய்கின்றனர்.மேலும் தேங்காய் பூவில் அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்.

    தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை கட்டுப்படுத்த இயல்கிறது. ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த மருத்துவமாகவும் பயன்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தேங்காய் பூ கிடைக்க முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்.

    பின்னர் 20 நாட்களுக்கு பின்னரே தேங்காய் குருத்து வளர ஆரம்பிக்கும். அந்தப் பக்குவத்தில் தேங்காய் உடைத்தால் தேங்காய் பூ கிடைக்கும். தென்காசியை சேர்ந்த கணேசன்என்பவர் கடந்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு மேலாக உடுமலை தாராபுரம் ரோட்டில் கோட்டமங்கலம்பகுதியில் தேங்காய் பூ விற்பனை செய்து வருகிறார் .

    அவர் இது குறித்து கூறுகையில், ஆரம்பத்தில் அதிகப்படியான விற்பனை இல்லாமல் இருந்தது. தற்போது தேங்காய் பூவின் மகத்துவம் தெரிய வந்துள்ளதால் வாகனங்களில் செல்வோர் அங்கு வாகனங்களை நிறுத்தி தேங்காய் பூவை சர்க்கரையுடன் வாங்கி சாப்பிட்டு விட்டு செல்கின்றனர் என்று தெரிவித்தார்.

    ×