search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Curiosity"

    • திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீலஸ்ரீசுப்ரமணிய தேசிகர் ஜீவ அதிர்ஷ்டானம் எனும் சித்தர் கோவில் உள்ளது.
    • த்தர் யார் என்பது குறித்து அறிந்து கொள்ள பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் மேற்கு மாட வீதியில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீலஸ்ரீசுப்ரமணிய தேசிகர் ஜீவ அதிர்ஷ்டானம் எனும் சித்தர் கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பொரு ட்செலவில் பக்தர்களின் பங்களிப்புடன் மகா மண்டபம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதற்காக நேற்று காலை பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு ஜீவசமாதி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பள்ளம் தோண்டும் பணியை நிறுத்திவிட்டு ஜீவசமாதிக்கு பூஜை செய்ய ஆரம்பித்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது.

    ஏராளமான சிவனடியார்கள், சிவ தொண்டர்கள் அங்கு குவிந்தனர். இங்கு சுப்ரமணிய தேசிகர் சமாதியும், அதே வளாகத்தில் திருவதிகை குமாரசாமி தம்பிரான் எனும் சடைச்சாமியார் ஜீவசமாதியும் உள்ளது. மேலும் சிவஞான தம்பிரான் சுவாமிகள், குண்டலபரதேசி சுவாமி ஆகிய சித்தர்களின் ஜீவ சமாதிகளும் இங்கு உள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு ஜீவசமாதி இருந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இந்த ஜீவசமாதி எந்த காலத்தை சேர்ந்தது. இங்கு ஜீவ சமாதி நிலையில் உள்ள சித்தர் யார் என்பது குறித்து அறிந்து கொள்ள பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த ஜீவசமாதிக்கு கல்வெட்டு ஆராய்ச்சி யாளர்கள், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ய கோவில் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளது.

    • ஒன்றை பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல.
    • சிந்திக்க துவங்கியதால் தான் இறைவன் உருவெடுத்தார்.

    திருப்பூர்:

    ரவுத்திரம் வாசகர் வட்டம் சார்பில், வாழ்வே ஒரு மந்திரம் நூல் அறிமுக விழா திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. இதில் இறைவன் இருப்பது எங்கே? எனும் தலைப்பில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசிய தாவது:-

    ஒன்றை பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல. அவற்றை வேண்டுபவர் வேண்டுமென்ற நேரத்தில் திருப்பி தருவது தான் வாழ்க்கை. இரு கலைகளையும், நிலைகளையும் கொண்டது வாழ்க்கை. நாம் பிறந்தது முதல் பெற்றோரிடம் பெறுகிறோம். அவர்கள் வாழ கடைசியாக நம்மால் இயன்றதை தருகிறோம். தரவேண்டும். அதுவே அறம்.சாகும் வரை ஒருவர் பெற்றுக்கொண்டு மட்டுமே இருந்தால் அவர் வாழ்வதில் அர்த்தமில்லை. எண்ணம், செயலில் அவரவர் பாதையில் பயணிக்க வேண்டும். சாதி, மதம், இனத்தால் நம் பிரிந்து நிற்கிறோம். ஆனால்தமிழ் மொழியால் நாம் இணைந்திருக்கிறோம். அனைவரும் மனிதர் என்பதை உணர்ந்திருக்கிறோம். 700 கோடி மக்களை ஒன்றாக இணைப்பது மொழி.மதத்துக்கும், ஆன்மிகத்துக்கும் உள்ள வித்தியாசம் புரிந்து கொள்ள வேண்டும். மதம் மனிதனை பிரிக்கும். ஆன்மிகம் அரவணைக்கும். நம் அறிவை வளர்க்க, புத்தக வாசிப்பும், தெரிந்து கொள்ளும் ஆர்வமும் வேண்டும்.

    உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் நம்மை காண்பதும், நம்மில் காண்பதும் தான் ஆன்மிகம். ஆதி மனிதனுக்கு வியப்பும், அச்சமும் ஏற்பட்ட விடை காண முடியாத சில கேள்விகள் தோன்றின. அப்போது, நம்மை மீறியும் ஒரு சக்தி இருக்கிறது என்பதை அவனே எண்ணத்தோன்றினான். அதுவே வேதங்களாகவும், உபநிடதங்களாகவும் மாறி கடவுள் உருவாக அடித்தளமாக அமைந்தது. சிந்திக்க துவங்கியதால் தான் இறைவன் உருவெடுத்தார்.இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

    • நீண்ட தூர ெரயில்களுக்கான முன்பதிவு, 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
    • ஒரே நாளில் 6.24 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.

    திருப்பூர்:

    வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதி தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரத்துக்கான (அக்டோபர் 21 - 23)ெரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

    திருப்பூரில் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பயணிக்க, வடமாநிலத்தினர் அதிக அளவு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இது குறித்து ெரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பயணிக்க வடமாநிலத்தினர் அதிக ஆர்வம் காட்டினர்.ராஜ்கோட், பாட்னா, ஜெய்ப்பூர், அகமாதபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். வட மாநிலங்களுக்குப் பயணிக்கும் நீண்ட தூர ெரயில்களுக்கான முன்பதிவு, 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. அதே நேரம் நாகர்கோவில், திருநெல்வேலி, சென்னை, திருவனந்தபுரம் செல்வதற்கான 30 சதவீத இடங்கள் கூட இன்னமும் நிரம்பவில்லை.தமிழகத்திற்குள்ளான ெரயில் டிக்கெட் முன்பதிவில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கடந்த, 23ந்தேதி, 1,011 பேர் டிக்கெட் முன்பதிவுக்கு வந்தனர். ஒரே நாளில் 6.24 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது என்றனர்.

    • சிறப்புத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
    • நிலையான விலை காரணமாக விவசாயிகள் லாபம் பெற்றனர்.

    உடுமலை:

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டு வந்தது.பி.ஏ.பி., மண்டல பாசனத்தில் தண்ணீர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல், விலை வீழ்ச்சி ஆகிய காரணங்களால் பருத்தி சாகுபடியை விவசாயிகள் கைவிடத்துவங்கினர்.கடந்த 2000ம் ஆண்டுக்குப்பிறகு, பருத்தி சாகுபடி முற்றிலுமாக கைவிடப்பட்டு, மக்காச்சோள சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரித்தது.

    பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்புத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், கடந்த 2008ல் நூற்பாலை நிர்வாகத்தினர் ஒப்பந்த சாகுபடி முறையில் பருத்தி சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஊக்கமளித்தனர்.அந்த ஆண்டு பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு 100 ஏக்கர் பரப்பு வரை பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.பின்னர், மிக நீண்ட இழை பருத்தி மற்றும் நீண்ட இழை பருத்தி ரகங்களுக்கு நல்ல விலை கிடைக்க தொடங்கியது.இது விவசாயிகளை பருத்தி சாகுபடியை நோக்கி திரும்ப செய்தது.கடந்த 2009ல் உடுமலை பகுதியில் பரவலாக 200 நாட்கள் வயதுடைய மிக நீண்ட இழை பருத்தி, 150 நாட்கள் வயதுடைய நீண்ட இழை பருத்தி ரகம் பயிரிடப்பட்டு ஏக்கருக்கு 15 குவிண்டால் வரை விளைச்சல் கிடைத்தது.

    மிக நீண்ட இழை பருத்திக்கு ஒரு குவிண்டாலுக்கு 9 ஆயிரம் ரூபாயும், நீண்ட இழை பருத்தி 6 ஆயிரம் ரூபாயும் விலை கிடைத்தது. நிலையான விலை காரணமாக விவசாயிகள் லாபம் பெற்றனர்.கடந்தாண்டு பருத்தி சாகுபடி பரப்பு குறைவாகவே இருந்தது. ஆனால்அனைத்து ரக பருத்திக்கும் நல்ல விலை கிடைத்தது. இதனால் விவசாயிகள் ஆர்வம் பருத்தி சாகுபடிக்கு அதிகரித்துள்ளது.காரிப் பருவம் மற்றும் வரும் ஆகஸ்டு மாதத்தில் துவங்கும் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கும், பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதற்கேற்ப வேளாண்துறை வாயிலாக பருத்தி சாகுபடிக்கு ஊக்கமளிக்க வேண்டும்.இதனால் பருத்தி வரத்து அதிகரித்து நூற்பாலைகளின் தேவையில் நிலவும் பற்றாக்குறையை சிறிது சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரைக்கும் பலன் தருகிறது.
    • ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    உடுமலை:

    உடுமலையில் தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. குறிப்பாக, தக்காளி, வெங்காயம், கத்தரி மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளே அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, விளைநிலங்களில் தோட்டக்கலைத்துறை மானிய திட்டத்தின் கீழ் பந்தல் அமைத்து, சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரைக்கும் பலன் தருகிறது. மகசூலும் கூடுதலாக கிடைக்கிறது. பாகற்காய், சுரைக்காய், புடலை, பீர்க்கங்காய் மற்றும் கோவைக்காய் இம்முறையில் சாகுபடி செய்யலாம். பாகற்காய் சாகுபடியில் பத்து அடி இடைவெளி விட்டு, மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 5 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 4 ஆயிரம் செடிகள் வரையும் நடவு செய்யலாம்.சிறந்த பராமரிப்பு மற்றும் மழை கிடைத்தால் தொடர்ந்து, 75 முதல் 90 நாட்கள் வரைக்கும், காய்ப்பு இருக்கும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    ×