என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகற்காய் சாகுபடி"

    • விவசாயிகள் பந்தல் முறையில் பீர்க்கன், புடலை, பாகல் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.
    • பந்தல் முறையில் விளைந்த காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும் விலையும் உள்ளது.

    உடுமலை :

    உடுமலை, தளி, அமராவதி பகுதியில் கிணறு, ஆழ்குழாய் கிணறு திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையை நீராதாரமாக கொண்டு கத்தரி, அவரை வெண்டை, தர்பூசணி, வெள்ளரி, அவரை, புடலை உள்ளிட்ட காய்கறிகள் சுழற்சி முறையில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    ஒரு சில விவசாயிகள் பந்தல் முறையில் பீர்க்கன், புடலை, பாகல் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- பந்தல் முறையில் சாகுபடி செய்வதற்காக முதலில் 5 அடி உயரமுள்ள கற்கள் நடப்பட்டு அதை ஒன்றுடன் ஒன்றை இணைக்கும் வகையில் கம்பிகளை கொண்டு இணைப்பு ஏற்படுத்த வேண்டும். பின்னர் பீர்க்கன், புடலை, பாகல் உள்ளிட்டவற்றை நடவு செய்து கொடி படர்ந்த பின்பு அதை கயிற்றால் கட்டி பந்தல் போன்ற அமைப்பை ஏற்படுத்து வோம்.

    இந்த முறையில் செடிகள் பராமரிப்பு, உரமிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், மருந்து தெளித்தல் உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ளலாம். காய்களும் நிலத்தில் தொடாது என்பதால் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். காய் களைபறிப்பதும் எளிது. பொதுமக்களும் காய்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். பந்தல் முறையில் விளைந்த காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும் விலையும் உள்ளது.

    இதனால் பந்தல் முறையில் சாகுபடி செய்வதை உற்சாகத்தோடு மேற்கொள்கிறோம். இதற்காக ஒரு முறை முதலீடு செய்தாலே போதுமானது. அதில் ஆண்டுக்கணக்கில் நிலையான பலனை பெறலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரைக்கும் பலன் தருகிறது.
    • ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    உடுமலை:

    உடுமலையில் தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. குறிப்பாக, தக்காளி, வெங்காயம், கத்தரி மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளே அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, விளைநிலங்களில் தோட்டக்கலைத்துறை மானிய திட்டத்தின் கீழ் பந்தல் அமைத்து, சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரைக்கும் பலன் தருகிறது. மகசூலும் கூடுதலாக கிடைக்கிறது. பாகற்காய், சுரைக்காய், புடலை, பீர்க்கங்காய் மற்றும் கோவைக்காய் இம்முறையில் சாகுபடி செய்யலாம். பாகற்காய் சாகுபடியில் பத்து அடி இடைவெளி விட்டு, மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 5 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 4 ஆயிரம் செடிகள் வரையும் நடவு செய்யலாம்.சிறந்த பராமரிப்பு மற்றும் மழை கிடைத்தால் தொடர்ந்து, 75 முதல் 90 நாட்கள் வரைக்கும், காய்ப்பு இருக்கும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    ×