search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிசி"

    • சினிமாவில் வருவது போல் டெம்போவை அதிகாரிகள் துரத்தி பிடித்தனர்
    • தக்கலை வழியாக கேரளாவுக்கு டெம்போவில் ரேசன் அரிசி கடத்தபடுவதாக தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் இருந்து தக்கலை வழியாக கேரளாவுக்கு டெம்போவில் ரேசன் அரிசி கடத்தபடுவதாக தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமையில் ஊழியர்கள் தக்கலை அருகே இரவிபுதூர்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத் திற்கிடமாக ஒரு டெம்போ வைக்கோல் ஏற்றிவந்தது. அதனை அதிகாரிகள் கை காட்டி நிறுத்தினர். ஆனால் டெம்போ நிற்காமல் வேகமாக சென்றது.

    உடனே அதிகாரிகள் அந்த டெம்போவை பின் தொடர்ந்து துரத்தி சென்ற னர். மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மீது சென்றபோது டிரைவர் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார். பின்னர் டெம்போவை சோதனை செய்த போது அதில் வைக்கோல் கட்டுகளுக்கு அடியில் நூதனமாக மறைத்து சுமார் 4 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கேர ளாவுக்கு கடத்துவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரேசன் அரிசியையும், டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்த ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சினிமாவில் வருவது போல் அதிகாரிகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று கடத்தல் வாகனத்தை பிடித்தது அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
    • செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    நில ஒருங்கிணைப்பு மசோ தாவை திரும்ப பெற வேண்டும், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டும், பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த நிலக்கடலை, உளுந்து, பயறு, எள் பயிர்க ளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.

    இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், ஒன்றிய துணை செயலாளர் பாலகுரு, பொருளாளா் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா கேட்டறிந்தனர்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு ஆகிய கிராமங்களில் ரூ16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர் மீட்பு மையங்கள் அமைய இருக்கும் இடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பாக கொள்ளிடம் மற்றும் குத்தாலம் ஆகிய இரண்டு ஒன்றிய குழு தலைவர்களுக்கு தலா ரூ 12.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் வழங்குவதற்கான சாவிகளை வழங்கி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் பெற்றுக்கொண்டனர்.

    கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அனுமந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடைக்கு சென்ற பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சட்டபேரவை உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா.முருகன்,சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா,வட்டாட்சியர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மஞ்சுளா,ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர்,அரசு அதிகாரிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரவைக்காக நெல் அனுப்பப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி, 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் 1,250 டன் அரிசி மூட்டைகள் வீதம் ஏற்றப்பட்டு தூத்துக்குடி மற்றும் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • காட்டுபட்டி பகுதியில் 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யபட்டது
    • இதுகுறித்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் மாந்தங்குடி காட்டுபட்டி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்படி காட்டுபட்டி பகுதியில் ஒரு குடோனில் சுமார் 7 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, சுமார் 2,500 கிலோ பச்சரிசி, சுமார் 3 ஆயிரம் கிலோ கருப்பு அரிசி, சுமார் 700 கிலோ உடைக்கப்பட்ட குருணை அரிசி ஆகியவற்றை கலந்து விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் சுமார் 13 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை சேகரிக்க பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினர். இதுகுறித்து புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • துண்டு பிரசுரங்களை குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்யப்பட்ட உணவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது.

    செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை அரவை செய்த அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலந்து தயார் செய்யப்படுகிறது.

    இதன் மூலம் ரத்த சோகையை தடுக்கலாம். ரத்த உற்பத்திக்கும், நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் செறிவூட்டப்பட்ட அரிசி உதவுகிறது.

    இந்த நிலையில் இன்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி செறிவூட்ட ப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயரான உணவை சாப்பிட்டார்.

    இதனைத் தொடர்ந்து செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்ய ப்பட்ட உணவுகள் பொதுமக்களுக்கு வழங்க ப்பட்டு பரிமாறப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரேசன் அரிசியை மர்ம நபர்கள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
    • அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    அதன்படி திருக்குவளை அருகே வடுவூர் நல்லமுத்துமாரியம்மன் கோவில் பின்புறத்தில் ரேஷன் அரிசி நிரப்பிய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் திலகாவுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் சம்பவ இடத்திற்கு வடிரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது ரேசன் அரிசியை மர்ம நபர்கள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து சுமார் 50 வெள்ளை நிற சாக்குகளில் நிரப்பப்பட்டிருந்த ரேசன் அரிசியை கைப்பற்றி டிராக்டர் மூலமாக தமிழ்நாடு நுகர்பொருள் செயல்முறை வட்டக் கிடங்கிற்கு கொண்டு வந்து ஆய்வாளர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து குடிமை பொருள் குற்ற புலனாய்வு ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார் ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது எனவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    டிரைவர் உள்பட 2 பேர் கைது

    நாகர்கோவில், மார்ச்.14-

    குமரி மாவட்டம் வழியாக கேரளா வுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். வருவாய் துறை அதிகாரிகளும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமையிலான போலீசார் இன்று காலை இருளப்பபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த டெம்போவை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் டெம்போ நிற்கவில்லை. வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் தங்களது வாகனம் மூலமாக டெம்போவை துரத்தி சென்று பீச்ரோடு சந்திப்பில் வைத்து மடக்கிப் பிடித்தனர். டெம்போவை போலீஸ் மடக்கியதும் டெம்போவில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். எனினும் துரிதமாக செயல்பட்ட போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்தனர்.

    இதைத் தொடர்ந்து டெம்போவை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 2,100 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது தெரியவந்தது.

    அந்த ரேஷன் அரிசியை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னர் டெம்போ டிரைவரான கோட்டாரை சேர்ந்த தளபதி (வயது 52) என்பவரையும், தப்பி செல்ல முயன்ற கிளினரான பன்னீர் செல்வம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ரேஷன் அரிசியை டெம்போவோடு சேர்த்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.
    • பாரம்பரிய அரிசி, சிறுதானியங்களில் உணவு தயாரித்து வழங்கும் போராட்டம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிரான பேரியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார்.

    ஒருங்கிணைப்பாளர்கள் தனபதி , வேணு ராஜசேகர், தங்க குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் , செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.

    இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்த மாதம் 15 ஆம் தேதி சத்து மிகுந்த பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் உணவுகளை தயாரித்து வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராட்டம் நடத்த வேண்டும்.

    பாரம்பரிய அரிசி சிறுதானியங்களை கட்டுபடியான விலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மேல்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் வேலுமணி, ரவிச்சந்திரன், பாரதிதாசன், விக்னேஷ், அரு சீர் தங்கராசு, அருண் சுபாஷ், செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • இலுப்பூர் அருகே ரேஷன் கடையில் வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்
    • மாவட்ட வழங்கல் அலுவலர் சரவ–ணன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் துரை–ராஜ், உள்ளிட்டோர் அரிசிகளை பார்வையிட்டு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி செறிவூட்டப்பட்ட அரிசி என்று பொதுமக்களிடம் எடுத்து–கூறி அதன் நன்மைகளை விளக்கி கூறினர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே வெட்டுக்காடு ஊராட்சி போலம்பட்டியில் ேரஷன் கடை செயல்பட்டு வருகிறது. போலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் இந்த கடையில் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், ரேஷன் கடையில் நேற்று இலவச அரிசி வழங்கப்பட்டது. அரிசியை பொதுமக்கள் வாங்கிச் சென்று பார்த்த–போது அரிசியில் மற்றொரு அரிசியைபோல் ஏதோ பொருள் கலந்திருப்பது தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து ரேஷன் கடையில் வாங்கிய அரி–சியை மீண்டும் பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியரிடம் கொண்டு காண்பித்து இது–குறித்து கேட்டுள்ளனர். அப்போது ஊழியர் இது–குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வழங்கல் அலுவலர் சரவ–ணன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் துரை–ராஜ், உள் ளிட்டோர் விரைந்து வந்து அரிசிகளை பார்வையிட்டு ரேஷன் கடையில் வழங்கப் பட்ட அரிசி செறிவூட்டப்பட்ட அரிசி என்றும், இது பள்ளிகளுக்கு வழங்கப்ப–டுபவை என்றும் பொதுமக்களிடம் எடுத்து–கூறி அதன் நன்மைகளை விளக்கி கூறினர். இதனால் நிம்மதியடைந்த பொது–மக்கள் அந்த அரிசியை பெற்றுச்சென்றனர்.


    • சங்ககிரியில் இருந்து கேரளாவிற்கு ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் நேற்று இரவு சங்ககிரி ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
    • ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் அங்கிருந்து தலைமறைவாகினர். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சங்ககிரி:

    சங்ககிரியில் இருந்து கேரளாவிற்கு ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் நேற்று இரவு சங்ககிரி ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரெயில் நிலைய நடைமேடை பகுதியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. போலீசார் வருவதை பார்த்ததும் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் அங்கிருந்து தலைமறைவாகினர். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ரேஷன்அரிசி மூட்டைகள் சங்ககிரி நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டன. ரெயிலில் ரேஷன்அரிசி கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அரவேணு

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதன் அடிப்படையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மேனகா, ஏட்டு சுமதி, முருகேசன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு மினிலாரி வந்தது. அதனை போலீசார் மறித்து சோதனை நடத்தினர்.

    அப்போது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி அதிகளவில் இருந்தது.

    இதையடுத்து டிரைவர் ஜோசப் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கீழ் கோத்தகிரி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து கூடுதல் விலை கொடுத்து அரிசிகளை வாங்கி, மேட்டுப்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.

    மேலும் கடத்தப்பட்ட 2 டன் அரிசியை பறிமுதல் செய்து, ஊட்டியில் உள்ள அரிசி கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    ×