என் மலர்
உள்ளூர் செய்திகள்

50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
- ரேசன் அரிசியை மர்ம நபர்கள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
- அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதன்படி திருக்குவளை அருகே வடுவூர் நல்லமுத்துமாரியம்மன் கோவில் பின்புறத்தில் ரேஷன் அரிசி நிரப்பிய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் திலகாவுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் சம்பவ இடத்திற்கு வடிரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது ரேசன் அரிசியை மர்ம நபர்கள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சுமார் 50 வெள்ளை நிற சாக்குகளில் நிரப்பப்பட்டிருந்த ரேசன் அரிசியை கைப்பற்றி டிராக்டர் மூலமாக தமிழ்நாடு நுகர்பொருள் செயல்முறை வட்டக் கிடங்கிற்கு கொண்டு வந்து ஆய்வாளர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து குடிமை பொருள் குற்ற புலனாய்வு ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார் ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது எனவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.






