search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பொன்முடி"

    • விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து கபடி வீரர்களுடன் கபடி விளையாடினார்.

    விழுப்புரம்:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து கபடி வீரர்களுடன் கபடி விளையாடினார்.

    இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., லோகநாதன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கவுதமசிகாமணி இன்று ஆஜராகவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரியில் இருந்து அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., லோகநாதன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் 5 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

    குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே இறந்து விட்டார். அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கவுதமசிகாமணி இன்று ஆஜராகவில்லை. அவர் ஆஜராகாததற்காக காரணத்தை அவரது வக்கீல்கள் மனுவாக தாக்கல் செய்தனர்.

    தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூரணி அம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்படவில்லை.
    • வழக்கு தொடர்பாக செப்டம்பர் 7-ம் தேதிக்குள் பதில் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறை, மற்றும் பொன்முடிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1 கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. பிறகு அந்த வழக்கு விசாரணை வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்தது. கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி நீதிபதி வசந்த லீலா இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் பொன்முடி, அவரது மனைவி இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் போலீசார் தாக்கல் செய்யாததால் வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் கோர்ட்டு தீர்ப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கருதி சென்னை ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து உள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி விடுதலை செய்யப்பட்ட வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளேன். மேலும் வழக்கு தொடர்பாக செப்டம்பர் 7-ம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் பொன்முடி பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

    • சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
    • நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று 124-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1 கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு வழக்குப்பதிவு செய்தார்.

    இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. பிறகு அந்த வழக்கு விசாரணை வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்தது. கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி நீதிபதி வசந்த லீலா இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் பொன்முடி, அவரது மனைவி இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் போலீசார் தாக்கல் செய்யாததால் வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை தற்போது ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.

    அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் கோர்ட்டு தீர்ப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கருதி சென்னை ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து உள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று 124-வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    • பொது பாடத்திட்டத்தை கல்லூரி முதல்வர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
    • உயர்கல்வியின் வளர்ச்சியே எங்களுக்கு நோக்கம்.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பொது பாடத்திட்டத்தை கல்லூரி முதல்வர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பொது பாடத்திட்டத்தால் எந்த பிரச்சனையும் இல்லை.

    அனைவரையும் ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்பட்டது. பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

    மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும். இதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. உயர்கல்வியின் வளர்ச்சியே எங்களுக்கு நோக்கம்.

    கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுத்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயர் கல்வி நிறுவனங்களிடையே இடமாறுதல் கோரும் வகையில் மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
    • இந்தப் புதிய மாதிரி பாடத்திட்டத்தால் பல்கலை.கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.

    சென்னை:

    உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இளநிலை பட்டப்படிகளில் 5 பாடப்பிரிவுகள் இடம்பெறும்.

    இந்தப் புதிய மாதிரி பாடத்திட்டத்தால் பல்கலை மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆசிரியர்களின் பணிநிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மாதிரி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதாகும்.

    இதன்படி, முக்கிய பாடங்களையும் விருப்ப பாடங்களையும், செய்முறை பயிற்சிகளையும் பருவங்களுக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். பல்கலைகளும், தன்னாட்சி கல்லூரிகளும் தங்களின் விருப்பத்திற்கேற்ப மதிப்பீடுகளில் மாற்றங்கள் செய்து கொள்ள உரிமை உண்டு.

    தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோராகும் விதமாக, திறன் மேம்பாட்டு அம்சங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

    மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி பாடத்திட்டம் தன்னாட்சிக்கு பாதகமில்லாமல் உருவாக்கப்பட்டு, அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்தப்பட்ட இரு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    பாடத்திட்டம் தொடர்பாக ஆகஸ்ட் 2-ம் தேதி அனைத்து தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    இதில், ஏதேனும் நடைமுறை சிக்கல் இருந்தால், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொது பாடத்திட்டத்தில் எந்த தவறும் கிடையாது.
    • கல்வி தரத்தை மேம்படுத்த, துறை முதன்மை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பொது பாடத்திட்டத்தில் எந்த தவறும் கிடையாது. தமிழக கல்வி கொள்கை விரைவில் அமலுக்கு வரும்.

    புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்வோம். அரியர் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் பொருந்தாது.

    கல்வி தரத்தை மேம்படுத்த, துறை முதன்மை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

    நிரந்தர பதிவாளர்கள், நிரந்தர தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் துணைவேந்தர்களின் கருத்துக்களை அமைச்சர் பொன்முடி கேட்டறிந்தார்.

    இந்த கூட்டத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்தும் விளக்கி கூறப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒவ்வொரு கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி சில ஆலோசனைகளை வழங்கினார். பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சர் பொன்முடி வீட்டில் அரசியல் காரணத்திற்காக அமலாக்கத்துறை சோதனை செய்யவில்லை.
    • அரசியல் கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆடிட்டர் ரமேஷ் நியாயமாக செயல்படக்கூடியவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியாயம் கேட்பவர். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவர் கொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளாகியும் இதுவரை உண்மையான கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது

    இந்த விஷயத்தில் தமிழ்நாடு காவல்துறை சரியாக செயல்படவில்லை. முதலமைச்சர் படம் சித்தரிக்கப்பட்டால் உடனடியாக காவல்துறை கைது செய்கிறது. செந்தில் பாலாஜி ஆபரேஷன் செய்த பிறகு அவரது போட்டோக்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த விஷயத்திலும் அவரை வெளியில் காண்பிக்காத வகையில் போலீஸ் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

    அமைச்சர் பொன்முடி வீட்டில் அரசியல் காரணத்திற்காக அமலாக்கத்துறை சோதனை செய்யவில்லை. அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி அந்த சோதனை நடந்திருக்கிறது.

    அரசியல் கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிராம நிர்வாக அதிகாரி உட்பட பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளதை காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக பொன்முடியும், கவுதம சிகாமணியும் நேற்று மாலை ஆஜரானார்கள்.
    • சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் இரவு 10.10 மணியளவில் பொன்முடியும், அவரது மகனும் அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.

    சென்னை:

    செம்மண் குவாரி மூலம் சட்டவிரோதமாக பணம் ஈட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் சென்னையில் அமலாக்கத்துறையினர் கடந்த 2 நாட்களாக சுமார் 27 மணி நேரம் விசாரணை செய்தனர்.

    நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக பொன்முடியும், கவுதம சிகாமணியும் நேற்று மாலை 3.52 மணியளவில் ஆஜரானார்கள். அவர்களை மூன்றாவது தளத்துக்கு அழைத்துச் சென்று தனித்தனியாக அறைகளில் வைத்து விசாரித்தனர்.

    சுமார் ஒன்றரை மணி நேர விசாரணைக்கு பின்னர் அமைச்சர் பொன்முடி அங்கிருந்த 5-வது தளத்தில் உள்ள விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அவரிடம் செம்மண் குவாரி மூலம் சட்ட விரோதமாக பணம் ஈட்டியது, அந்த பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தது ஆகியவற்றை பற்றி கேள்விகளை எழுப்பி பதில் பெற்றதாகத் தெரிகிறது. இருவரிடமும் தலா 100 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டதாக தெரிகிறது.

    சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் இரவு 10.10 மணியளவில் பொன்முடியும், அவரது மகனும் அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். அவர்களிடம் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு அழைப்பாணை எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்பட்டது.

    • அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் 2 நாள் பெங்களூரு சென்ற நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

    அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார். நேற்று மாலை விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி மீண்டும் நேற்று மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் விசாரணைக்கு ஆஜரானார்.

    சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்று, அமைச்சர் பொன்முடி, எம்.பி. கவுதம சிகாமணி இரவு வீட்டிற்கு புறப்பட்டனர்.

    இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்தார்.

    எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் 2 நாள் பெங்களூரு சென்ற நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

    முதலமைச்சர் பெங்களூருவில் இருந்தபோது தொலைபேசியில் அமைச்சர் பொன்முடியுடன் பேசிய நிலையில் தற்போது சந்தித்துள்ளார்.

    • சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்றது.
    • மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பவில்லை என அமலாக்கத்துறை தகவல்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணி முதல் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது.

    சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்றது.

    விசாரணையின்போது அமைச்சர் பொன்முடியிடம் ஆம், இல்லை என்ற அடிப்படையில் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    மேலும், சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பியுமான கௌதம சிகாமணியிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது.

    இதையடுத்து, அமைச்சர் பொன்முடி, எம்.பி. கௌதம சிகாமணி வீட்டிற்கு புறப்பட்டனர்.

    இதற்கிடையே, அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 7 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.81.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

    ரூ. 13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    மேலும், அமைச்சர் பொன்முடியின் வங்க கணக்கில் இருந்த 41.9 கோடி ரூபாய் வைப்பு நிதி முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

    ×