search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பொன்முடி"

    • சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம்.
    • பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், அனைத்து மக்களும் கோவிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரங்கியூர், ஏனாதிமங்கலம், சிறுவானூர், சிறுமதுரை, ஏமப்பூர், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர், சின்னசெவலை, டி.எடையார் பகுதியில் தேர்தல்பிரசாரம் மேற்கொண்டார்.

    அவரது சொந்த ஊரான டி.எடையார் பகுதியில் கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்த போது பேசிய அமைச்சர் பொன்முடி, ஒரு காலத்தில் பெண்கள் படிக்க நினைத்தாலும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் இன்று நீங்கள் படிக்காவிட்டாலும் உங்கள் குழந்தைகளை படிக்க வேண்டும் என கண்டித்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கு காரணம் திராவிடம்.

    ஏனெனில் பெண்கள் படிக்க வேண்டும் என்பதைத்தான் பெரியாரும் அண்ணாவும் திரும்பத் திரும்ப இந்த சமூகத்திற்கு கூறினார்கள். சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம். பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், அனைத்து மக்களும் கோவிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம்.

    ஆனால் எல்லோரும் சமம் என்பதை ஏற்காத பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.க. சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான கட்சி. அதனால் தான் மோடி யாரும் வளரக்கூடாது என எண்ணுகிறார். குறிப்பாக தமிழர்கள் முன்னேற அவருக்கு விருப்பமில்லை. எனவே சென்ற முறை எனக்கு உதயசூரியனில் வாக்களித்தது போல இந்த முறை என் சகோதரர் ரவிகுமாருக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் இருந்த பெண்களிடம் பேசினார். அதன் பின்னர் பிரசார வாகனத்தில் பானை சின்னம் பாடல் இசைக்கப்பட்டபோது அமைச்சர் பொன்முடி நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது.

    • ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்கிறது.
    • தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளதைத்தான் அ.தி.மு.க. காப்பியடித்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசியதாவது:-

    இந்த தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு பெற வேண்டும்.

    அதேநேரத்தில் கடந்த 10 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். 10 ஆண்டுகளில் பா.ஜனதா எதையும் செய்யாத நிலையில் 3 ஆண்டுகளில் சொன்னதை செய்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்கிறது. சர்வாதிகாரியாக வேண்டுமென்று மோடி செயல்படுகிறார். தமிழன் தமிழன் என்று தமிழகம் வந்தால் பேசும் பிரதமர் மோடி, குடியுரிமை சட்டம் கொண்டு வந்து இலங்கையில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாத செயலைத்தான் அவர் செய்கிறார்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்தபோதே மார்ச் 19-ந் தேதியே சபாநாயகர், என்னை சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார். அதன் பிறகும் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை. கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு நபராக உள்ளார். பதவிப்பிரமாணம் செய்யவில்லை என்றால் கவர்னர் மீது நடவடிக்கை எடுப்பேன் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கூறியதை தொடர்ந்துதான் எனக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    அமலாக்கத்துறையை கையில் வைத்துக்கொண்டு முதலமைச்சரையே கைது செய்துள்ளவர்கள்தான் பா.ஜனதா அரசு. அமலாக்கத்துறையை அனுப்பித்தான் பா.ஜனதாவிற்கு ரூ.2,500 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளதைத்தான் அ.தி.மு.க. காப்பியடித்துள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது கூட நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்துவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் டாக்டர் பொன்.கவுதம சிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், விழுப்புரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் பொன்முடி பயணித்த காரில் தேசியக்கொடி அகற்றப்பட்டது.
    • விசாலாட்சிக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

    மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கில் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொன்முடியும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்து சேர்த்துள்ளனர். அதனால், அவர்களை விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் என தெரிவித்தார்.

    அதன்படி, இன்று தண்டனை விவரம் வழங்கவுள்ள நிலையில், சைதாப்பேட்டை இல்லத்தில் இருந்து அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராக புறப்பட்டனர். அப்போது அமைச்சர் பொன்முடி பயணித்த காரில் தேசியக்கொடி அகற்றப்பட்டது.


    தீர்ப்பை வாசித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், விசாலாட்சிக்கும், பொன்முடிக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

    • ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் என நீதிபதி தெரிவித்தார்.
    • சைதாப்பேட்டை இல்லத்தில் இருந்து அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராக புறப்பட்டனர்.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

    மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கில் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொன்முடியும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்து சேர்த்துள்ளனர். அதனால், அவர்களை விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் என தெரிவித்தார்.

    அதன்படி, இன்று தண்டனை விவரம் வழங்கவுள்ள நிலையில், சைதாப்பேட்டை இல்லத்தில் இருந்து அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராக புறப்பட்டனர். அப்போது அமைச்சர் பொன்முடி பயணித்த காரில் தேசியக்கொடி அகற்றப்பட்டு இருந்தது. காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்படும் என அறிவித்த நிலையில், அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் 10 மணியளவில் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    • ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
    • தண்டனை மட்டும் நிறுத்தி வைத்தால் பதவியில் நீடிக்க முடியாது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர்களை விடுதலை செய்கிறேன் என்று கூறியிருந்தார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்தார். அதில்:-

    பொன்முடியும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்து சேர்த்துள்ளனர். அதனால், அவர்களை விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் நீடிக்க முடியாது. பதவிகள் உடனடியாக பறிக்கப்படும். மேலும் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது. மேல்முறையீட்டு மனுவில் ஒட்டுமொத்த தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டால் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும். தண்டனை மட்டும் நிறுத்தி வைத்தால் பதவியில் நீடிக்க முடியாது. சட்டப்பிரிவு 8(1)-ன் படி குறைந்த அளவு அபராத விதித்தால் கூட பதவி பறிக்கப்படும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    உதாரணமாக, மோடியை குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதும் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டில் ஒட்டுமொத்த தீர்ப்பையும் நிறுத்தி வைக்கப்பட்டதால் அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிப்பு குறித்து நாளை மறுநாளில் வெளியாகும் தண்டனை விவரங்களுக்கு பிறகே தெரியவரும்...

    • ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார்.
    • தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடியோ, ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஊழலை மட்டுமே தனது அரசியல் பிழைப்பாகக் கொண்டு, எதிர்ப்புக் குரல்களை அதிகார பலத்தின் மூலம் அடக்கிய ஒரு போலியான சித்தாந்தம், இன்று சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது.

    ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடியோ, ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

    தென் தமிழகத்தில், மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த துயரமான வேளையில், தமிழக முதல்வரோ, ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்குச் சென்றிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொன்முடி மீது போலீஸ் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டன.
    • பொன்முடி, விசாலாட்சி அகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.

    இவரது மனைவி விசாலாட்சி. இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2015-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சுந்தரமூர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.1 கோடியே 36 லட்சத்திற்கு மேல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. ஆந்திர மாநில பத்திர பதிவுத்துறை தாசில்தார் மற்றும் வங்கி அதிகாரிகள் உட்பட 39 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பொன்முடி மீது போலீஸ் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டன.

    இதை பொன்முடி தரப்பினர் மறுத்தனர். இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர்களை விடுதலை செய்கிறேன் என்று கூறியிருந்தார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அவர் பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் 4 ஆண்டுகள் தாக்கல் செய்த வருமான வரித்துறை கணக்கின் அடிப்படையில், அவர்களை விடுதலை செய்து கீழ் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதை ஏற்க முடியாது. இவ்வாறு வருமான வரித்துறைக்கு அளித்த கணக்கின் அடிப்படையில் குற்றவியல் வழக்கில் ஒருவரை விடுதலை செய்ய முடியாது.

    மேலும் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பொன்முடி அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக கணவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவிக்கும்போது, அதற்கு மனைவியும் பொறுப்பாவாரா? என்ற கேள்வி எழுகிறது.

    ஆனால், அவர் பெயரிலும் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதால், அதற்கு அவரும் பொறுப்பாவார் என்று முடிவு செய்கிறேன். லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கில் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொன்முடியும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்து சேர்த்துள்ளனர். அதனால், அவர்களை விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

    • செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
    • பொன்முடி இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் குவாரிகளில் மணல் அள்ளியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக 2012-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பொன்முடி, மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஏற்கனவே ஆஜரானார். அப்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை முடிவில் அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறையினர் கைது செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் விசாரணைக்கு பிறகு பொன்முடியை அமலாக்கத்துறையினர் விடுவித்தனர்.

    இந்த நிலையில் செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இதை ஏற்று பொன்முடி இன்று காலை 10.45 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக மீண்டும் அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அமலாக்கத்துறையினர் தாங்கள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையிலேயே பொன்முடியிடம் 2-வது முறையாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில், தமிழக அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
    • கவுதம சிகாமணி எம்.பி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.

    சென்னை:

    தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில், தமிழக அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

    அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

    இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடியும், சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

    செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

    இந்தச் சூழ்நிலையில், இந்த சட்டவிரோத பணபரி மாற்ற வழக்கு தொடர்பாக, அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தி.மு.க. எம்.பி.யுமான கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ். பிஸ்னஸ் கவுஸ் நிறுவனம் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் ஆகஸ்டு மாதம் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த குற்றப்பத்திரிகை எண்ணிடப்பட்டு, கோப்புக்கு எடுத்த முதன்மை அமர்வு நீதிபதி, இந்த வழக்கை 12 -வது கூடுதல் செசன்சு கோர்ட்டு மாற்றி உத்தரவிட்டார்.

    இதனையடுத்து இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம சிகாமணி எம்.பி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். பின்னர் அவர்களுக்கு குற்றபத்திரிகை நகல்கள் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு குற்ற பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி டிசம்பர் 22-ந்தேதி தள்ளி வைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது.
    • மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

    இந்நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்க ஒப்புதல் வழங்காத கவர்னரை கண்டித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
    • சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் ஏன் கொடுக்க முடியாது என்ற காரணத்தை கவர்னர் விளக்க முடியுமா?

    சென்னை:

    மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

    இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாளை நடைபெற உள்ள மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை கவர்னர் ஏற்கவில்லை.

    கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் அதிகாரம் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவுக்கு உள்ளது.

    சங்கரய்யா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் ஏன் கொடுக்க முடியாது என்ற காரணத்தை கவர்னர் விளக்க முடியுமா?

    அரசு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடுவதுதான் கவர்னரின் வேலை.

    பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக கவர்னர் செயல்படுகிறார். மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் கவர்னர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

    • தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் மீது கவர்னருக்கு உண்மையிலேயே அக்கறை இல்லை.
    • நீட் தேர்வு வேண்டாம் என்பதில் மாணவ-மாணவிகள் தெளிவுடன் உள்ளனர்.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் தமிழக கவர்னர் கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் தனது கல்லூரி படிப்பையே இழந்தவர் அவர். சிறையிலும் இருந்துள்ளார்.

    எனவே சங்கரய்யா பற்றிய வரலாற்றை தெரிந்து கொண்டாவது கவர்னர் நிச்சயமாக கையெழுத்திடுவார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் மீது கவர்னருக்கு உண்மையிலேயே அக்கறை இல்லை. அப்படி அக்கறை இருந்தால் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் அவர் கையெழுத்திட வேண்டும்.

    நீட் தேர்வால் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என்பதில் மாணவ-மாணவிகள் தெளிவுடன் உள்ளனர். விழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவர்களிடம் நான் பேசினேன். அவர்கள் எல்லோரும் எங்களுக்கு நீட் தேர்வே வேண்டாம் என்று குரல் எழுப்பி கையெழுத்திட்டனர்.

    ஆன்லைன் மூலமாகவும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்தை போட்டு அனுப்பலாம். விளையாட்டுத்துறை அமைச்சரும் இதை அறிவித்துள்ளார்.

    50 லட்சம் கையெழுத்தையாவது வாங்கும் வகையில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் அனைவரும் கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீட் தேர்வால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதை உணர்ந்து அதற்கு மேலாக மாணவர்கள் கையெழுத்திடுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×