search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் பொன்முடி வழக்கில் மோசமான விசாரணை- நீதிபதி அதிருப்தி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அமைச்சர் பொன்முடி வழக்கில் மோசமான விசாரணை- நீதிபதி அதிருப்தி

    • தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்படவில்லை.
    • வழக்கு தொடர்பாக செப்டம்பர் 7-ம் தேதிக்குள் பதில் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறை, மற்றும் பொன்முடிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1 கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. பிறகு அந்த வழக்கு விசாரணை வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்தது. கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி நீதிபதி வசந்த லீலா இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் பொன்முடி, அவரது மனைவி இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் போலீசார் தாக்கல் செய்யாததால் வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் கோர்ட்டு தீர்ப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கருதி சென்னை ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து உள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி விடுதலை செய்யப்பட்ட வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதால் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளேன். மேலும் வழக்கு தொடர்பாக செப்டம்பர் 7-ம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் பொன்முடி பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

    Next Story
    ×