search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபாயம்"

    • சீமை கருவேல மரங்களால் மழை வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • நிலத்தடி நீரை விஷமாக மாற்றி கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் தன்மை கொண்டது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே மு.வேலாயுதம்பாளையம் கிராம பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றின் இரு கரையோரங்களிலும் ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்து பரந்து, விரிந்து ஓங்கி நின்றபடி உள்ளதால் ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் செல்லும் போது நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மேலும் நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீர் தேங்கி மேலே எழும்பி அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய விளை நிலங்களில் புகுந்து உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படும் அபாயம் சூழ்நிலை நிலவி வருகிறது.

    மேலும் சீமை கருவேல மரங்களின் வேர்கள் மண்ணில் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த மரங்களின் வேர்கள் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் தன்மை கொண்டது. மேலும் காற்று மண்டலம் முழுவதும் நச்சுத்தன்மை ஆக்கி சுற்று பகுதி முழுவதும் பரவும் ஆற்றல் கொண்டது.

    நொய்யல் ஆற்றின் இரு கரையோரங்களிலும் வளர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களால் மழை வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சீமை கருவேல மரங்களை முற்றிலும் வெட்டி அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்று விவசாயிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிநீர் குழாய் தொட்டியில் மோதி கீழே விழும் அபாயம் உள்ளது.
    • குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சி அன்னசாகரம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் வால்வுக்காக அமைக்கப்பட்ட தொட்டி யின் மூடி உடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் சாலையை கடப்பவர்கள் சாலையின் நடுவே குழி இருப்பதை அறியாமல் குடிநீர் குழாய் தொட்டியில் மோதி கீழே விழும் அபாயம் உள்ளது.

    அன்னசாகரம் சாலையை காரவோனி, மாதேமங்கலம், வெங்கடம்பட்டி, குட்டூர், எட்டியானூர், எட்டிமருத்துப்பட்டி, கொமத்தம்பட்டி, உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அசம்பாவிதங்கள் நிகழ்வ தற்கு முன் வால்வு சிலாப்பினை சீரமைத்து குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கண்டமங்கலம் ஊராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீர் களங்கிய நிலையில் சேறும் சகதிகமாக வந்தது.
    • சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கிராம ஊராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடும்பங்கள் பயன்படுத்தும் வகையில் கண்டமங்கலம் ஊராட்சி மூலம் குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கி வருகின்றனர். ‌‌ கண்டமங்கலம் ஊராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீர் களங்கிய நிலையில் சேறும் சகதிகமாக வந்தது. கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டு தெரு பகுதியில் குடிநீர் கலங்கிய நிலையில் வந்ததால் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து குடிநீர் கலங்களாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்தக் குடிநீரை பருகினால் காய்ச்சல், காலரா போன்ற கொடிய நோய்கள் வரக்கூடிய நிலை உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை ஆய்வு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
    • இருசக்கர வாகனங்கள் வழியாக செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகாமையில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் பகுதிகளில் உணவகங்கள், பூ கடைகள், நடைபாதை பழக் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இதன்காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் பூ மார்க்கெட்டில் தினந்தோறும் கிலோ கணக்கில் பூக்கள் வீணாகி அதே பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. மேலும் அந்த  பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் இருந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பூ மார்க்கெட் பகுதிகளில் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றது. மேலும் இருசக்கர வாகனங்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களையும் இந்த பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

    கடந்த சில தினங்களாக குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் சரியான முறையில் சுத்தம் செய்யாததால் தற்போது குப்பைகள் குவிந்து உள்ளன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் தற்போது துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. இது மட்டுமின்றி குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படாத காரணத்தினால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழி இல்லாமலும் இருசக்கர வாகனங்கள் வழியாக செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். ஆகையால் கடலூர் நகராட்சி அதிகாரிகள் அதிகமாக மக்கள் செல்லக்கூடிய பூ மார்க்கெட் பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி நோய் பரவும் அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடுபவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரையிலான நான்கு வழி சாலை பணிகள் மும்முரம்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் சாலைகளில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிக்கொண்டு சாகசத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், ரேசில் ஈடுபடுவதை தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இப்படி மோட்டார் சைக்கிள் ரேசில் ஈடுபடுபவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சையில் சில வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரையிலான நான்கு வழி சாலை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    இந்த சாலையில் இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ரேசில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    அதாவது சாலைகளில் மின்னல் வேகத்தில் வண்டியை ஓட்டி சென்று வீலிங் சாகசம் செய்கின்றனர். குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் இந்த சம்பவம் நடந்து வருகிறது.

    மோட்டார் சைக்கிள் முன் சக்கரத்தை அலேக்காக தூக்கியும், பின் சக்கரத்தை தூக்கியும் தீப்பொறி பறக்க வீலிங் சாகசம் செய்தனர்.

    தொடர்ந்து இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே இது போன்ற சாகச சம்பவம் நடைபெறாமல் தடுக்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கண்காணிப்பு பணியையும் பலப்படுத்த வேண்டும் என்றனர்.

    • விவசாயத்தில் ஒரு பகுதியாக மாடுகளை வளர்த்து அதன் மூலம் பால்கறந்து விற்பனை செய்கிறோம்.
    • கோமாரி நோய் தாக்குவதை தடுக்க தடுப்பூசி மருந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை மருந்தகங்கள் 102 , கால்நடை மருத்துவ மனைகள் 7 , பன்முக கால்நடை மருத்துவமனை 2, 38 கால்நடை கிளை நிலையங்களும் செயல்பாட்டில் உள்ளது . அதேபோல் மாவட்டத்தில் நாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் 3.65 லட்சம், எருமைகள் 48 ஆயிரம், வெள்ளாடுகள் 35 ஆயிரம், செம்மறி ஆடுகள் 9.80 லட்சம் என கால்நடைகளின் எண்ணிக்கை உள்ளது. மாவட்டத்தில் உள்ள 450 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மூலம் நாளொன்றுக்கு 24.34 லட்சம் லிட்டர் பால், ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு 30 பால் குளிரூட்டும் நிலையங்களில் சேமிக்கப்பட்டு பின் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதில் அவிநாசி, திருப்பூர் வடக்கு, ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம் வட்டங்கள் கால்நடைகளின் செறிவு மிகுந்த பகுதிகளாகும். இப்பகுதிகள் பொதுவாக மானாவரி நிலங்களே அதிகம் இருப்பதால், இப்பகுதி உழவர்களின் வாழ்வாதாரம் என்பது பால் உற்பத்தி, இறைச்சிக்காக ஆடு வளர்ப்பு ஆகியவற்றையே பெரிதும் சார்ந்துள்ளனர் .

    பருவ மழைக் காலங்களில் மாடுகளை கோமாரி நோய் தாக்கி உயிரிழப்பு ஏற்படும். குளிர், பனிக்காலங்களில் மற்றும் நோய் பாதித்த பகுதியிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், தடுப்பூசி போடாமல் சுகாதாரமாக கால்நடை வளர்க்காதது, நோய் பாதித்த பின்பு பிரித்து பராமரிக்காமல் இருத்தல் உள்ளிட்ட காரணிகளால் கோமாரி நோய் ஏற்படுகிறது. கலப்பின மாடுகளுக்கு அதிக அளவில் இந்நோய் பாதிப்பு அதிகம் காணப்படும். இந்த நோய் பாதிப்பினால் கால்நடைகளுக்கு காய்ச்சல், மந்த நிலை, தீவணம் உண்ணாமல், அசை போடாமல், தண்ணீர் தாகம், பால் உற்பத்தி குறைந்தும், வாயில் நுரை கலந்த உமிழ் நீர் வரும், சினை மாடுகளில் கருச்சிதைவு, நாக்கு, கால் குளம்பு ஆகிய பகுதிகளில் கொப்பளங்கள், புண்ணாக மாறும்.

    மழை காலங்களில் இந்நோய் கால்நடைகளை தாக்குவதால், ஒவ்வொரு ஆண்டும் மழை காலம் துவங்கும் முன்பே கால்நடைதுறை மூலம், கோமாரி நோய் தடுப்பூசி வழங்கப்படும். இதனால் கடந்த காலங்களில் கால்நடைகளுக்கு நோய் வருவதை முன்கூட்டியே தடுக்க முடிந்தது. இந்தநிலையில் நடப்பு ஆண்டு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பு மருந்து மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை என கால்நடைதுறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயத்தில் ஒரு பகுதியாக மாடுகளை வளர்த்து அதன் மூலம் பால்கறந்து விற்பனை செய்கிறோம். இதனால் சொற்ப அளவில்தான் வருமானம் கிடைக்கிறது. பொதுவாக மழை ஆரம்பிக்கும் முன்பே கால்நடைதுறை சார்பில் கோமாரி நோய் தடுப்பு மருந்துகளை மாடுகளுக்கு செலுத்தி விடுவார்கள். ஆனால் மத்திய அரசு இந்த ஆண்டு இன்னும் தடுப்பூசி மருந்து வழங்கவில்லை என்று கால்நடைதுறை அதிகாரிகள்கூறுகின்றனர். கோமாரி நோய் தாக்குவதை தடுக்க தடுப்பூசி மருந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.

    • மணல் குவாரி செயல்படுவதால் ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன.
    • கவனக்குறைவு ஏற்பட்டால் இந்த பள்ளத்தினால் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

    பூதலூர், அக்.9-

    திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கோவில்பட்டி வழியாக கல்லணை செல்லும் சாலை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக கும்பகோணத்தில் இருந்தும் மயிலாடுதுறையில் இருந்தும் திருச்சிக்கு ஏராளமான கார்கள் சென்று வருகின்றன.

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, வளப்பகுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் விளைப்பொருட்கள் பலவும் லாரிகள் மூலமாக திருச்சி மார்க்கெட் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சாலை அகலப் படுத்தப்பட்டு விட்டதால் இரண்டு சக்கர வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன. கோவிலடி அருகே அரசு மணல் குவாரி செயல்படுவதால் ஏராளமான லாரிகளும் குறுக்கு நடுக்குமாக சென்று வருகின்றன.

    இந்த நிலையில் சுக்காம்பர் அருகே அண்மையில் பெய்த மழையால் சாலையின் ஓரத்தில் தொடர்ந்து பெரிய அளவில் அரிப்பு ஏற்பட்டு மூன்று பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன. எதிர் புதிருமாக லாரிகள் வரும் நேரத்தில் சற்று கவனக்–குறைவாக ஏற்பட்டால் இந்த பள்ளத்தினால் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

    அதுபோல இரண்டு சக்கர வாகனங்களில் வருவோர் சற்று கவனம் பிசகினாலும் சாலையோர பள்ளத்தில் விழுந்துவிடும் அபாய நிலை உள்ளது.

    தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அரிப்பு ஏற்படுவது எப்படி என்பதை கண்டறிந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • கழிவறையை அலுவ லகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • செப்டிக் டேங்க் முழுவதும் நிரம்பி மனித கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் இயங்கி வரு கிறது. இதில் சின்ன சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் வந்து செல்கின்ற னர். கட்டிட த்தின் பின்புறம் செப்டிக் டேங்க் ஒன்று உள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் உள்ள கழிவறைகளில் இருந்து கழிவு நீர் அந்த செப்டிக் டேங்குக்கு செல்கிறது. இந்த கழிவறையை அலுவ லகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கழிவறையில் இருந்து வரும் கழிவு நீர் செப்டிக் டேங்கில் வந்து சேர்கிறது. இந்நிலையில் செப்டிக் டேங்க் முழுவதும் நிரம்பி மனித கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் சுகாதார கேடு ஏற்படவும் அதிக அளவு வாய்ப்புள்ளது.

    அதுமட்டுமில்லாமல் இந்த செப்டிக் டேங்க் அருகில் தீயணைப்பு துறை உள்ளது தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு செல்ல வேண்டுமென்றால் செப்டிக் டேங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் சின்னசேலம் பகுதியில் ஏற்படும் விபத்து களை தடுக்க செல்லும் தீயணைப்பு வீரர்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்து வருகிறது அந்த மனித கழிவுநீர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொது மக்கள் எதிர்பார்க்கின்ற னர்.

    • வெள்ள அபாயம் ஏற்பட்டால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் சாகுபடி வயல்கள் மூழ்க வாய்ப்புள்ளது.
    • வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி ஆறுகளை தூர்வார வேண்டும்.

    திருத்துறைபூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் உள்ள மாரியாறு வடிகால் என்பது பாண்டி கோட்டகம் ராஜன் வாய்க்காலிருந்து பிரிந்து இப்பகுதி வடிகாலாக மாரியாறு வடிகால் உருவாகி இங்கிருந்து கரையாங்காடு வழியாக தொண்டியக்காடு சென்று கடலில் கலக்கிறது.

    அதேபோல் இப்பகுதியில் உள்ள கள்ளிக்குடி வடிகால், பாண்டியான் போக்கு வடிகால், வளவனாறு வடிகால் என நான்கு வடிகாலும் குன்னலூர் எக்கல், தர்காசு போன்ற சுற்று பகுதியில் உள்ள சுமார் 125 கிராமங்களுக்கு வடிகாலாக உள்ளது.

    இந்நிலையில் வடிகால்கள் தூர்வாரப்படாததால் ஆறுகள் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளது. மேலும், கடும் மழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்பட்டால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் கிராமங்கள் மற்றும் சாகுபடி வயலும் மூழ்க வாய்ப்புள்ளது.

    எனவே, வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி ஆறுகளை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் கதிர்வேல், ஒன்றிய கவுன்சிலர் அனிதா மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஊராட்சி செலவில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற முடிவு செய்தனர்.

    இதில் ஊராட்சி செலவில் வாய்க்கால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை டிரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி, டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகள் முதற்கட்டமாக மாரியாறு வடிகாலில் தொடங்கியது.

    இது விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    • சீரமைப்பு பணி செய்ய பொது மக்கள் கோரிக்கை
    • கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உருவாகி உள்ளன.

    கன்னியாகுமரி:

    தக்கலை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள ஆத்திவிளை ஊராட்சி பகுதியில் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றன.

    திங்கள் நகர் ரவுண்டானா அருகே சேவியர் தெருவில் இருந்து தபால் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் ஓடை அடைபட்ட நிலையில் இருந்து வந்ததால் சீரமைப்பு பணிகள் நடந்தன. ஆனால் இரணியல் போலீஸ் நிலைய நுழைவு வாயிலில் வழியில் ஓடை அடைபட்ட நிலையில் உள்ள தால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உருவாகி உள்ளன.

    இரணியல் போலீஸ் நிலையம், நீதிமன்றம், அரசு வங்கி, தபால் அலுவலகம், தனியார் மருத்துவமனை கள், ஆட்டோ நிறுத்தம், தேநீர் கடைகள், ஓட்டல்கள் உள்ள இப்பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கிய நிலையில் உள்ளது. இது டெங்கு காய்ச்சல் அபாயத்தை ஏற்படுத்துவதாக பொது மக்கள் அஞ்சுகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகமானது. இதனால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • பாதிப்பு ஏற்படுமோ என்று பொதுமக்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது.

    இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.

    பின்னர் இரவில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகமானது. அணையின் அருகில் உள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீரும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனிடையே தமிழகத்தின் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேலும் கால்வாய் பாசன பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு கால்வாய் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் வினாடிக்கு 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    அணையின் நீர்மட்டம் 120 அடியிலேயே நீடிக்கிறது.

    இதனால் அணை கடல் போல காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி நீர்வளத்துறை சார்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்ட கலெக்டர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பாக அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    இதனிடையே பொதுப்பணித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    எனவே காவிரி கரையோரமாக வசிப்பவர்கள், தாழ்வான இடங்க ளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள் என்று கூறப்பட்டு ள்ளது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் திறப்பால் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, திருவையாறு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் வாழைமரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதேப்போல் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கால் சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகளை வெள்ளநீர் சூழந்து பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    தற்போது மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மீண்டும் அதுபோல் பாதிப்பு ஏற்படுமோ என்று பொதுமக்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

    • சின்னசேலம் அருகே சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • மீண்டும் வீட்டுக்கு சென்று மாணவர்கள் சீருடை மாற்றுச்செல்லும் அவலநிலை உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள வாசுதேவனூர் கிராமத்தில் தாகம் தீர்த்தபுரம் செல்லும் முக்கிய சாலையில் சாக்கடை நீர் பல மாதங்களாகவே தேங்கி நிற்கிறது. இந்த வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் அதிக அளவில் செல்கிறார்கள். இதனால் சாக்கடை நீரை மிதித்துக் கொண்டு பள்ளிக்கு செல்லும் அவநிலையில் மாணவர்கள் உள்ளனர். இந்த சாக்கடை நீர் பல மாதங்களாகவே தேங்கி நிற்கின்றது.

    தாகம் தீர்த்தாபுரத்தில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பயிலும் வாசுதே வனூரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாக்கடை நீரை கடந்து செல்லும் பொழுது எங்கே தடுமாறி கீழே விழுந்து விடுவோமோ என்று அவதிப்பட்டு வருகி றார்கள். பள்ளி மாணவர்கள் சாக்கடை நீரை கடக்கும் பொழுது அந்த வழியாக செல்லும் பேருந்துகளால் சாக்கடை நீர்மாணவர்கள் சீருடைகள் மேல் பட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று மாணவர்கள் சீருடை மாற்று ச்செல்லும் அவலநிலை உள்ளது.

    இந்த சாக்கடை நீரால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மலேரியா, டெங்கு, காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு நிறைய பேருக்கு டெங்கு நோய் வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சாக்கடை நீரை அகற்றி பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் எந்த பாதிப்பும் வராதவாறு உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்

    ×