search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனிருத்"

    • கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக 'SK23' திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
    • இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்‌ஷன் கதையாக இது இருக்கும்

    கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக 'SK23' திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

    தமிழில் 'ரமணா', 'கஜினி', 'துப்பாக்கி' "கத்தி' போன்றப் பல வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் 'எஸ்கே23' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்றது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார்.


    இந்நிலையில் 'SK23' படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்ஷன் கதையாக இது இருக்கும். சூர்யாவின் 'கஜினி' படத்தில் எப்படி ஆக்ஷன் காட்சிகளை ரசித்தீர்களோ, அதுபோலவே இந்தப் படத்திலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

    மேலும், ஆக்ஷன் ஜானர் படமாக இது இருந்தாலும் ரொமான்ஸ் மற்றும் தனித்துவமான பல விஷயங்களை இந்த படத்தில் பார்க்க முடியும். சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்திற்காக அவரது உடல்மொழியில் கவனம் செலுத்த சிறப்புப் பயிற்சியும் கொடுத்திருக்கிறோம். முதலில் மிருணாள் தாக்கூர்தான் எங்கள் சாய்ஸாக இருந்தது. ஆனால், ருக்மிணியின் வேறொரு படம் பார்த்தபோது மிருணாளை விட இவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால் இவரை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் கவின் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தை இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.


    இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், நடிகர் கவின் தனது படத்தில் அனிருத் இசையமைத்தது குறித்து சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அனிருத் சார் என்படத்தில் பாட வேண்டும் என்பது என கனவு, ஆனால் அவர் என் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது நன் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. இது என் வாழ்நாள் ஆசை முழுவதும் நிறைவேறியது போல் இருக்கிறது. என் வாழ்க்கை பயணத்தில் என் உடன் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. வருகை தந்த செண்பகமூர்த்தி சார் மற்றும் மிஷ்கின் சாருக்கு சிறப்பு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.


    • அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கினார்.



    இவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதையடுத்து அட்லீ அடுத்தது எந்த நடிகருடன் இணையவுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், இயக்குனர் அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் 'புஷ்பா 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
    • சமீபத்தில் அனிருத் இசையில் ரஜினியின் 'ஜெயிலர்’, விஜய்யின் ’லியோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

    2012-ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின் வெளியான எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலை இல்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.


    சமீபத்தில் அனிருத் இசையில் ரஜினியின் 'ஜெயிலர்', விஜய்யின் 'லியோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில், 'லியோ' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆர்டினரி பர்சன்' என்ற பாடலை ஐரோப்பாவின் பெலரஸ் நாட்டை சேர்ந்த இசைக்கலைஞர் ஒட்னிகாவின் "வேர் ஆர் யூ'' பாடல் ஆல்பத்தில் இருந்து அனிருத் காப்பி அடித்து இருப்பதாக நெட்டிசன்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.



    ஒட்னிகா-அனிருத்

    இது குறித்து ஒட்னிகாவுக்கும் தகவல்கள் அனுப்பினர். இதை பார்த்த அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "லியோ படத்தின் பாடல் குறித்து எனது மெயில், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் கமெண்ட் செய்துவருவதை பார்த்தேன். அதற்கு நன்றி. இந்த சர்ச்சை குறித்து எனக்கு தெளிவாக எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரிப்பதற்கு நேரம் கொடுங்கள்'' என்று கூறியுள்ளார். இது தற்போது பரபரப்பாகியுள்ளது. 


    • 'லியோ' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ள இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. பல மொழி ரசிகர்கள் இப்படத்தை ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.


    இந்நிலையில், இப்படத்தின் முதல் காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , அனிருத் மற்றும் படக்குழுவினர் சென்னை ரோகினி திரையரங்கில் பார்த்தனர். அப்போது இசையமைப்பாளர் அனிருத் 'BADASS' பாடலை பாடி ரசிகர்களுடன் Vibe செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ரஜினியன் தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • தலைவர் 170 படத்தை லைக்கா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

    லைக்கா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். தற்காலிகமாக 'தலைவர் 170' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். மேலும் இப்படத்தின் படக்குழு விவரங்கள் படிப்படியாக அறிவிக்கப்படும் என்று லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    அதன்படி, 'தலைவர் 170' படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளதாக லைக்கா புரோடக்ஷன்ஸ் நேற்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க இருப்பதாக லைக்கா நிறுவனம் இன்று அறிவித்து இருக்கிறது. இது குறித்த எக்ஸ் பதிவுகள் வைரல் ஆகி வருகின்றன.

    • தலைவர் 170 படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.
    • தலைவர் 170 படத்தில் நடக்க உள்ள நடிகர்கள் விவரம் இன்று முதல் அறிவிக்கப்படும் என்று லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் நேற்று தெரிவித்து இருந்தது.

    லைக்கா புரோடக்ஷனில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் நடக்க உள்ள நடிகர்கள் விவரம் இன்று முதல் அறிவிக்கப்படும் என்று லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் நேற்று தெரிவித்து இருந்தது.

    அதன்படி, இன்று 'தலைவர் 170' படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளதாக லைக்கா புரோடக்ஷன்ஸ் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. மேலும், அனிருத் இணைவதால் பன்மடங்கு ஆகும் தலைவர் 170 படக்குழுவின் உற்சாகம் என லைக்கா புரோடக்ஷன்ஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள பதிவு சமூகவளத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத்.
    • இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத், முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் அனிருத்தின் இசை பெரிது பேசப்பட்டது. இவர் தற்போது விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2 படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.


    தமிழ் திரையுலகில் கலக்கி கொண்டிருந்த அனிருத், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். இப்படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விரைவில் ரூ.1000 கோடியே எட்டி விடும் என்ற எதிர்பார்ப்பில் படக்குழுவினர் மத்தியில் உள்ளது.


    இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல் பில்போர்ட் தளத்தில் இடம்பெற்றுள்ளது. அதாவது, உலகின் பிரபலமான பில்போர்ட் தளத்தின் குளோபல் 200 பிரிவில் 'ஜவான்' படத்தில் இடம்பெற்றிருந்த 'சலேயே' (chaleya) பாடல் 97-வது இடத்தை பிடித்துள்ளது. இதனை அனிருத் தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் 25-வது நாளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
    • இயக்குனர் நெல்சனுக்கு கலாநிதி மாறன் சமீபத்தில் போர்ஷே காரை பரிசாக கொடுத்தார்.

    ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     

    இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இசையமைப்பாளர் அனிருத்-க்கு காசோலை மற்றும் புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக கொடுத்தார். இந்த காரின் விலை ரூ. 1.44 கோடி என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘ஜவான்’.
    • இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத், சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, பாடலாசிரியர் விவேக், சண்டை பயிற்சி இயக்குனர் அனல் அரசு, படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குனர் முத்துராஜ், நடன இயக்குனர் ஷோபி, 'ஜவான்' படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் அனிருத் பேசியதாவது:- என்னுடைய சகோதரர் இயக்குனர் அட்லீக்கும் நன்றி. சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்குனர்கள் ரீமேக்கிற்காக சென்றிருக்கிறார்கள். ஆனால் சென்னையிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை சந்தித்து, கதை சொல்லி, அவரது தயாரிப்பில் படத்தை இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல சவாலானது. பத்து ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் என்னை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அனைவரும் கடினமாக உழைத்து ஜவானை உருவாக்கி இருக்கிறோம்.

    ஷாருக்கான் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்குமா என எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதைவிட முதலில் இசையமைப்பாளராக வருவேனா..! என்பதே சந்தேகமாக இருந்தது. தற்போது இசையமைப்பாளராகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் அதுவும் ஷாருக்கான் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அங்கு அறிமுகமாகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.


    கிங் கான் ஷாருக்... நான் உங்களை தவற விடுகிறேன். நீங்கள் தினமும் இரவில் பேஸ் டைம் இணைப்பில் வருகை தந்து ஒரு மணி நேரம் பேசுவீர்கள். அந்த பேச்சை தற்போது மிஸ் செய்கிறேன். ஷாருக்கான் மிகவும் அன்பானவர். குடும்பத்தில் ஒருவராக பழகக்கூடியவர். ஒரு முறை லண்டனுக்கு சென்றிருந்தபோது அங்கு அவர் எனக்காக ஷாப்பிங் சென்று அங்கிருந்து எனக்கு போன் செய்து என் உடை அளவை தெரிந்து கொண்டு எனக்காக பிரத்தியேகமான ஆடையை வாங்கி பரிசாக அளித்தார். அந்த அன்பு ஈடு இணையற்றது. இந்த படத்தில் ஷாருக்- அட்லீ இணைந்திருப்பதால் இந்தி திரைப்படமாக பார்க்காமல் இந்திய சினிமாவாக கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

    • ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் முதல் காட்சியை பார்க்க திரைப்பிரபலங்கள் பலர் திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர்.


    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அதில், "தலைவர் நிரந்தரம் நெல்சா' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகியுள்ளது.
    • ரசிகர்கள் திரையரங்குகளில் மேள தாளத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர்.



    இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை இசையமைப்பாளர் அனிருத் ரசிகர்களுடன் சென்னை திரையரங்கில் பார்த்துள்ளார். அப்போது ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள பட்டத்த பறிக்க நூறு பேரு, குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுற கொடுக்க நூறு பேரு என்ற வரிகளை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



    ×