என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mrunal thakur"

    • சீதா ராமம் படத்தின் மூலம் மிருணாள் தாகூர் புகழ்பெற்றார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் காயமடைந்தார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுசும், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

    அஜய் தேவ்கானுடன், மிருணாள் தாகூர் நடித்துள்ள 'சன் ஆப் சர்தார்-2' பட விழாவில் தனுஷ் கலந்துகொண்டதும், மிருணாள் தாகூருடன் கைகோர்த்துக்கொண்டு சுற்றியதும் இதற்கு தூபம் போடுவதுபோல அமைந்தது.

    இதுகுறித்து பேசிய மிருணாள் தாகூர், "நடிகர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரை பற்றியும் வதந்திகள் பரவி வருவதை அறிகிறோம். இதுபோன்ற வதந்திகளை பார்க்கும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது" என்று விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முடிவுரை எழுதினார்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யரும் நடிகை மிருணாள் தாகூரும் ரகசியமாக காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் கசித்துள்ளது.

    ஷ்ரேயாஸ் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் தங்களின் கேரியரின் உச்சத்தில் இருப்பதால் இந்த காதலை பொதுவெளியில் அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும் தங்ஙளின் நண்பர்களின் பார்ட்டி மற்றும் விழாக்களில் மட்டும் சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயமடைந்த ஷ்ரேயாஸ் தற்போது குணமடைந்து ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அஜய் தேவ்கானுடன், தனுசுக்கு நல்ல நட்பு உள்ளது.
    • ‘சன் ஆப் சர்தார்-2' படத்தின் நிகழ்வில், எனக்காக தனுஷ் கலந்து கொள்ளவில்லை

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுசும், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரும் காதலிப்பதாக 'கிசுகிசு'க்கப்படுகிறது.

    அஜய் தேவ்கானுடன், மிருணாள் தாகூர் நடித்துள்ள 'சன் ஆப் சர்தார்-2' பட விழாவில் தனுஷ் கலந்துகொண்டதும், மிருணாள் தாகூருடன் கைகோர்த்துக்கொண்டு சுற்றியதும் இதற்கு தூபம் போடுவதுபோல அமைந்தது.

    இதுகுறித்து மிருணாள் தாகூர் கூறும்போது, 'நடிகர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரை பற்றியும் வதந்திகள் பரவி வருவதை அறிகிறோம். இதுபோன்ற வதந்திகளை பார்க்கும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது.

    'சன் ஆப் சர்தார்-2' படத்தின் நிகழ்வில், எனக்காக தனுஷ் கலந்து கொள்ளவில்லை. என்னுடன் நடித்த அஜய் தேவ்கானுடன், தனுசுக்கு நல்ல நட்பு உள்ளது. அவர் தான் விழாவுக்கு தனுசை அழைத்தார். மற்றபடி எங்களை இணைத்து பேசும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை'' என்றார்.

    அப்படி என்றால் எதுவுமே இல்லையா... என ரசிகர்கள் 'உச்' கொட்டுகிறார்கள்.

    • பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகி வெப் தொடர் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.
    • தனுஷ், மிருணாள் தாக்கூர் விவகாரம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

    தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் தனுஷ். பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் புதிய இந்தி படமொன்றில் தனுஷ் நடித்துள்ளார். சமீப காலமாக பாலிவுட் விழாக்களில் அதிகமாக பங்கேற்று வரும் தனுஷ் பிரபல நடிகையான மிருணாள் தாக்கூரை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தீவிரமாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    சீதாராமம் படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமான மிருணாள் தாக்கூர் குறுகிய கால கட்டத்தில் முன்னணி கதாநாயகி அந்தஸ்தை பெற்றுள்ளார். பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகி வெப் தொடர் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் மிருணாள் தாக்கூர் கடந்த 1-ந்தேதி தனது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார். இதையொட்டி நடந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகர் தனுசும் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு வந்த தனுசை மிருணாள் தாக்கூர் வேகமாக சென்று வரவேற்ற வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இது மட்டுமின்றி அஜய் தேவ்கன்- மிருணாள் தாக்கூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சன் ஆப் சர்தார் படத்தின் பிரிமியர் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதிலும் தனுஷ் பங்கேற்றார்.



    ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' என்ற இந்தி படத்தில் தனுஷ் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி மும்பையில் 3-ந்தேதி நடந்த விருந்து நிகழ்ச்சியில் தனுசுடன் மிருணாள் தாக்கூரும் பங்கேற்றார். இதையடுத்து தனுஷ் மிருணாள் தாக்கூர் ஆகியோருக்கு இடையே காதல் இருந்து வருவதாக பாலிவுட் ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

    மேலும் தனுஷ், மிருணாள் தாக்கூர் விவகாரம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து தனுஷ், மிருணாள்தாக்கூர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. தனுஷ் ஏற்கனவே ஐஸ்வர்யாவை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

    • திரவ உணவுகளையே பெரும்பாலும் உட்கொள்கிறாராம்.
    • தன்னிடம் திறமை இருக்கும்போதும், பாலிவுட் சினிமா தன்னை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

    பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் மிருணாள் தாகூர். 'தூபான்', 'ஹாய் நான்னா', 'சீதா ராமம்', 'பீப்பா' உள்பட பல படங்களில் நடித்துள்ள இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

    கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் 'பேமிலி ஸ்டார்' படம் வெளியானது. 'கல்கி 2898 ஏ.டி.' படத்திலும் நடித்திருந்தார்.

    தமிழிலும் மிருணாள் தாகூர் படங்கள் நடிக்க திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக அவர் புதிய படங்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது தெலுங்கு, இந்தியில் பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர், இந்தியில் அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்காக 'ஜிம்'முக்கு சென்று கடுமையான பயிற்சி சென்று, உடலை கட்டுக்கோப்பாக்கி வருகிறார்.

    இதற்காக கடுமையான 'டயட்'டிலும் இருக்கிறாராம். திரவ உணவுகளையே பெரும்பாலும் உட்கொள்கிறாராம். சமீபத்தில், 'தன்னிடம் திறமை இருக்கும்போதும், பாலிவுட் சினிமா தன்னை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை' என மிருணாள் தாகூர் வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக 'SK23' திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
    • இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்‌ஷன் கதையாக இது இருக்கும்

    கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக 'SK23' திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

    தமிழில் 'ரமணா', 'கஜினி', 'துப்பாக்கி' "கத்தி' போன்றப் பல வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் 'எஸ்கே23' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்றது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார்.


    இந்நிலையில் 'SK23' படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்ஷன் கதையாக இது இருக்கும். சூர்யாவின் 'கஜினி' படத்தில் எப்படி ஆக்ஷன் காட்சிகளை ரசித்தீர்களோ, அதுபோலவே இந்தப் படத்திலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

    மேலும், ஆக்ஷன் ஜானர் படமாக இது இருந்தாலும் ரொமான்ஸ் மற்றும் தனித்துவமான பல விஷயங்களை இந்த படத்தில் பார்க்க முடியும். சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்திற்காக அவரது உடல்மொழியில் கவனம் செலுத்த சிறப்புப் பயிற்சியும் கொடுத்திருக்கிறோம். முதலில் மிருணாள் தாக்கூர்தான் எங்கள் சாய்ஸாக இருந்தது. ஆனால், ருக்மிணியின் வேறொரு படம் பார்த்தபோது மிருணாளை விட இவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால் இவரை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • 2023 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார்
    • மிருணாள் தாகூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. 'நுவ்விலா' படத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு சினிமா துறையில் விஜய் தேவரகொண்டா அறிமுகமானாலும். 2016 ஆம் ஆண்டு வெளியான 'பெல்லி சூப்புலு' படத்தின் மூலம் இவரை மக்கள் அங்கீகரிக்க ஆரம்பித்தார்கள்.

    இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதற்கு அடுத்து 2017 ஆம் ஆண்டு விஜயதேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

    அர்ஜூன் ரெட்டி புகழ் உலகமெங்கும் பரவியது. விஜய் தேவரகொண்டாவை ஒரு ரக்கட் பாய்-க்கு முன்னுதாரணமாக வைத்து இருந்தனர். அர்ஜூன் ரெட்டி படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.

    பின் அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். கீதா கோவிந்தம் படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் , கெமிஸ்டிரியும் மிக அழகாக அமைந்து இருக்கும். பின் 2023 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார். இந்த படம் மக்களிடையெ எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.

    இந்நிலையில் அடுத்ததாக விஜய் தேவரகொண்டா 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார். மிருணாள் தாகூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கீதா கோவிந்தத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன், பரசுராம் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி எப்படி வெற்றி அடைந்ததோ அதே போல் மிருணாள் தாகுர் ஜோடியும் வெற்றி பெறும் என ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
    • இந்த படத்திற்கு கே.யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    தெலுங்கிலும், தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் 'தி ஃபேமிலி ஸ்டார்'.

    இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடித்துள்ளார். பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே. யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

     


    ஏப்ரல் 5 ஆம் தேதி உலகம் முழுக்க தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இதையொட்டி சென்னையில் இப்படக்குழ கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய விஜய் தேவரகொண்டா, '' தமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்."

    "சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். என்னுடைய நடிப்பில் வெளியான முதல் படம் 'அர்ஜுன் ரெட்டி'க்கு நீங்கள் அளித்த ஆதரவு மறக்க இயலாது. தற்போது மீண்டும் இயக்குநர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன்."

    "இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடுத்தர வர்க்க இளைஞராக நடித்திருக்கிறேன். அன்பு செலுத்துவதிலும்... காதலிப்பதிலும்... நேசிப்பதிலும்... கோபத்திலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலையை எதிர்கொள்பவன் தான் இப்படத்தில் நாயகன். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்," என்று தெரிவித்தார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும். 

    • நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    • ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

    ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அதே சமயம் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.

    நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் இவர் ரஜினியின் கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தில் கேமியா ரோலில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

    ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

    ஹாரர் கதைக்கள பாணி பெருமளவு வெற்றிப் பெற்ற காரணத்தினால் அடுத்ததாக காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூரை அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி மிருணாள் தாகூர் ஒப்புக்கொண்டால் அவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.

    மிர்ணாள் தாகூர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து ஹாய் நான்னா, ஃபேமிலி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கூடுதல் தகவல்களைப் பற்றி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மிருணாள் தாகூர் குளியல் தொட்டியில் நீச்சல் உடையில் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.
    • இதனை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான சீதாராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் மிருனாள் தாகூர். மேலும் பல இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் மிருனாள் தாகூர் குளியல் தொட்டியில் நீச்சல் உடையில் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

    இதனை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வரும் மிருனாள் தாகூர் இப்படி ஆபாசமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கலாமா என்றும் பலர் கேள்வி எழுப்பி கண்டித்துள்ளனர்.

    விசாரணையில் அது போலி டீப் பேக் புகைப்படம் என்று தெரிய வந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் மிருனாள் தாகூர் முகத்தை இன்னொரு பெண்ணின் உடலோடு ஒட்டி இந்த புகைப்படத்தை உருவாக்கி உள்ளனர். இது பரபரப்பாகி உள்ளது. ஏற்கனவே பல நடிகைகளின் டீப் பேக் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    பல வெற்றி படங்களில் நடித்து பெயர் பெற்ற ரம்யா கிருஷ்ணன் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மிருணாள் தாகூர் என்பவர் நடிக்க இருக்கிறார். #RamyaKrishnan
    எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலியின் 2 பாகங்களும் இந்திய சினிமாவில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் முன்கதை தற்போது இணைய தொடராக வெளியாக உள்ளது. பிரவீன் சத்தாரு, தேவ கட்டா ஆகியோர் இயக்கிவரும் இதில் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி எனும் கதாபாத்திரத்தின் இளைய வயதுக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மிருணாள் தாகூர் தேர்வாகியுள்ளார்.



    சமீபத்தில் வந்த லவ் சோனியா படத்தின் வாயிலாக கவனம் பெற்றவர் மிருணாள். ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இதற்காக மூன்று பிரமாண்ட செட்டுகள் போட்டு படப்பிடிப்புகள் நடந்துவருகின்றன. இந்த தொடர் 9 மொழிகளில் வெளிவர உள்ளது.
    ×