என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.ஆர்.அமீன்"

    • 'சீதா ராமம்' படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார்
    • 'சீதா ராமம்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார். மேலும், ராஷ்மிகா மந்தனா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    இந்நிலையில், துல்கர் சல்மானும் மிருணாள் தாக்கூரும் இணைந்து புதிய ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான இப்பாடலை அவரது மகன் ஏ.ஆர். அமீன் பாடியுள்ளார்.

    • ஏ.ஆர்.ரகுமானி மகன் ஏ.ஆர்.அமீன் இசை கலைஞராகவும், பாடகராகவும் தடம் பதித்து வருகிறார்.
    • இவர் பாடல் படப்பிடிப்பு விபத்திலிருந்து தான் மயிலிழையில் உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளார்.

    இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவரது மகன் ஏ.ஆர்.அமீன் இசை கலைஞராகவும், பாடகராகவும் தடம் பதித்து வருகிறார். இவர் பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மும்பையில் நடந்த பாடல் படப்பிடிப்பின் போது ஏ.ஆர்.அமீன் தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும் இதிலிருந்து தான் மயிலிழையில் உயிர் பிழைத்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

     

    விபத்து நடந்த புகைப்படம்

    விபத்து நடந்த புகைப்படம்


    அவர் பதிவிட்டிருப்பது, "மேடையின் நடுவில் நின்றுகொண்டு பாடல் பாடி கொண்டிருந்தோம். பாடல் பாடுவதில் மூழ்கி இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நானும் என் குழுவும் நூலிழையில் உயிர் தப்பினோம். அந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை. இன்று பாதுகாப்பாக, உயிர் உடன் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். மேலும் விபத்து ஏற்பட்ட கிரேன் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளார்.

    ×