என் மலர்
நீங்கள் தேடியது "மிருணாள் தாக்கூர்"
- பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகி வெப் தொடர் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.
- தனுஷ், மிருணாள் தாக்கூர் விவகாரம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.
தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் தனுஷ். பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் புதிய இந்தி படமொன்றில் தனுஷ் நடித்துள்ளார். சமீப காலமாக பாலிவுட் விழாக்களில் அதிகமாக பங்கேற்று வரும் தனுஷ் பிரபல நடிகையான மிருணாள் தாக்கூரை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தீவிரமாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
சீதாராமம் படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமான மிருணாள் தாக்கூர் குறுகிய கால கட்டத்தில் முன்னணி கதாநாயகி அந்தஸ்தை பெற்றுள்ளார். பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகி வெப் தொடர் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மிருணாள் தாக்கூர் கடந்த 1-ந்தேதி தனது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார். இதையொட்டி நடந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகர் தனுசும் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு வந்த தனுசை மிருணாள் தாக்கூர் வேகமாக சென்று வரவேற்ற வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இது மட்டுமின்றி அஜய் தேவ்கன்- மிருணாள் தாக்கூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சன் ஆப் சர்தார் படத்தின் பிரிமியர் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதிலும் தனுஷ் பங்கேற்றார்.

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' என்ற இந்தி படத்தில் தனுஷ் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி மும்பையில் 3-ந்தேதி நடந்த விருந்து நிகழ்ச்சியில் தனுசுடன் மிருணாள் தாக்கூரும் பங்கேற்றார். இதையடுத்து தனுஷ் மிருணாள் தாக்கூர் ஆகியோருக்கு இடையே காதல் இருந்து வருவதாக பாலிவுட் ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேலும் தனுஷ், மிருணாள் தாக்கூர் விவகாரம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து தனுஷ், மிருணாள்தாக்கூர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. தனுஷ் ஏற்கனவே ஐஸ்வர்யாவை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
- டக்கோயிட் எ லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் ஆத்வி சேசுடன் இணைந்து நடிக்கிறார்.
- காதலியை பழிவாங்க துணிந்த ஒரு கோபக்கார குற்றவாளியின் கதை.
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். சீதாராமம், பேமிலி ஸ்டார் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்தி திரை உலகிலும் தடம்பதித்து புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் மிருணாள் தாக்கூர், தற்போது டக்கோயிட் எ லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் ஆத்வி சேசுடன் இணைந்து நடிக்கிறார்.
தன்னை காட்டிக் கொடுத்த தனது முன்னாள் காதலியை பழிவாங்க துணிந்த ஒரு கோபக்கார குற்றவாளியின் கதைதான் இந்த படம்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி படம் திரைக்கு வருகிறது.
சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வந்தது.
அப்போது எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஆத்விசேஷ், மிருணாள்தாக்கூர் ஆகியோர் காயம் அடைந்தனர். இருவருக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
- நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா தற்போது 'குஷி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'விடி 13' படக்குழு
இதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் 13-வது படத்தை 'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய பரசுராம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக 'சீதா ராமம்' படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் இணைந்துள்ளார். 'விடி 13' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஜய்யின் 'வாரிசு' படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

'விடி 13' படக்குழு
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடி 13' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
The much awaited collaboration of THE #VijayDeverakonda, @parasurampetla, & @svc_official's #VD13 is officially launched today.
— Sri Venkateswara Creations (@SVC_official) June 14, 2023
The talented @mrunal0801 joins the stellar cast.
Shoot begins soon.#SVC54@Thedeverakonda#KUMohanan @GopiSundarOffl #VasuVarma #DilRaju #Shirish pic.twitter.com/ZzOfigIvme
- கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக 'SK23' திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
- இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்ஷன் கதையாக இது இருக்கும்
கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக 'SK23' திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழில் 'ரமணா', 'கஜினி', 'துப்பாக்கி' "கத்தி' போன்றப் பல வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் 'எஸ்கே23' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்றது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார்.

இந்நிலையில் 'SK23' படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்ஷன் கதையாக இது இருக்கும். சூர்யாவின் 'கஜினி' படத்தில் எப்படி ஆக்ஷன் காட்சிகளை ரசித்தீர்களோ, அதுபோலவே இந்தப் படத்திலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஆக்ஷன் ஜானர் படமாக இது இருந்தாலும் ரொமான்ஸ் மற்றும் தனித்துவமான பல விஷயங்களை இந்த படத்தில் பார்க்க முடியும். சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்திற்காக அவரது உடல்மொழியில் கவனம் செலுத்த சிறப்புப் பயிற்சியும் கொடுத்திருக்கிறோம். முதலில் மிருணாள் தாக்கூர்தான் எங்கள் சாய்ஸாக இருந்தது. ஆனால், ருக்மிணியின் வேறொரு படம் பார்த்தபோது மிருணாளை விட இவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால் இவரை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
With a dream star cast and a stellar technical crew, #SKxARM begins with a pooja ceremony ❤?
— Team AIM (@teamaimpr) February 16, 2024
Here are the highlights from the auspicious event ✨
- https://t.co/IqeTJJm8Tz@ARMurugadoss @Siva_Kartikeyan @rukminitweets @anirudhofficial @dhilipaction @SudeepElamon… pic.twitter.com/UwcxBfZanU






