search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "hi nana"

  • நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
  • ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

  ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அதே சமயம் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.

  நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் இவர் ரஜினியின் கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தில் கேமியா ரோலில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

  ராகவா லாரன்ஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற காமெடி கலந்த ஹாரர் படங்களை இயக்கி, நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

  ஹாரர் கதைக்கள பாணி பெருமளவு வெற்றிப் பெற்ற காரணத்தினால் அடுத்ததாக காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூரை அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி மிருணாள் தாகூர் ஒப்புக்கொண்டால் அவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.

  மிர்ணாள் தாகூர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து ஹாய் நான்னா, ஃபேமிலி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கூடுதல் தகவல்களைப் பற்றி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • நானி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஹாய் நான்னா'.
  • இப்படத்தின் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.

  இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.  இதைத்தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணாடி கண்ணாடி' பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. பல மொழிகளில் வெளியாகியுள்ள இந்த பாடலின் தமிழ் வெர்ஷனை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

  'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'.
  • இப்படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


  இதைத்தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணாடி கண்ணாடி' பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

  'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


  ×