search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னிபாத் திட்டம்"

    • அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
    • பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை

    புதுடெல்லி :

    முப்படைகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யும் 'அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. அத்திட்டத்துக்கு பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்தநிலையில், இதுகுறித்து டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    'அக்னிபாத்' திட்டம் தொடர்பாக மத்திய அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், அந்த திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த தொடங்கி விட்டதால், அதை முழுமையாக ஆதரிக்கிறோம். திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான் அளித்த பேட்டியில், 'அக்னிபாத்' திட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த மாதம் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.
    • 2022-ல் இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை 23 ஆண்டுகளாக அரசாங்கம் நீட்டித்தது.

    ஆயுதப் படைகளில் ஆள் சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்ததோடு, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

    டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தினர். அப்போது, திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஒருங்கிணைந்த பதிலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டது.

    ஜூன் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டம், 17 முதல் 21 வயது வரையிலான பாதுகாப்புப் படைகளில் 25 சதவீதத்தினரை இன்னும் 15 ஆண்டுகளுக்குத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இளைஞர்களைச் சேர்ப்பதற்கு வழங்குகிறது.

    கடந்த மாதம் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. பின்னர், 2022-ல் இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை 23 ஆண்டுகளாக அரசாங்கம் நீட்டித்தது.

    • நவம்பர் 15-ந் தேதி தொடங்குகிறது
    • ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

    வேலூர்:

    இந்திய ராணுவத்தில் சேருவதற் கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 21 ம் தேதி தொடங்கி நவம்பர் 25 ம் தேதி வரை நடக்கிறது.

    தகுதி வாய்ந்தவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூர் கலெக்டர் குமார வேல் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    அக்னிபாத் திட்டத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வேலூர், திருப்பூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் 21.08.2022 முதல் 25.11.2022 வரை நடைபெற உள்ளது.

    தகுதி வாய்ந்தவர்கள் www. joinindianarmy.nic.in . என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம்.

    அதன்படி நாகர்கோவில் அறிஞர் அண்ணா ஸ்டேடியத்தில்வரும் 21-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரையும், கோவை அவினாசி டி.இ.ஏ பொதுப் பள்ளி வளாகத்தில் செப்டம்பர் 20-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரையும், வேலூர் கோட்டை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் சென்னை தலைமையிடத்து ஆர் ஓ ஏற் பாட்டின் பேரில் நவம்பர் 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விமானப்படையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
    • 3 ஆயிரம் கடற்படை பணிக்கு 9.55 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது.

    வடமாநிலங்களில் போராட்டங்கள் நடந்தபோதிலும், இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்திய விமானப்படையில், சுமார் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    இதற்கிடையே, இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்கும் பணி ஜூலை 1-ந் தேதி தொடங்கியது. சமீபத்தில் முடிவடைந்தது.

    இந்நிலையில், கடற்படையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு சுமார் 9 லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 82 ஆயிரத்து 200 பேர் பெண்கள் ஆவர் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரசின் இந்த கொள்கைகள் தங்கள் வாழ்க்கையுடன் விளையாடுவதாக இளைஞர்கள் கருதுகின்றனர்.
    • பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று, அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், அக்னிபாத் விவகாரத்தை எழுப்பினார். அவர் பேசியதாவது:-

    ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு போன்ற ஓய்வூதிய பலன்கள் இல்லாமல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தரம் செய்யப்படுவார்கள். மற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அரசின் இந்த கொள்கைகள் தங்கள் வாழ்க்கையுடன் விளையாடுவதாக இளைஞர்கள் கருதுகின்றனர். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், 4 வருடங்கள் கழித்து அவர்களின் வாழ்க்கை என்னவாகும் என கேள்வி எழுப்புகின்றனர். அதனால்தான் போராட்டம் நடத்துகின்றனர்.

    ஏராளமான இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று, போதுமான வாழ்வாதாரம் இல்லாமல் தங்கள் கிராமங்களுக்கு திரும்புவதன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், இது சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நாட்டின் நலன் கருதி அக்னிபாத் திட்டத்தை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
    • இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால் திட்டத்தை திரும்ப மத்திய அரசு மறுத்து விட்டது. இதனிடையே அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேரும் நடைமுறையை ராணுவம் மேற்கொண்டுள்ளது. இந்திய கடற்படையில் சேருவதற்கு இதுவரை மொத்தம் 3,03,328 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
    • அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரெயில் சேவைகள் ரத்து.

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. பீகாரில் இருந்து தெலுங்கானா வரை ரெயில்வே சொத்துக்கள் எரித்து சேதப்படுத்தப்பட்டன.

    இதுதொடர்பாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.

    அப்போது அவர், "அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரெயில் சேவைகள் ரத்தானதால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தனி வரவு பராமரிக்கப்படவில்லை.

    இருப்பினும் 14.6.2022 முதல் 30.6.2022 வரையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களின்போது 2000 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகவும், ரெயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாலும் ரெயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. தோராயமாக மொத்தம் 102.96 கோடி ரூபாய் பயணிகளுக்கு திரும்பி அளிக்கப்பட்டது. அக்னிபாத் திட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து ரெயில் சேவைகளும் மீட்டெக்கப்பட்டுள்ளன " என்றார்.

    • அக்னிவீரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்
    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்

    புதுடெல்லி:

    சிஆர்பிஎப், பிஎஸ்எப் போன்ற மத்திய ஆயுதக் காவல் படைகளில், அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டம் தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் மாநிலங்களவையில் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்தார்.

    'மத்திய ஆயுத காவல் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் கான்ஸ்டபிள்கள் (பொதுப் பணி) மற்றும் ரைபிள்மேன் பதவிக்கான ஆட்சேர்ப்பில், முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் தளர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்' என்று மத்திய மந்திரி நித்யானந்த ராய் கூறினார்.

    ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் 17 மற்றும் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு ஜூன் 14ம் தேதி வெளியிட்டது. 4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் இந்த பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிந்த பிறகு, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 25 சதவீதம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

    இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்திய நிலையில், மத்திய ஆயுத காவல் படை அல்லது துணை ராணுவத்தில் ஆட்சேர்ப்பின்போது, காலி பணியிடங்களில் அக்னிவீரர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன.
    • ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தன.

    மேலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. இந்த நிலையில் ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    • அக்னிபாத் திட்டத்திற்கு சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • அக்னிபாத் திட்டத்தை வெளிப்படையாக வரவேற்று மணீஷ் திவாரி டுவிட்டர் பதிவு.

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என மத்திய அரசு உறுதியாக தெரிவித்தது.

    இந்த திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்கும் நடவடிக்கைகளில் முப்படைகளும் ஈடுபட்டுள்ளன. அக்னிபாத் திட்டத்தன் கீழ் விமானப்படையில் சேர 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வரும் 18ந் தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அக்னிபாத் திட்ட பிரச்சினையை எழுப்பி அவை நடவடிக்கைகளை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற 12 எம்பிக்கள், 6 பேர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இதில் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்ட பங்கேற்ற மணீஷ் திவாரி அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தும் அறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளார்.

    முன்னதாக அக்னிபாத் திட்டத்தை ஆதரித்து அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், எதார்த்தம் என்னவென்றால், இலகுவான ஆர்வமுள்ள இளைஞர்களின் ஆயுதப்படை இந்தியாவுக்குத் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார். அக்னிபாத் திட்டத்திற்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

    இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி வெளிப்படையாக அந்த திட்டத்தை ஆதரித்து இருப்பது காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மணீஷ் திவாரியை காங்கிரசில் இருந்து சஸ்பெண்ட் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு நடவடிக்கை கடந்த 24-ந்தேதி தொடங்கியது.
    • விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

    புதுடெல்லி

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது.

    அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. குறிப்பாக விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு நடவடிக்கை கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தனர். இத்திட்டத்தின் கீழ் சேருவதற்காக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

    அந்தவகையில் "அக்னிபாத்" ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் வந்த 6,31,528 விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை மிக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது இந்த முறை 7,49,899 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    • லக்னோவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநில அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சஞ்சய் சிங் பேட்டியளித்தார்.
    • நாட்டைக் காக்க பணத்திற்காக அழ வேண்டாம் எனவும் சிங் கூறியுள்ளார்.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எதிர்க்கட்சியினர், இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக அடையாளப் போராட்டமாக ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் ரூ.420க்கான காசோலைகள் மற்றும் வரைவோலைகளை பிரதமர் மோடிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதனை அக்கட்சியினர் உத்தரப் பிரதேச பொறுப்பாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி இந்திய ராணுவத்தை ஏமாற்ற வேண்டாம் என்றும் நாட்டைக் காக்க பணத்திற்காக அழ வேண்டாம் எனவும் சிங் கூறியுள்ளார்.

    இதுகுறித்து லக்னோவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநில அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங் கூறியதாவது:-

    மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக உ.பி முழுவதும் நன்கொடை அளிக்க இளைஞர்கள் மற்றும் மாணவர் பிரிவு உறுப்பினர்களை வலியுறுத்தப்படுகிறது. மோடி அரசுக்கு ரூ.420 காசோலைகள் மற்றும் டிமாண்ட் டிராப்ட் அனுப்புவதன் மூலம், அடையாளப் போராட்டத்தை பதிவு செய்ய கட்சி முடிவு செய்துள்ளது. ரதமர் மோடி இந்திய ராணுவத்தை ஏமாற்ற வேண்டாம் என்றும் நாட்டைக் காக்க பணத்திற்காக அழ வேண்டாம்.

    சில எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது. உதய்பூரில் தையல்காரரான கன்ஹையா லால் கொல்லப்பட்டதில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை துணை அமைப்பான ராஷ்ட்ரிய முஸ்லீம் மஞ்ச் ஆகியவற்றின் பங்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×