search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth dies"

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே ரோட்டோர பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வனப்பகுதி காடகநல்லிக்கு தனியார் பஸ் ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    காடகநல்லிக்கு பஸ் சென்று அங்கிருந்து மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தது.

    பசுவணாபுரம் அருகே ஒரு வளைவில் பஸ் திரும்பிய போது எதிர்பாராத வகையில் டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி ரோட்டோர பள்ளத்தில் பஸ் திடீரென கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ... அம்மா.. என அபாய குரலிட்டனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி சென்று இடிபாட்டுக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டனர்.

    சம்பவ இடத்துக்கு போலீசாரும் விரைந்து வந்தனர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் பெயர் ஊர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

    மேலும் இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி பகுதிகளில் இருந்து ஆம்புலன்சுகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. படுகாயத்துடன் துடித்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஆரணி அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி அருகே உள்ள மேல்நகரை சேர்ந்தவர் அரங்கநாதன் மகன் மணிபாலன் (வயது 23). இவர் ஆற்காட்டில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.

    மணிபாலன் நேற்று இரவு ஆரணியில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேலூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிபாலன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பூம்புகார் அருகே திருக்கடையூர் சின்னகுடி மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் நந்திஷ் (வயது 19).

    இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சின்னகுடியில் இருந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் நடந்த பால வேலைக்காக வந்த ஒரு லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட நந்திஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து பொறையாறு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆற்காடு அருகே லாரி மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    சென்னை மேலவாக்கத்தை சேர்ந்தவர் எட்வின் இவரது மகன் ஐசக் ராஜேந்திரன் (வயது 27). பெங்களுருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலை விடுமுறை காரணமாக சென்னைக்கு காரில் புறப்பட்டார். கார் ஆற்காடு அடுத்த வேப்பேரி அருகே சென்ற போது சாலையின் அருகே நின்றிருந்த லாரி மீது மோதியது.

    இதில் ஐசக் ராஜேந்திரன் அதிர்ஷ்டவசமாக லேசான காயமுடன் உயிர் தப்பினார். பின்னர் காரில் இருந்து இறங்கி சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மற்றொரு லாரி ஐசக் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் ஐசக் ராஜேந்திரன் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் உடலை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே நிகழ்ந்த விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    அணைக்கட்டு அருகே உள்ள கெங்கை நல்லூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இலவம்பாடியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    இலவம்பாடி அருகே சென்ற போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் பலத்த காயமடைந்தார்.

    பொது மக்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சீனிவாசன் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

    இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் எலி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. #RatFever
    கோவை:

    கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து அங்கு தற்போது எலி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எலி காய்ச்சலுக்கு இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    எனவே கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை மாவட்டங்களில் எலி காய்ச்சல் பரவுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதார துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கேரள மாநிலத்தில் இருந்து எலி காய்ச்சல் பாதிப்புடன் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு யாராவது வருகிறார்களா? என்பதை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் சுகாதாரதுறை சார்பில் முகாம் அமைந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டாம்பட்டியை சேர்ந்த சதீஸ்மோகன் (வயது 29) என்பவர் காய்ச்சல் பாதிப்புடன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை டாக்டர்கள் சோதனை செய்த போது அவருக்கும் எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து சதீஸ்மோகன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சதீஸ்மோகன் பரிதாபமாக இறந்தார்.

    ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த காந்திமதி சிகிச்சை பலன் அளிக்காமல் எலி காய்ச்சலுக்கு பலியானார்.

    எனவே கோவை அரசு ஆஸ்பத்திரியில் எலி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோழிப்பாலத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 29). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் வேலை சம்பந்தமாக அடிக்கடி கேரள மாநிலத்துக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கார்த்திக் காய்ச்சல் பாதிப்புடன் அவிதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இங்கு கார்த்திக்கை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. பின்னர் கார்த்திக்கை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதே போல கடந்த 2 நாட்களாக எலி காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த வால்பாறையை சேர்ந்த பொன்னையா குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார். மேலும் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு 22 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #RatFever
    கும்மிடிப்பூண்டியில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    பொன்னேரி என்.ஜி.ஓ. நகரைச்சேர்ந்த ஜெகன்நாதன் மகன் வசந்தகுமார்(19). இவர் பொன்னேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை செய்து வந்தார்.

    நேற்று வசந்தகுமார், கும்மிடிப்பூண்டி அருள் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். கும்மிடிப்பூண்டி ரெட்டம் பேடு சாலை சந்திப்பின் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது.

    பலத்த காயம் அடைந்த வசந்தகுமார், பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் சென்னை காசிமேடு பகுதியில் மீன் வாங்க நேற்று இரவு சென்றனர். மீன்வாங்கிக் கொண்டு இன்று காலை திருவள்ளூர் ஜே.என்.சாலை பஸ் டிப்போ டெம்போவில் திரும்பினார்கள்.

    அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த டெம்போ லாரி மீது மோதியது. இதில் நாகம்மாள், லலிதா, கோவிந்தம்மாள் , ரோசி, தனலட்சுமி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    பலத்த காயம் அடைந்த எல்லம்மாள், கதிர்வேலு ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திருவள்ளூர் டவுன் போலீ சார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கருணாநிதி மரணமடைந்தார் என்ற செய்தி வெளியானதை தொடர்ந்து மதுரை வாலிபர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். #karunanidhideath #dmk

    மதுரை:

    மதுரை ரிசர்வ் லைன் காலாங்கரையை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 27). அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்த இவர் 47-வது வார்டு தி.மு.க. இளைஞரணி நிர்வாகி ஆவார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அழகுராஜா சோகமாக காணப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மாலை கருணாநிதி உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என செய்தி வந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அழகுராஜா வீட்டில் அதுதொடர்பாக செய்திகளை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது கருணாநிதி மரணமடைந்தார் என்ற செய்தி வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அழகுராஜா துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.

    அவரை குடும்பத்தினர் சமரசம் செய்தனர். ஆனாலும் அழகுராஜா சோகத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அழகுராஜா பரிதாபமாக இறந்தார். #karunanidhideath #dmk

    உளுந்தூர்பேட்டை அருகே பயணிகள் கூட்டத்தில் ஆம்னி பஸ் புகுந்த விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு வந்தது. அந்த பஸ் நள்ளிரவு 1 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே செக்குறிச்சி என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று பழுதானது.

    உடனே டிரைவர் அந்த பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது சென்னையில் இருந்து கொடைக்கானல் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வேகமாக வந்தது. அந்த பஸ் திடீரென்று பழுதாகி நின்ற அரசு பஸ் மீது மோதி விட்டு அருகில் நின்று கொண்டிருந்த பயணிகளின் கூட்டத்தில் புகுந்தது.

    இதில் விக்னேஷ்குமார் (வயது 19) என்ற வாலிபர் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த 5 பேரை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    வேலாயுதம்பாளையம் அருகே மறவாபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி வாலிபர் இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    வேலாயுதம்பாளையம்:

    சின்னதாராபுரம் அருகே நடுப்பாளையத்தைசேர்ந்தவர் ராஜகுமாரன்(வயது 24). இவர் கரூரில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று காலை ராஜகுமாரன் பஸ்சில் வேலாயுதம்பாளையம் அருகே மறவாபாளையம் வந்தார்.

    அங்குள்ள காவிரி ஆற்றில் இறங்கி அக்கரையில் உள்ள கருப்பம்பாளையத்தில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு செல்ல முயன்றார்.

    அப்போது ஆற்று தண்ணீரின் வேகத்தில் ராஜகுமாரன் அடித்து செல்லப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறவாபாளையம் காவிரி ஆற்றில் ராஜ குமாரனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கட்டிபாளையம் அருகே ராஜகுமாரன் உடல் கரை ஒதுங்கியது. இது குறித்து வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்
    நத்தம் அருகே தனியார் பஸ் மோதியதில் கொத்தனார் பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    நத்தம் அருகே கல்லுக்கட்டி வேளாம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி மகன் மனோகரன்(வயது23). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக நத்தம்-செந்துறை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    பாப்பம்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் மனோகரன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே தலை சிதறி பலியானார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    விழுப்புரம்:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த ஓனாசிறுவயலை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 35). இவரும் அதே பகுதியை சேர்ந்த சிதம்பரம்(50), நாகராஜன்பிரபு(28) ஆகியோர் நேற்று மாலை ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டனர்.

    காரை பழனிவேல் ஓட்டிசென்றார். நள்ளிரவு 1 மணியளவில் அந்த கார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது முன்னால் துணிப்பைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென்று 4 வழிச்சாலையில் திரும்பியபோது பின்னால் வந்த கார் திடீரென்று லாரி மீது மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிதம்பரம், நாகராஜன்பிரபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், சரஸ்வதி ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    ×