என் மலர்
நீங்கள் தேடியது "Gummidipoondi accident"
- பெருவாயில் பகுதியில் சாலை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது40). கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை அவர் தனது தங்கையான புவனேஸ்வரி(32) மற்றும் அவரது மகள் சாருமதி(5) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
பெருவாயில் பகுதியில் சாலை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
புவனேஸ்வரி, அவரது மகள் சாருமதி ஆகியோரின் கால்கள் நசுங்கியது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய அவர்கள் 2 பேரையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளைவில் திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
லாரி மோதி கிராம நிர்வாக உதவியாளர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கும்மிடிப்பூண்டி பஜாரில் 3 மாடி கொண்ட குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் ஒவ்வொரு தளத்திலும் 3 வீடுகள் என்ற முறையே மொத்தம் 9 வீடுகள் உள்ளன.
தரை தளத்தில் உள்ள முதல் வீட்டில் பிரேம் குமார், அவரது மனைவி மணிமேகலை(30) மற்றும் அவரது மகன் வருண்(4) ஆகியோர் வசித்து வருகிறார்கள். பக்கத்தில் அருகருகே இருந்த 2 வீடுகளிலும் ஆட்கள் இல்லாததால் அவை பூட்டப்பட்டு கிடந்தன.
இந்த நிலையில் நேற்று மாலை கும்மிடிப்பூண்டியில் மின் தடை ஏற்பட்டு மீண்டும் மாலை 6 மணியளவில் மின்சப்ளை வழங்கப்பட்டது.
வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வருண் மீண்டும் மின்சப்ளை வந்ததால் வீட்டிற்கு சென்று தனது தாயை கூப்பிட்டு கதவை தட்டி உள்ளான். அப்போது வெளியே வந்த மணிமேகலை அருகே உள்ள வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் தனது மகனுடன் அங்கிருந்து வெளியேறி சாலைக்கு வந்தார். மேலும் அந்த வளாகத்தில் இருந்த அனை வரையும் உஷார்படுத்தினார். அவர்கள் அருகே உள்ள மற்றொரு குடியிருப்பு வளாகத்திற்கு மேல் மாடி வழியே இடம் மாறி சென்றனர்.
அதற்குள் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி பஜார் முழுவதும் மின் சப்ளை உடனடியாக துண்டிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி தீயணைப்புத்துறையினர் குறுகலான அந்த குடியிருப்பு வளாகத்திற்குள் பிடித்த தீயை அணைத்தனர்.
சிறுவன் வருண் மின்சாரம் வந்ததுமே வீட்டிற்கு சென்றதால் வீட்டுக்குள் இருந்த அவனது தாய் மணிமேகலை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின்சப்ளை வந்தவுடன் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
சம்பவ இடத்தில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை பரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகன். இவரது மகன் சுரேந்தர் (வயது 18) 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
நாகனும் அவரது மகன் சுரேந்தரனும் சபரிமலை அய்யப்பன் கோவில் செல்வதற்காக மாலை அணிந்திருந்தனர். அவரது வீட்டில் இன்று கன்னி பூஜை நடக்க இருந்தது.
இதற்காக ஏடூரில் வசிக்கும் தனது சகோதரியை அழைப்பதற்காக நேற்று அவர் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மோட்டார் சைக்கிளை சுரேந்தர் ஓட்டிச் சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த நண்பர் அபியும், ஏடூரைச் சேர்ந்த தமிழரசு என்பவரும் உடன் சென்றனர்.
3 பேர் சென்ற மோட்டார் சைக்கிள் எளாவூரில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த சிமெண்ட் தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவர் சுரேந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மற்ற 2 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீஞ்சூரை அடுத்த காட்டூர் அருகே உள்ள ஊராணம்பேடு கிராமத்தைச்சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் இருந்து எளாவூர் ரெயில் நிலையம் நோக்கி மினி லோடு வேனில் பயணம் செய்தனர். வேனை டிரைவர் சிலம்பரசன் ஓட்டினார்.
எளாவூரை அடுத்த தலையாரிப்பாளையம் அருகே ஓட்டேரி என்ற இடத்தில் சென்ற போது வேனின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது.
வேனில் பயணம் செய்த ஊரணம்பேடு கிராமத்தைச்சேர்ந்த கோபால், அவரது மனைவி கிருஷண்வேணி, ராஜீ, வரதன், முத்து மற்றும் கோவிந்தசாமிஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் சிலம்பரசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ராஜாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது28) கொத்தனார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி அயநல்லூர் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அயநல்லூர் அருகே வரும் போது சாலையில் இருந்த பள்ளத்தில் எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வாலிபர் மணிகண்டனை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழக அரசு பஸ் ஒன்று இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆந்திர மாநிலம் சூளூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தது.
இந்த பஸ் காலை 5.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியை அடுத்த பஞ்சட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் பஸ்சின் இடது பக்கம் முழுவதும் சிதைந்தது. பயணிகள் ‘அய்யோ அம்மா...’ என்று அலறினார்கள். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதியில் அமர்ந்திருந்த குமாரி லட்சுமி (51) என்ற பெண் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார். இவர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியை சேர்ந்தவர்.
ஆந்திராவில் இருந்து குடும்பத்துடன் ரெயிலில் கும்மிடிப்பூண்டு வந்த இவர், கோயம்பேடு வருவதற்காக இந்த பஸ்சில் ஏறினார். ஆனால் சிறிது நேரத்திலேயே விபத்தில் சிக்கி பலியானார். இந்த விபத்தில் குமாரி லட்சுமியுடன் பயணம் செய்த அவருடைய கணவர் நாகராஜ் ராவ் (54), உறவினர் எலிசா (39) ஆகியோரும் காயம் அடைந்தனர். இது தவிர அதே பஸ்சில் பயணம் செய்த நாகமணி (53) படுகாயம் அடைந் தனர். இவர்கள் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள்.
40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மயக்க நிலையில் உள்ளார். படுகாயம் அடைந்த 6 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த பஸ்சை சிட்டிபாபு (வயது 54) என்பவர் ஓட்டி வந்தார். இவர் நசரத் பேட்டையை சேர்ந்தவர். கண்டக்டர் தரணி, திருவள்ளூரை அடுத்த சோம்பூரை சேர்ந்தவர்.
விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையில் கவரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் ரெயில் நிலையம் எதிரே வசித்து வந்தவர் சந்தானக் கிருஷ்ணன்(வயது82). ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரி. இவரது மனைவி அருணா. மகன் சதிஷ் (42).
நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை சந்தானக் கிருஷ்ணன், அவரது மனைவி அருணா, மகன் சதிஷ் ஆகிய 3 பேரும் கடக்க முயன்றனர்.
அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆரம்பாக்கம் நோக்கி வந்த மினி வேன் திடீரென சந்தானக்கிருஷ்ணன் மீது மோதுவது போல் வேகமாக வந்தது. இதனைக்கண்ட சதிஷ், தந்தையை காப்பாற்ற முயன்றார்.
இதில் அவர்கள் 2 பேர் மீது வேன் மோதியது. படுகாயம் அடைந்த இருவரும் சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சந்தானக்கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். சதீசுக்கு தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து மினி வேன் டிரைவர் ஆரம்பாக்கத்தை அடுத்த பாட்டைகுப்பம் கிராமத்தைச்சேர்ந்த பிரேம் என்பவரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:
கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு தமிழக அரசு பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் நடராஜன் ஓட்டினார். கண்டக்டராக நீலகண்டன் இருந்தார். பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக அரசு பஸ் சாலையோரமாக நின்றது. அப்போது சென்னையில் ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்று அரசு பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இதில் பஸ்சில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த சிறுமி ஆசிப் (8) உள்பட 6 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தி லாரி டிரைவர் தாமோதரனை கைது செய்தனர்.
இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொன்னேரி என்.ஜி.ஓ. நகரைச்சேர்ந்த ஜெகன்நாதன் மகன் வசந்தகுமார்(19). இவர் பொன்னேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை செய்து வந்தார்.
நேற்று வசந்தகுமார், கும்மிடிப்பூண்டி அருள் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். கும்மிடிப்பூண்டி ரெட்டம் பேடு சாலை சந்திப்பின் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது.
பலத்த காயம் அடைந்த வசந்தகுமார், பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் சென்னை காசிமேடு பகுதியில் மீன் வாங்க நேற்று இரவு சென்றனர். மீன்வாங்கிக் கொண்டு இன்று காலை திருவள்ளூர் ஜே.என்.சாலை பஸ் டிப்போ டெம்போவில் திரும்பினார்கள்.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த டெம்போ லாரி மீது மோதியது. இதில் நாகம்மாள், லலிதா, கோவிந்தம்மாள் , ரோசி, தனலட்சுமி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த எல்லம்மாள், கதிர்வேலு ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவள்ளூர் டவுன் போலீ சார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






