search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accident injured"

    • மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஆனந்த் 50 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்து செல்லப்பட்டார்.
    • போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது38). இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று சீன பீங்கானால் செய்யப்பட்ட அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழாவையொட்டி அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். நேற்று மாலை பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் விலக்கு அருகே நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தென்காசியில் இருந்து நெல்லைக்கு பார்சல் ஏற்றி கொண்டு ஒரு மினி லாரி சென்றது. அதனை நெல்லை பழைய பேட்டையை சேர்ந்த ஜெயராமன் (42) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஆனந்த் 50 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்து செல்லப்பட்டார். இதில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஆன்ந்த் உயிரிருக்கு போராடினார்.

    சம்பவ இடத்திற்கு சென்ற பாவூர்சத்திரம் போலீசார், ஆனந்தை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் வராததால் அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிய ஆனந்தை மீட்டு மினி லாரியில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 36). இவர் தனது காரில் 5 பேர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கொடைக்கானலில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு செல்ல திட்டமிட்டனர்.

    இன்று அதிகாலை வத்தலக்குண்டு சாலையில் பூலத்தூர் பிரிவு அருகே கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    அதிர்ஷ்டவசமாக அந்த கார் ஓங்கி உயர்ந்த 2 மரங்களுக்கு இடையில் சிக்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர். அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இது குறித்து தாண்டிக்குடி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காரில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர்.

    பின்னர் படுகாயமடைந்த டிரைவர் சரவணன், மதுரையைச் சேர்ந்த தர்மராஜ் (60) ஆகிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தின்போது காரில் இருந்த 2 குழந்தைகளை போலீசார் காப்பாற்றினார்கள்.
    • ஜகன்னாத்பூர் கிராமத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

    கான்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள். திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது சிக்கந்திரா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ஜகன்னாத்பூர் கிராமத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

    பலியான 6 பேரும், தேராபூர், சிவராஜ் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இந்த விபத்தின்போது காரில் இருந்த 2 குழந்தைகளை போலீசார் காப்பாற்றினார்கள்.

    • காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூருக்கு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி திடீரென ராஜவேலு மீது மோதியது.
    • போலீசார் ராஜவேலுவின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த மாகரல், பெரிய காலனியை சேர்ந்தவர் ராஜவேலு (வயது64). இவர் இன்று காலை வீட்டில் இருந்து மெயின் ரோட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூருக்கு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி திடீரென ராஜவேலு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜவேலு உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.

    தகவல் அறிந்ததும் மாகரல் போலீசார் ராஜவேலுவின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி அருகே கார்-வேன் மோதல்லில் 10 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே உள்ள சுப்பா ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 20 பேர் நேற்று இரவு பெரும்பேடு குப்பத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மீஞ்சூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    வேனை ராஜேந்திரன் என்பவர் ஒட்டி வந்தார். பொன்னேரி அடுத்த சாணார்பாளையம் என்ற கிராமத்தின் அருகே வேன் வந்தது. அப்போது மீஞ்சூரில் இருந்து எதிரே வந்த கார் மீது மோதியது.

    இந்த விபத்தில் காரும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. சஞ்சீவி (50), பிரசாந்த் (24), ரித்தீஷ் (24) ஆகிய மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர்களுக்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கும்மிடிப்பூண்டியில் அரசு பஸ் மீது லாரி மோதலில் சிறுமி உள்பட 6 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    கும்மிடிப்பூண்டி:

    கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு தமிழக அரசு பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் நடராஜன் ஓட்டினார். கண்டக்டராக நீலகண்டன் இருந்தார். பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக அரசு பஸ் சாலையோரமாக நின்றது. அப்போது சென்னையில் ஆந்திரா நோக்கி சென்ற லாரி ஒன்று அரசு பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

    இதில் பஸ்சில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த சிறுமி ஆசிப் (8) உள்பட 6 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தி லாரி டிரைவர் தாமோதரனை கைது செய்தனர்.

    இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தண்டராம்பட்டு அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து பெண்கள் உள்பட 32 பேர் படுகாயமடைந்தனர்.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மெய்யூரை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கொளக்குடி கிராமத்தில் கூலி வேலைக்காக ஒரே லோடு ஆட்டோவில் ஏறிச் சென்றனர்.

    சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஆட்களை ஏற்றக் கூடாது என்ற போக்குவரத்து விதிகளையும் மீறி லோடு ஆட்டோ டிரைவர் பச்சூரை சேர்ந்த பஞ்சநாதன் பணத்திற்கு ஆசைப்பட்டு ஏற்றிச் சென்றார்.

    அதிக பாரம் இருந்ததால் ஆட்டோ தள்ளாடியபடி சாலையில் சென்றுள்ளது. இதனை பொதுமக்கள் பலர் பார்த்து கண்டித்துள்ளனர். அதை மீறியும் டிரைவர் ஆட்டோவை இயக்கினார்.

    அப்போது, நாச்சானந்தல் என்ற கிராமத்தில் ஆட்டோ சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த பெண்கள் உள்பட 32 பேர் படுகாயமடைந்தனர்.

    தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    மேலும் போக்குவரத்து விதிமீறி அதிக பாரத்தை ஏற்றி விபத்தை ஏற்படுத்தியதாக ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையத்தில் கார் மரத்தில் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். #accidentcase

    ராஜபாளையம்:

    நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் வியாபாரிகள் சங்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 30-க் கும் மேற்பட்டோர் சென்றனர்.

    மாநாடு முடிந்த பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வெல்லம் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் தனசேகர் என்பவரின் காரில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், முருகன், திருப்பதி ராஜா மற்றும் ஜெயராஜ் ஆகியோர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை தனசேகர் ஓட்டினார்.

    ராஜபாளையம் அரசு மருத்துவமனை எதிரே கார் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதில் கார்த்திகேயன் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 4 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதி செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே தடுப்பு சுவர் மீது வேன் மோதி திருப்பதி பக்தர்கள் 14 பேர் படுகாயமடைந்தனர்.

    ஆம்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா ராடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). சொந்தமாக வேன் வாங்கி டிரைவராக டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.

    இவர் மனைவி மற்றும் உறவினர்களோடு சேர்த்து 25 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்றிரவு வேனில் புறப்பட்டனர்.

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வேன் வந்து கொண்டிருந்தது. ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் என்ற இடத்தில் வேன் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதி சாலை அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் சிவக்குமார் (வயது 29), பிரவீன்(20), ராமகிருஷ்ணன் (40), பழனியம்மாள் (32), இந்திராணி (50), பிரகாஷ் (19), விஜயராஜ் (26), ராஜசேகர் (26), அம்மையப்பன் (44), தனம் (43), ராஜேஸ்வரி (47), மலர்விழி (21), அழகர்சாமி (60), கோமதி (40) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×