தரைப்பாலத்தில் சென்ற கார் நிலை தடுமாறி கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியது

தரைப்பாலத்தின் வழியே சென்ற போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரைப்பாலத்தில் சென்ற கார் நிலை தடுமாறி கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியது
Published on

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தில் கார் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலை தடுமாறி, தென்பெண்ணையாற்றில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது. இதில் பயணித்த 5 பேர், காரை விட்டு வெளியேறி, தரை பாலத்தில் ஏறி உயிர் தப்பினர்.

தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விரைவாக வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் பயணம் செய்தவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சிவபாலன், சுந்தர் உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது.

கடலூரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். பின்னர் புதுவை மாநிலம் வில்லியனூருக்கு செல்ல, இந்த தரைப்பாலத்தின் வழியே சென்ற போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com