என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி மாணவன் பலி"
- மின் வாரியத்தை கண்டித்து 2 மணி நேரம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பூமிக்கு அடியில் சென்ற மின் கேபிளில் கசிவு ஏற்பட்டு தேங்கிய மழை நீரில் பாய்ந்ததால் மாணவன் நஃபில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, முறைகேடாக மின் கேபிள் பொருத்தியதே உயிர் இழப்பிற்கு காரணம் என மின் வாரியத்தை கண்டித்து 2 மணி நேரம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே இதே பகுதியில் 2 பேர் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த நிலையில், மூன்றாவதாக பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பள்ளி செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற போது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி சிறுவன் மீது பயங்கரமாக மோதியது.
- இதில் படுகாயமடைந்த குருபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கர்ணம் தெருவை சேர்ந்தவர் பொன்னழ கப்பன். இவரது மகன் குருபா(7). நத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி செல்வதற்காக சாலையை கடக்க முய ன்றார். அப்போது கொட்டா ம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி சிறுவன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த குருபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் விரைந்து சென்று சிறுவ னின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிகள் உள்ள பகுதியில் டிப்பர் லாரிகள் அதிவேக மாக வருவதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவ தாக கூறி வியாபாரிகள், பொது மக்கள் சாலைமறி யலில் ஈடுபட்டனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்ததால் அவர்கள் கலைந்து சென்ற னர். நேற்று திண்டுக்கல் அருகே சரக்கு வாகனம் மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழந்தான். அரசு விடுதியில் தங்கிய மாணவன் எப்படி வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார் என கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட னர்.
அதனைதொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இந்தநிலையில் லாரி மோதி மற்றும் ஒரு பள்ளி மாண வன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பட்டம் செய்து காற்றில் பறக்க விட்டு விளையாடி கொண்டிருந்த போது அங்கு மொட்டை மாடியில் உள்ள மின்கம்பி மீது மாட்டி கொண்டது.
- குல்தீப் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவருடைய மகன் குல்தீப் (வயது 12). இவர் கோடை விடுமுறையில் சூளகிரி அருகே உள்ள காமன் தொட்டி பகுதியில் உறவினர் வீட்டுக்கு வந்தார்.
சம்பவத்தன்று பட்டம் செய்து காற்றில் பறக்க விட்டு விளையாடி கொண்டிருந்த போது அங்கு மொட்டை மாடியில் உள்ள மின்கம்பி மீது மாட்டி கொண்டது.
இதனை எடுக்க சென்ற குல்தீப் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பாலாற்று தரைப்பாலத்தில் சென்ற போது நிலை தடுமாறி பைக் கவிழ்ந்து விழுந்தது.
- நெரும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ஆகாஷ் உயிரிழந்தார்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகன் ஆகாஷ், (வயது.13) நெரும்பூர் மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நண்பர் விஜய் (வயது.15) என்பவருடன், பைக்கில் அப்பகுதி பாலாற்று தரைப்பாலத்தில் சென்ற போது நிலை தடுமாறி பைக் கவிழ்ந்து விழுந்தது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு நெரும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ஆகாஷ் உயிரிழந்தார். திருக்கழுக்குன்றம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று பள்ளிக்கு செல்லாமல் தனது தந்தையின் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு சந்தோஷ் தனது நண்பனை பார்ப்பதற்காக வெப்படைக்கு சென்றார்.
- வெப்படை தெற்கு பாளையம் சாலையில் சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் வந்தபோது பின்னால் நந்தகுமார் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை கவனிக்காமல் திரும்பினார்.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அலமேட்டை சேர்ந்தவர் சந்தோஷ். இம்மாணவன் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு செல்லாமல் தனது தந்தையின் மோட்டார்சைக்கிளை எடுத்துக் ெகாண்டு சந்ேதாஷ் தனது நண்பனை பார்ப்பதற்காக வெப்படைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வெப்படை தெற்கு பாளையம் சாலையில் சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் வந்தபோது பின்னால் நந்தகுமார் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை கவனிக்காமல் திரும்பினார். அப்போது மோட்டார்சைக்கிள் மீது நந்தகுமார் என்பவரின் இருசக்கர வாகனம் ேமாதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சந்ேதாஷ் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் தலை மோதி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சந்தோஷை பள்ளிப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இந்த விபத்து சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவன் சந்தோஷ், மோட்டார்சைக்கிள் ஓட்டி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி பதை பதைக்க வைக்கும் வகையில் உள்ளது.
- மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஓட்டன்சத்திரம் 4 வழிச்சாலை பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகளவு செல்கிறது. இதனால் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் வந்து குளித்து செல்கிறார்கள். இந்த நிலையில் ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் குண்டடம் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 6 மாணவர்கள் சுதந்திர தினவிழா விடுமுறையை கொண்டாட அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர்.
அவர்கள் ஒன்றாக ஆற்றில் இறங்கி குளித்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்களில் 5 பேர் மட்டும் கரைக்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால் தங்களுடன் வந்த தாராபுரம் ராம்நகரை சேர்ந்த ராஜகோபாலின் மகன் ஜெரோமியா (வயது 16) என்பவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நண்பர்கள் சேர்ந்து ஆற்றில் இறங்கி தேடிபார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.
உடனடியாக இதுபற்றி தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு துறை வீரர்கள் நீரில் மூழ்கிய மாணவனை சுமார் 2 மணிநேரம் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆனதால் மாணவனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு மீண்டும் மீட்பு பணியில் தீயணைப்புதுறையினர் ஈடுபட்டனர். அப்போது மாணவன் ஜெரோமியா தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடல் மிதந்தது. இதையடுத்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:
திசையன் விளைமணலிவிளை சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார். தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீஜன் (வயது 13).இவர்கள் குடும்பத்துடன் வள்ளியூரில் வசித்து வருகின்றனர். ஸ்ரீஜன் வள்ளியூரில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று ஸ்ரீஜன் திசையன்விளையில் தனது பாட்டி வீட்டுக்கு வந்தான். மாலையில் சைக்கிளில் திசையன்விளை புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தான்.
அப்போது, பின்னால் தனியார் பள்ளி நிர்வாகி வந்த கார் அவன் மீது மோதியது. இதில் ஸ்ரீஜன் பலத்த காயமடைந்தான். இதையடுத்து ஸ்ரீஜன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவர் சரண்ராஜை (25) கைது செய்தனர்.
இதனிடையே மாணவன் ஸ்ரீஜன் காயமடைந்த நிலையில் கிடக்கும்போது அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி நிர்வாகி உதவவில்லையாம்.
இதை அறிந்த ஸ்ரீஜனின் உறவினர்கள் இன்று காலை மணலிவிளை எம்.ஜி.ஆர். பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர்.
தனியார் பள்ளி நிர்வாகியை கண்டித்தும், சிறுவன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு திசையன்விளை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த மறியல் காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது. பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து காமராஜ் நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராமன். கூலித் தொழிலாளி. இவரது மகன் முத்துச் செல்வம் (12). இவன் அதே பகுதி சங்கர் நகரில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
முத்து செல்வம் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் சைக்கிளில் புறப்பட்டு சென்ற அவன் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றான். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் அவன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முத்துச்செல்வத்திற்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவனை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவன் முத்துசெல்வம் பரிதாபமாக இறந்தான்.
இந்த விபத்து குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் சீலையம்பட்டி அருகில் உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்த குணசேகரன் மகன் ராமு (வயது10). இவன் அங்குள்ள ஊராட்சி தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று சீலையம்பட்டி செல்லும் சாலையில் தனது நண்பருடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த மணல் லாரி மாணவனின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.
இதுகுறித்து குணசேகரன், ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரியை ஓட்டி வந்த ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரை கைது செய்தனர்.






