search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student died"

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்
    • அவர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள புத்தரச்சல் காலனியை சேர்ந்த வஜ்ரவடிவேல் என்பவரது மகன் சந்தோஷ் (வயது 13). இவன் புத்தெரிச்சலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க ஓடிவந்த போது, அந்த வழியில் இருந்த ஒரு கிணற்றில் தவறி உள்ளே விழுந்து விட்டான். இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றின் உள்ளே இறங்கி கயிறு மூலம் மாணவனின் உடலை மீட்டனர் பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • நாகஜோதி அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • கடந்த 2 நாட்களாக நாகஜோதி உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள பெரிய போதுவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் நாகஜோதி (வயது 11). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களாக நாகஜோதி உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த நாகஜோதி திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியைடந்த அவரது பெற்றோர் உடனடியாக தங்களது மகளை மீட்டு அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நாகஜோதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மணிச்செல்வி, அபிலேஷ் இருவரும் ஒரு மொபட்டில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
    • இரு பைக்குகளும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன.

    புளியங்குடி:

    திருவேங்கடத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது20), சங்கரன்கோவிலை சேர்ந்தவர்கள் முகேஷ்குமார் (வயது 20), முகமது ரியாஸ் (20). இவர்கள் 3 பேரும் புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் நோக்கி சென்றனர்.

    அப்போது முள்ளிக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் மணிச்செல்வி (50), அவரது மகன் அபிலேஷ் (18) இருவரும் ஒரு மொபட்டில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    புளியங்குடி பிரதானசாலையில் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது இரு பைக்குகளும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் 5 பேரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மாணவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரெயில் மோதி உடல் சிதறி பலியானார்.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள சி.அம்மாபட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஜெகன் (வயது 17).

    தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று இரவு அதே பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரெயில் மோதி உடல் சிதறி பலியானார்.

    இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் அரசு பஸ் மோதி பலி மயிலாடுதுறை அருகே பரிதாபம்

    மயிலாடுதுறை:

    தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலியான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அக்களூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சக்திவேல் (வயது 15). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சக்திவேலும் அவருடைய நண்பர் பிரித்திவிராஜும் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மயிலாடுதுறை அருகே திருவாரூர் மெயின்ரோடு பேச்சாவடி பகுதியில் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் திடீரென சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இந்த விபத்தில் சக்திவேல், பிரித்திவிராஜ் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்திவேலை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். காயமடைந்த பிரித்திவிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சக்திவேலின் தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்திவேல் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளதால் இன்று (திங்கட்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    திசையன்விளையில் பள்ளி நிர்வாகி கார் மோதி சைக்கிளில் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதை அறிந்த உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    திசையன்விளை:

    திசையன் விளைமணலிவிளை சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார். தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீஜன் (வயது 13).இவர்கள் குடும்பத்துடன் வள்ளியூரில் வசித்து வருகின்றனர். ஸ்ரீஜன் வள்ளியூரில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று ஸ்ரீஜன் திசையன்விளையில் தனது பாட்டி வீட்டுக்கு வந்தான். மாலையில் சைக்கிளில் திசையன்விளை புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தான்.

    அப்போது, பின்னால் தனியார் பள்ளி நிர்வாகி வந்த கார் அவன் மீது மோதியது. இதில் ஸ்ரீஜன் பலத்த காயமடைந்தான். இதையடுத்து ஸ்ரீஜன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவர் சரண்ராஜை (25) கைது செய்தனர்.

    இதனிடையே மாணவன் ஸ்ரீஜன் காயமடைந்த நிலையில் கிடக்கும்போது அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி நிர்வாகி உதவவில்லையாம்.

    இதை அறிந்த ஸ்ரீஜனின் உறவினர்கள் இன்று காலை மணலிவிளை எம்.ஜி.ஆர். பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர்.

    தனியார் பள்ளி நிர்வாகியை கண்டித்தும், சிறுவன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு திசையன்விளை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த மறியல் காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது. பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பொம்மையார்பாளையத்தில் கார் மோதியதில் 7ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். பிறந்த நாளில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
    சேதராப்பட்டு:

    புதுவை அருகே தமிழக பகுதியான பொம்மையார் பாளையம் வெண்ணியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் தருண் (வயது12). இவன் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் தருணுக்கு பிறந்த நாளாகும். அன்று காலை பெற்றோருடன் பிறந்தநாளை கொண்டாடிய தருண் அன்று மாலை தனது மாமா திருமால் என்பவருடன் வெளியூருக்கு செல்ல பஸ்சுக்காக பொம்மையார் பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான்.

    அப்போது புதுவையில் இருந்து மரக்காணம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாணவன் தருண் மீது மோதிவிட்டு அருகில் உள்ள கோவிலை இடித்துவிட்டு நின்றது. இதில் படுகாயம் அடைந்த தருணை அருகில் இருந்த அவரது மாமா திருமால் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்து போனான்.

    திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது70). இவர் நாவற்குளத்தில் உள்ள மினரல் வாட்டர் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று காலை 6 மணிக்கு பணி முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். 

    திண்டிவனம்- புதுவை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த கார் எதிர்பாரதவிதமாக மணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். 

    இந்த 2 விபத்துகள் குறித்தும் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    கரூர் அருகே மொபட் மீது டிராக்டர் மோதியதில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானான். அவரது தாய் படுகாயம் அடைந்தார்.
    கரூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் வடக்கூர் தெருவை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா. இவரது மகன் முகமது இப்ராகிம் (வயது 14). மோகனூர் அரசு பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வந்தான்.

    சம்பவத்தன்று முகமது இப்ராகிம் அவனது தாய் பாத்திமா பேகத்துடன் கரூர் மாவட்டம் வாங்கல் கடைவீதியில் மொபட்டில் சென்றான். மொபட்டை அவனே ஓட்டிச்சென்றான். 

    இந்தநிலையில் அந்த வழியாக வந்த டிராக்டர், மொபட்டின் பின்புறம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது இப்ராகிம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். பாத்திமா பேகம் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்டுமன்னார்கோவில் அருகே வி‌ஷ வண்டு கடித்து மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் பிரதீப்(வயது 13). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று விடுமுறை என்பதால் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் பிரதீப் விளையாடி கொண்டிருந்தான். அப்போது மூங்கில் மரத்தில் இருந்த வி‌ஷவண்டுகள் பறந்து வந்து பிரதீப்பை கடித்தது. இதில் வலிதாங்காமல் அவன் அலறினான். சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தான்.

    அக்கம் பக்கத்தினர் பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான்.

    அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் பிரதீப் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வி‌ஷ வண்டு கடித்து மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
    பீளமேடு அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவி மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    கோவை சவுரிபாளையம் அருகே உள்ள நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் விஷ்ணு பிரியா (வயது 15). இவர் உடையாம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் நேற்று பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாடத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். விழா முடிந்ததும் தோழிகளுடன் வெளியே சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினார்.

    வீட்டுக்கு செல்வதற்காக விஷ்ணு பிரியா பீளமேடு ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் விஷ்ணு பிரியா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ரெயில் அடிபட்டு இறந்து கிடந்த விஷ்ணு பிரியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோளிங்கர் அருகே பைக் மோதி 7-ம் வகுப்பு மாணவி பலியான அதிர்ச்சியில் பெரியப்பாவும் இறந்தார்.

    வேலூர்:

    சோளிங்கர் அடுத்த ஜிகுலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஸ்வேதா (12). சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த மாணவி ஸ்வேதா மீது அந்த வழியாக வேகமாக வந்த பைக் மோதியது.

    இந்த விபத்தில் மாணவி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மாணவியின் பெற்றோர் மற்றும் பெரியப்பா வீரராகவன், உறவினர்கள் சம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர். மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    தம்பி மகள் இறந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாத பெரியப்பா வீரராகவன் அதிர்ச்சியில் உறைந்தார். திடீரென மாணவி உடல் அருகே மயங்கி சுருண்டு விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் வீரராகவனை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வீரராகவன் இறந்ததாக கூறினர்.

    ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பி மகள் இறந்த அதிர்ச்சியில் பெரியப்பா உயிரிழந்த சம்பவம் ஜிகுலூர் கிராம மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலாடுதுறை அருகே வீட்டின் மாடியில் மழைநீர் தேங்கி நின்றதை வெளியேற்றும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி தாக்கியதில் கல்லூரி மாணவர் பலியானார்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி மெயின்ரோடு மேட்டிருப்பு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் அமிர்த கணேசன் (வயது 18). இவர் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை அமிர்த கணேசன் அப்பகுதியில் உள்ள தனது தாத்தா சண்முகம் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வீட்டின் மாடியில் மழை நீர் தேங்கி அடைத்திருப்பதை பார்த்தார். இதனால் தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்தார். அப்போது அவர் செல்போன் பேசிய படியே தேங்கி கிடந்த தண்ணீரில் இறங்கினார்.

    அங்கு தாழ்வாக சென்ற மின்கம்பி , அமிர்த கணேசன் உடல் மீது பட்டதில் மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். நீண்டநேரமாக அமிர்த கணேசனை காணாததால் அவரது உறவினர்கள் தேடினர். அப்போது வீட்டின் மாடியில் அமிர்த கணேசன் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தரங்கம்பாடி தாசில்தார் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் மற்றும் செம்பனார்கோவில் போலீசார் விரைந்து வந்தனர்.

    மறியல் செய்தவர்களுடன் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் , குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சீரமைக்க வேண்டும். பலியான அமிர்த கணேசன் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மயிலாடுதுறை சப்- கலெக்டர் தேன்மொழி விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் மறியல் செய்த உறவினர்களிடம் , இதுபற்றி அரசு கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.

    இதன்பின்னர் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத் தால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×