குஜிலியம்பாறையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவர் பலி

மாணவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரெயில் மோதி உடல் சிதறி பலியானார்.ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

குஜிலியம்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள சி.அம்மாபட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஜெகன் (வயது 17).

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று இரவு அதே பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரெயில் மோதி உடல் சிதறி பலியானார்.

இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com