ஆனைமலை அருகே 6-ம் வகுப்பு மாணவி திடீர் சாவு

நாகஜோதி அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக நாகஜோதி உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார்.
ஆனைமலை அருகே 6-ம் வகுப்பு மாணவி திடீர் சாவு
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள பெரிய போதுவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் நாகஜோதி (வயது 11). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 2 நாட்களாக நாகஜோதி உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த நாகஜோதி திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியைடந்த அவரது பெற்றோர் உடனடியாக தங்களது மகளை மீட்டு அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நாகஜோதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com