பல்லடத்தில் கிணற்றில் தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்அவர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பல்லடம் : 

பல்லடம் அருகே உள்ள புத்தரச்சல் காலனியை சேர்ந்த வஜ்ரவடிவேல் என்பவரது மகன் சந்தோஷ் (வயது 13). இவன் புத்தெரிச்சலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க ஓடிவந்த போது, அந்த வழியில் இருந்த ஒரு கிணற்றில் தவறி உள்ளே விழுந்து விட்டான். இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றின் உள்ளே இறங்கி கயிறு மூலம் மாணவனின் உடலை மீட்டனர் பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com