search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school student killed"

    • நேற்று பள்ளிக்கு செல்லாமல் தனது தந்தையின் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு சந்தோஷ் தனது நண்பனை பார்ப்பதற்காக வெப்படைக்கு சென்றார்.
    • வெப்படை தெற்கு பாளையம் சாலையில் சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் வந்தபோது பின்னால் நந்தகுமார் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை கவனிக்காமல் திரும்பினார்.

    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அலமேட்டை சேர்ந்தவர் சந்தோஷ். இம்மாணவன் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு செல்லாமல் தனது தந்தையின் மோட்டார்சைக்கிளை எடுத்துக் ெகாண்டு சந்ேதாஷ் தனது நண்பனை பார்ப்பதற்காக வெப்படைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வெப்படை தெற்கு பாளையம் சாலையில் சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் வந்தபோது பின்னால் நந்தகுமார் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை கவனிக்காமல் திரும்பினார். அப்போது மோட்டார்சைக்கிள் மீது நந்தகுமார் என்பவரின் இருசக்கர வாகனம் ேமாதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சந்ேதாஷ் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் தலை மோதி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சந்தோஷை பள்ளிப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    விசாரணை

    இந்த விபத்து சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளி மாணவன் சந்தோஷ், மோட்டார்சைக்கிள் ஓட்டி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி பதை பதைக்க வைக்கும் வகையில் உள்ளது.

    கறம்பக்குடி அருகே புளியமரத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    ஆலங்குடி:

    கறம்பக்குடி அருகே தீத்தானிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சூர்யா (வயது 16). இவர் மழையூர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் தனது வீட்டில் அருகில் உள்ள புளியமரத்தில் ஏறியுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மழையூர் காவல் சப்- இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மாணவன் சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×