என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
நத்தத்தில் டிப்பர் லாரி மோதி பள்ளி மாணவன் பலி பொதுமக்கள் சாலை மறியல்
- பள்ளி செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற போது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி சிறுவன் மீது பயங்கரமாக மோதியது.
- இதில் படுகாயமடைந்த குருபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கர்ணம் தெருவை சேர்ந்தவர் பொன்னழ கப்பன். இவரது மகன் குருபா(7). நத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி செல்வதற்காக சாலையை கடக்க முய ன்றார். அப்போது கொட்டா ம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி சிறுவன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த குருபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் விரைந்து சென்று சிறுவ னின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிகள் உள்ள பகுதியில் டிப்பர் லாரிகள் அதிவேக மாக வருவதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவ தாக கூறி வியாபாரிகள், பொது மக்கள் சாலைமறி யலில் ஈடுபட்டனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்ததால் அவர்கள் கலைந்து சென்ற னர். நேற்று திண்டுக்கல் அருகே சரக்கு வாகனம் மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழந்தான். அரசு விடுதியில் தங்கிய மாணவன் எப்படி வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார் என கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட னர்.
அதனைதொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இந்தநிலையில் லாரி மோதி மற்றும் ஒரு பள்ளி மாண வன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






