search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School student died"

    • நேற்று மோட்டார் சைக்கிளில் ஆசாரிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
    • தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ரோசனம்பட்டியை சேர்ந்த பெருமாள் சாமி மகன் ரமேஷ்பிரபு (வயது16). இவர் பிளஸ்-1 படித்து வந்தார்.இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் ஆசாரிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ்பிரபு உயிரிழந்தார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற போது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி சிறுவன் மீது பயங்கரமாக மோதியது.
    • இதில் படுகாயமடைந்த குருபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கர்ணம் தெருவை சேர்ந்தவர் பொன்னழ கப்பன். இவரது மகன் குருபா(7). நத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி செல்வதற்காக சாலையை கடக்க முய ன்றார். அப்போது கொட்டா ம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி சிறுவன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் படுகாயமடைந்த குருபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் விரைந்து சென்று சிறுவ னின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிகள் உள்ள பகுதியில் டிப்பர் லாரிகள் அதிவேக மாக வருவதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவ தாக கூறி வியாபாரிகள், பொது மக்கள் சாலைமறி யலில் ஈடுபட்டனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்ததால் அவர்கள் கலைந்து சென்ற னர். நேற்று திண்டுக்கல் அருகே சரக்கு வாகனம் மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழந்தான். அரசு விடுதியில் தங்கிய மாணவன் எப்படி வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார் என கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட னர்.

    அதனைதொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இந்தநிலையில் லாரி மோதி மற்றும் ஒரு பள்ளி மாண வன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த மகேஷ் இவரது மகன் அஜயை தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார்
    • எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகேஷ்.

    பள்ளி மாணவன்

    இவரது மகன் அஜய் ( வயது 12) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளி செல்வதற்காக அஜயை மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    தாளமுத்து நகர் அருகே உள்ள ராஜபாளையம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்றபோது தண்ணீர் லாரியை முந்தி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    அப்போது லாரி அஜய் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக லாரி டிரை வரை பிடித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஐந்துவீடு நீர்வீழ்ச்சியில் வாலிபர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
    • தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் நீர் வீழ்ச்சியில் சிக்கிய வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பெருமாள் மலையை அடுத்து பேத்துப்பாறை கிராமம் உள்ளது. இங்குள்ள கணேசபுரம் பகுதியை அடுத்துள்ளது ஐந்து வீடு நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி யில் பல ஆண்டுகளாக பலர் தவறி விழுந்து பலியாகி உள்ளனர். இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாகவும் உள்ளது. இருப்பினும் சுற்றுலாப்பயணிகள் தடை செய்யப்பட்ட இந்த அருவியை கண்டு ரசிக்க ஆபத்தான பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இது பற்றி வனத்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்து வருகின்றனர். பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாயுடுபுரம் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த தினகர் மகன் பிரின்ஸ் (17) என்பவர் தனது நண்பர்கள் 6 பேருடன் இந்த அருவிக்கு குளிக்க சென்றார். ஆபத்தை உண ராத நண்பர்கள் நீர்வீழ்ச்சி யின் பாதுகாப்பற்ற பகுதிக்கு சென்றனர்.

    அப்போது பிரின்ஸ் எதிர்பாராத விதமாக அருவியில் தவறி விழுந்தார். தகவல் அறிந்த அப்பகுதியினர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் ெதரி வித்தனர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் நீர் வீழ்ச்சியில் சிக்கிய பிரின்சின் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நீர்வீழ்ச்சி பகுதியினை பாதுகாப்பு வேலிகள் கொண்டு மூட வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மிகவும் ரசிக்க தக்க வகையில் உள்ள இந்த ஐந்து வீடு அருவியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் அதிக மான பாதுகாப்பு வேலி களை அமைக்க வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையெனில் முழுமையாக இப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதி யாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி யுள்ளனர். சுற்றுலா பயணி கள் மற்றும் பொதுமக்கள் நுழையாதவாறு பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என்பதை அனை வரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    தூளியில் விளையாடிய போது சுவற்றில் மோதி 2-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்பாபு இவரது மகள் சோபியா (வயது 7). இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் இருந்த சோபியா புடவையில் தொங்கவிடபட்டிருந்த தூளியில் உட்கார்ந்து விளையாடினார். அப்போது தூளியில் சோபியா வேகமாக விளையாடியதால் வீட்டின் சுவற்றில் மோதி கீழே விழுந்தார்.

    இதில் சோபியாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். மகளை கண்ட பெற்றோர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சோபியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பாடாலூர் அருகே மின்னல் தாக்கி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே  உள்ள உத்தங்கால் பகுதியை சேர்ந்தவர் விவேக் (வயது 17). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். 

    இந்நிலையில் விவேக் நேற்று மாலையில் அங்குள்ள ஒரு கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றார். கல்குவாரி குட்டை அருகே நின்ற போது இடி,மின்னலுடன் மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் விவேக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவேக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விவேக் மின்னல் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு காரணமா?  என விசாரித்து வருகிறார்கள். 
    விழுப்புரம் அருகே பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், மேல்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் சிவராமன், 18-ந் தேதியன்று காலை (நேற்று) செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் கட்டுமானப்பணிக்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிர் இழந்தார்.



    இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த துயரச்சம்பவத்தில் உயிர் இழந்த மாணவன் சிவராமனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிவராமனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே செட்டி மண்டபம் வெங்கடேசன் நகரை சேர்ந்தவர் மகாதேவன் மகன் சுபாஷ்(வயது17). அப்பகுதி பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் வந்துள்ளார். அப்போது நால்ரோடு அருகே வந்தபோது பின்னால் வந்த கார் சுபாஷ் மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறிய சுபாஷ் முன்னால் வந்த அரசு விரைவு பஸ் முன்பு விழுந்து படுகாயமடைந்தார்.

    அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அக்கு மாணவர் சுபாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இதுகுறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம் அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஅள்ளி புதூர் பக்கமுள்ளது பெரமன்கொட்டாய். இந்த ஊரைச் சேர்ந்தவர் சின்னவன், கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பெருமா. இவர்களின் மகள் பிரியா (வயது 13). இவர் பன்னிஅள்ளிபுதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று மாலை சிறுமி பிரியா தனது தாயாருடன் வீட்டு அருகில் உள்ள கிணற்று பக்கத்தில் துணி துவைத்து கொண்டிருந்தாள். அந்த நேரம் திடீரென்று பலத்த இடி சத்தத்துடன் மின்னல் ஏற்பட்டது. இதில் மின்னல் தாக்கி சிறுமி பிரியா பலத்த காயம் அடைந்தாள். மேலும் அருகில் இருந்த தாய் பெருமா மயக்கம் அடைந்தார்.

    இதை அருகில் இருந்தவர்கள் கவனித்து அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி பிரியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவளது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியின் தாய் பெருமாவிற்கு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்னல் தாக்கி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    ×