தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி 7-ம் வகுப்பு மாணவன் பலி -தந்தையுடன் பள்ளிக்கு சென்றபோது விபத்து

தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த மகேஷ் இவரது மகன் அஜயை தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார் எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது
தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி 7-ம் வகுப்பு மாணவன் பலி -தந்தையுடன் பள்ளிக்கு சென்றபோது விபத்து
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்து நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகேஷ்.

பள்ளி மாணவன்

இவரது மகன் அஜய் ( வயது 12) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளி செல்வதற்காக அஜயை மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

தாளமுத்து நகர் அருகே உள்ள ராஜபாளையம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் சென்றபோது தண்ணீர் லாரியை முந்தி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

அப்போது லாரி அஜய் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக லாரி டிரை வரை பிடித்து தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com