ராஜதானியில் விபத்தில் பள்ளி மாணவர் பலி

நேற்று மோட்டார் சைக்கிளில் ஆசாரிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ரோசனம்பட்டியை சேர்ந்த பெருமாள் சாமி மகன் ரமேஷ்பிரபு (வயது16). இவர் பிளஸ்-1 படித்து வந்தார்.இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் ஆசாரிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ்பிரபு உயிரிழந்தார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com