search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collide"

    பழைய வண்ணாரப்பேட்டையில் தண்ணீர் லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயபுரம்:

    பழைய வண்ணாரப் பேட்டை கழிவுநீர் ஏற்றும் நிலையம் கல்லறை சாலையில் உள்ளது. நேற்று மதியம் இதன் அருகே ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் நோக்கி வந்த ஒரு குடிநீர் லாரி அவர்மீது மோதியது. இதில் அந்த பெண், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிர் இழந்தார்.

    அவர் யார் என்று தெரியவில்லை. சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மஞ்சள் நிற சேலையும், சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். அவர் வைத்திருந்த பையில் காய்கறிகளும், துணிகளும் இருந்தன.

    லாரியை ஓட்டிய கிளீனர் அஜித்குமார் (20) கைது செய்யப்பட்டார். காசிமேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சின்னமனூர் அருகே அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பலியானான்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் சீலையம்பட்டி அருகில் உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்த குணசேகரன் மகன் ராமு (வயது10). இவன் அங்குள்ள ஊராட்சி தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று சீலையம்பட்டி செல்லும் சாலையில் தனது நண்பருடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த மணல் லாரி மாணவனின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.

    இதுகுறித்து குணசேகரன், ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரியை ஓட்டி வந்த ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரை கைது செய்தனர்.

    அரியாங்குப்பத்தில் காய்கறி வியாபாரி மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலியான சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் என்.ஆர். நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது81). இவர் தள்ளுவண்டி மூலம் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் ரோட்டில் தள்ளுவண்டியை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது காளியப்பன் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட காளியப்பன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் இன்றுகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆற்காடு அருகே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கலவை:

    ஆற்காடு அடுத்த பென்னகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம், கூலி தொழிலாளி. அவரது மனைவி அமலா, தம்பதிக்கு லோகேஸ்வரன் (3), சுதர்சன் (2) என 2 மகன்கள் இருந்தனர். லோகேஸ்வரன் கலவை அருகேயுள்ள பெரும்பள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.

    தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற லோகேஸ்வரன் மாலை பள்ளி பஸ்சில் வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு அருகே பள்ளி பஸ் நின்றது.

    லோகேஸ்வரனை அழைத்து செல்ல அவரது தாய் அமலா குழந்தை சுதர்சனையும் அழைத்து வந்தார்.

    லோகேஸ்வரன் பஸ்சில் இருந்து இறங்கியவுடன் டிரைவர் பஸ்சை இயக்கியுள்ளார். அப்போது சுதர்சன் பஸ்சின் முன்னால் ஓடியதை கவனிக்காததால் பஸ் சுதர்சன் மீது ஏறி இறங்கியது.

    இதில் உடல் நசுங்கி சுதர்சன் சம்பவ இடத்திலேயே பலியானான். இதனை கண்ட தாய் அமலா கதறி துடித்தார். விபத்துக்கு காரணமான டிரைவரை பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கி வாழப்பந்தல் போலீசில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கு காரணமான மேச்சேரியை சேர்ந்த பஸ் டிரைவர் சந்திரனை போலீசார் கைது செய்தனர். தாய் கண் முன்னே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கீழ்ப்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தையடுத்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். #Accident
    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு முதல் தெருவை சேர்ந்தவர் ஓமன் மேத்யூ. இவரது மகள் ஜெமீமா அச்சு மேத்யூ (12).

    இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இன்று காலை 7.30 மணி அளவில் தனது சித்தப்பாவுடன் ஜெமீமா மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் ஜெமீமா தவறி கீழே விழுந்து லாரியின் அடியில் சிக்கினார்.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பள்ளி சென்ற மாணவி சீருடையுடன் விபத்தில் பலியான சம்பவம் அவரது உறவினர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. #Accident

    உசிலம்பட்டி அருகே அரசு பஸ் மோதியதில் மூதாட்டி உயிரிழந்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூரைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 61).

    இவர் இன்று காலை அங்குள்ள மதுரை சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையை நோக்கி அரசு பஸ் வேகமாக வந்தது.

    அந்த பஸ் எதிர்பாராத விதமாக சாலையை கடந்த லட்சுமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து செக்கானூரணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வால்பாறையில் வேன்-ஆம்னி கார் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து சேக்கல்முடி சப்-இன்ஸ்பெக்டர் காலிப் விசாரணை நடத்தி வருகிறார்.
    வால்பாறை:

    வால்பாறையிலிருந்து சோலையார் அணைக்கு செல்லும் வழியில் உருளிக்கல் எஸ்டேட் பெரியகடை பகுதியைச் சேர்ந்தவர் முகமதுஅசீக்(18).இவர் சாலை ஓரத்தில் தனது வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனை ஓட்டிக் கொண்டு சாலைக்குவந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து உருளிக்கல் எஸ்டேட்டிலிருந்து வால்பாறை நோக்கி வந்த ஆம்னி காரின் மீது மோதியது.

    இதில் ஆம்னி கார் அப்பளம் போல நொறுங்கி சாலை ஓரத்திலிருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது.இதில் மாருதி ஆம்னி கார் டிரைவர் கிருஷ்ணகுமார்(24), தங்கவேல்(66), பழனியம்மாள்(60), ராணி(58), அபிசக்தி(11), சங்கர்(11), அங்கம்மாள்(60), கனகா(32) ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர்.

    இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களில் தங்கவேல், பழனியம்மாள் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்கள்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த சேக்கல்முடி சப்-இன்ஸ்பெக்டர் காலிப் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவாடானை அருகே இன்று காலை சுற்றுலா வேன்-மணல் லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 13 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் கிராமத்தில் ஏராளமான மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணிக்கு செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி இன்று அதிகாலை அவர்கள் வேனில் புறப்பட்டனர். பெண்கள், சிறுவர் சிறுமிகள் என 17 பேர் பயணம் செய்தனர். தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த ஜான் (வயது 24) வேனை ஓட்டினார்.

    இன்று காலை 8 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள நாகனேந்தல் மெயின் ரோட்டில் வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே காட்டு மன்னார் கோவிலில் இருந்து ராமநாதபுரத்திற்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.

    எதிர்பாராத விதமாக வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் மற்றும் லாரியின் முன்பகுதி சேதமடைந்தன.

    வேனில் இருந்த புஷ்பராஜ் (36), அவரது மகன் ரிப்பான் (12), அல்போன்ஸ் மனைவி புனிதா (32), வேன் டிரைவர் ஜான் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பாலைக்குடி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 5 சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு லாரி, வேன் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்தப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    ×