மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி.

பட்டம் செய்து காற்றில் பறக்க விட்டு விளையாடி கொண்டிருந்த போது அங்கு மொட்டை மாடியில் உள்ள மின்கம்பி மீது மாட்டி கொண்டது.குல்தீப் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி.
Published on

கிருஷ்ணகிரி,

சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவருடைய மகன் குல்தீப் (வயது 12). இவர் கோடை விடுமுறையில் சூளகிரி அருகே உள்ள காமன் தொட்டி பகுதியில் உறவினர் வீட்டுக்கு வந்தார்.

சம்பவத்தன்று பட்டம் செய்து காற்றில் பறக்க விட்டு விளையாடி கொண்டிருந்த போது அங்கு மொட்டை மாடியில் உள்ள மின்கம்பி மீது மாட்டி கொண்டது.

இதனை எடுக்க சென்ற குல்தீப் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com