என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Student Dead"

    • மின் வாரியத்தை கண்டித்து 2 மணி நேரம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பூமிக்கு அடியில் சென்ற மின் கேபிளில் கசிவு ஏற்பட்டு தேங்கிய மழை நீரில் பாய்ந்ததால் மாணவன் நஃபில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து, முறைகேடாக மின் கேபிள் பொருத்தியதே உயிர் இழப்பிற்கு காரணம் என மின் வாரியத்தை கண்டித்து 2 மணி நேரம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஏற்கனவே இதே பகுதியில் 2 பேர் மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த நிலையில், மூன்றாவதாக பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பாலாற்று தரைப்பாலத்தில் சென்ற போது நிலை தடுமாறி பைக் கவிழ்ந்து விழுந்தது.
    • நெரும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ஆகாஷ் உயிரிழந்தார்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பகுதியை சேர்ந்த குமார் என்பவரது மகன் ஆகாஷ், (வயது.13) நெரும்பூர் மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நண்பர் விஜய் (வயது.15) என்பவருடன், பைக்கில் அப்பகுதி பாலாற்று தரைப்பாலத்தில் சென்ற போது நிலை தடுமாறி பைக் கவிழ்ந்து விழுந்தது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு நெரும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ஆகாஷ் உயிரிழந்தார். திருக்கழுக்குன்றம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சுப்ரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்குமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். விவசாயி. இவரது மகள் சுப்ரியா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இவர் இன்று காலை தக்காளி பறிப்பதற்காக அவரது வீட்டின் பின்புறம் தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் மாணவி சுப்ரியா தவறி விழுந்தார். இதில் நீச்சல் தெரியாததால் மாணவி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் மற்றும் சாமல்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் சுப்ரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மாணவி சுப்ரியாவின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×