search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth dies"

    தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் நாஞ்சிகோட்டை அருகே உள்ள நா.வல்லுண்டாம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டார் .

    தஞ்சை அருகே கொல்லான்கரை-வடக்குப்பட்டு சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் சூர்யா பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மார்த்தாண்டத்தில் காம்பவுண்டு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    குழித்துறை:

    அருமனை முழுக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஐசக். இவரது மகன் ஷானு (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்தவர் ரோகன் (26).

    இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் இருவரும் குழித்துறை கழுவன்திட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் ஷானுவின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது.

    திடீரென ரோட்டோரத்தில் இருந்த காம்பவுண்டு சுவர் மீது மோதியதில் ஷானு, ரோகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடல் பகுதியில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    படுகாயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஷானு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஷானு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பழனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர்.
    பழனி:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள சிக்கினாபுரத்தை சேர்ந்தவர் சங்கிலி. இவரது மகன் சரண்ராஜ் (வயது 22).இவர் தாராபுரத்தில் மினி வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (24),பிரசாந்த்(23), அருண்(22), சூர்யா(19), அஜித்(20), ரவி(22),ஜெகதீஷ் (21), ஆகிய 8 பேர்கள் பழனி அருகே உள்ள குதிரையாறு அணைக்கட்டு பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா வந்தனர். பின்னர் மீண்டும் தாராபுரத்திற்கு புறப்பட்டனர். 4 மோட்டார் சைக்கிள்களில் இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு சென்றனர்.

    பழனியிலிருந்து தாளையம் வழியாக தாராபுரம் செல்லும் சாலையில் சந்தன்செட்டிவலசு என்ற கிராமம் அருகே இவர்கள் சென்ற போது ரோட்டின் திருப்பத்தில் இருந்த பாறையில் சரண்ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானது. தொடர்ந்து வேகமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள்களும் கட்டுபாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக அதே பாறையில் மோதியது. இந்த விபத்தில் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். கார்த்திக், பிரசாந்த் ஆகியோர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக் காக கோவை கொண்டு செல்லப் பட்டனர். விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது வாகனம் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவர் திடீரென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து வருவாய் ஆய்வாளர் ராஜா கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாகன விபத்தில் பலியான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் விபத்தில் இறந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. #EsplanadePoliceStation
    சென்னை:

    சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 20). மாற்றுத்திறனாளியான இவர் பிராட்வேயில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார்.

    அந்த கடையின் மேல் தளத்தில் உள்ள வீட்டில் கடந்த 19-ந்தேதி 20 பவுன் நகைகள் திருட்டு போனது. இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமார், அவரது நண்பர்கள் விக்னேஷ், அஜித்குமார் ஆகியோரை கடந்த 20-ந்தேதி அதிகாலை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இந்த நிலையில் போலீஸ் காவலில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி மீனாகுமாரி தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.

    இதுதொடர்பாக மனித உரிமை ஆணைய போலீசார் விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார். #EsplanadePoliceStation
    எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #EsplanadePoliceStation
    சென்னை:

    சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயக்குமார் (20). பிராட்வேயில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடையில் அவருடன் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய வாலிபர்களும் வேலை செய்து வருகிறார்கள். கடையின் மேல்பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நகை திருட்டு போய் உள்ளது.

    இது தொடர்பான புகாரின் அடிப்படையில் எஸ்பிளனேடு போலீசார் ஜெயக்குமார் உள்பட 3 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஜெயக்குமார் இறந்துவிட்டார். ஜெயக்குமார் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


    ஆனால், அவரை போலீசார் லாக்கப்பில்  வைத்து அடித்து கொன்றுவிட்டதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்ற இருவரையும் விடுவிக்க வலியுறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில், எஸ்பிளனேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    வாலிபர் ஜெயக்குமார் இறந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக மாஜிஸ்திரேட்டு ஆனந்தன்  நியமிக்கப்பட்டார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். உயிரிழந்த வாலிபரின் பெற்றோரிடமும், எஸ்பிளனேடு போலீசாரிடமும் விசாரணை நடத்தினார்.   #EsplanadePoliceStation 
    சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் அடைந்ததையடுத்து, இன்ஸ்பெக்டர் குணசேகரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். #EsplanadePoliceStation
    சென்னை:

    சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயக்குமார் (20). பிராட்வேயில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடையில் அவருடன் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய வாலிபர்களும் வேலை செய்து வருகிறார்கள். கடையின் மேல்பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நகை திருட்டு போய் உள்ளது.

    இது தொடர்பான புகாரின் அடிப்படையில் எஸ்பிளனேடு போலீசார் ஜெயக்குமார் உள்பட 3 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஜெயக்குமார் இறந்துவிட்டார். ஜெயக்குமார் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.



    ஆனால், அவரை போலீசார் லாக்கப்பில்  வைத்து அடித்து கொன்றுவிட்டதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்ற இருவரையும் விடுவிக்க வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில், எஸ்பிளனேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார். #EsplanadePoliceStation
    எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். #EsplanadePoliceStation
    ராயபுரம்:

    சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயக்குமார் (20). பிராட்வேயில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    அந்த கடையில் அவருடன் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய வாலிபர்களும் வேலை செய்து வருகிறார்கள். கடையின் மேல்பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நகை திருட்டு போய் உள்ளது.

    இதுபற்றி எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் ஜெயக்குமார் உள்பட 3 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஜெயக்குமாரின் உறவினருக்கு போலீசார், ஜெயக்குமார் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.


    விசாரணைக்கு அழைத்து சென்ற மகனை லாக்கப்பில் வைத்து அடித்து கொன்று விட்டதாக பெற்றோர் கதறினார்கள். போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    உதவி கமி‌ஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இதற்கிடையில் போலீஸ் நிலையத்தில் இறந்த ஜெயக்குமாரின் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அஜித் குமார், விக்னேஷ் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கியதால்தான் ஜெயக்குமார் உயிர் இழந்ததாகவும், அதனால் மற்ற 2 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டனர். #EsplanadePoliceStation
    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீடு கட்டுமான பணிக்காக மணல் அள்ளியபோது மண் சரிந்து பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன், விவசாயி. இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 21), பட்டதாரி. இவரது நண்பர் பேளூரைச் சேர்ந்த முத்து.

    லோகேஸ்வரன் வீட்டு கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக மணல் தேவைப்படுவதால் லோகேஸ்வரனும் அவரது நணபர் முத்துவும் பேளூர் வசிஷ்டநதி தடுப்பணை அருகே மணல் எடுக்க முடிவு செய்தனர்.

    அதன்படி இருவரும் நள்ளிரவில் அங்கு சென்று குழி தோண்டி மணல் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர் பாராதவிதமாக மணல் சரிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் இருவரும் மணலுக்குள் புதைந்தனர். ஆனால் முத்து மட்டும் தட்டுத்தடுமாறி வெளியே வந்து உறவினர்களிடம் வி‌ஷயத்தை கூறினார்.

    உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லோகேஸ்வரனை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். காயம் அடைந்த முத்துவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு லோகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாசில்தார் வள்ளிதேவி, மற்றும் வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் அந்தியூர் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாமணி இவரது மகன் வினோத் குமார்(வயது 28).

    கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வினோத்குமார் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு வினோத் குமார் தனது மோட்டார் சைக்கிளில் கோவையிலிருந்து அந்தியூருக்கு புறப்பட்டார்.

    விஜயமங்கலத்தில் இருந்து திங்களூர் செல்லும் வழியில் புதூர்மேட்டு என்ற இடத்தில் வந்த போது, ரோட்டோரம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலை மற்றும் உடம்பில் பலத்த அடிபட்டு மயங்கி உயிருக்கு போராடினார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை சிங்காநல்லூர் அருகே ரெயில் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர்- இருகூர் ரெயில் தண்டவாளம் இடையே ரெயிலில் அடிபட்டு ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து அந்த பகுதிமக்கள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் ஈரோடு மாவட்டம் கொல்லன் கோவில் கந்தசாமிபாளையத்தை சேர்ந்த ஸ்டீபன்துரை என்பவரின் மகன் ராஜ்குமார் (வயது 30) என்பதும் கோவை பீளமேடு பகுதியில் அறை எடுத்து தங்கி ஒரு கார் கம்பெனியில் கார் விற்பனை பிரதிநிதியாக இருந்தார் என்பது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கடலூர்:

    விழுப்புரம் வடபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மகன் சீனுவாசன்(வயது 25). இவர் இன்று காலை 11 மணியளவில் கடலூரை அடுத்த கூத்தப்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சீனுவாசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் அவர் தலைமீது ஏறியது. இதில் சீனுவாசன் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த சீனுவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×