என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே நின்ற லாரி மீது பைக் மோதல்- அந்தியூர் வாலிபர் பலி
    X

    பெருந்துறை அருகே நின்ற லாரி மீது பைக் மோதல்- அந்தியூர் வாலிபர் பலி

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் அந்தியூர் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாமணி இவரது மகன் வினோத் குமார்(வயது 28).

    கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வினோத்குமார் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு வினோத் குமார் தனது மோட்டார் சைக்கிளில் கோவையிலிருந்து அந்தியூருக்கு புறப்பட்டார்.

    விஜயமங்கலத்தில் இருந்து திங்களூர் செல்லும் வழியில் புதூர்மேட்டு என்ற இடத்தில் வந்த போது, ரோட்டோரம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலை மற்றும் உடம்பில் பலத்த அடிபட்டு மயங்கி உயிருக்கு போராடினார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×