search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani Accident"

    பழனி அருகே வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வியாபாரிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
    பழனி:

    ஒட்டன்சத்திரம் விஸ்வநாத நகரை சேர்ந்த சின்னதம்பி மகன் ராஜா (வயது28). இவர் மினி டோர் வேன் டிரைவர். தினசரி ஒட்டன்சத்திரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு காய்கறிகள் ஏற்றி செல்வது வழக்கம்.

    அதன்படி நேற்று இரவு காய்கறிகளை ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். வேனில் அதே பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மூர்த்தி (45), சின்ராஜ் மகன் அரசன் (18) ஆகியோரும் சென்றனர்.

    அதிகாலை 1½ மணி அளவில் நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அய்யம் பாளையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு தென்னை நார் ஏற்றி சென்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் வேனை ஓட்டி வந்த ராஜா உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.மூர்த்தி, அரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் டிராக்டரில் வந்த டிரைவர் கிருஷ்ணமூர்த்தி, தர்மன் ஆகியோரும், வேனை ஓட்டி வந்த ராஜாவும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமிநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்த 3 பேரையும் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பழனி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர்.
    பழனி:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள சிக்கினாபுரத்தை சேர்ந்தவர் சங்கிலி. இவரது மகன் சரண்ராஜ் (வயது 22).இவர் தாராபுரத்தில் மினி வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (24),பிரசாந்த்(23), அருண்(22), சூர்யா(19), அஜித்(20), ரவி(22),ஜெகதீஷ் (21), ஆகிய 8 பேர்கள் பழனி அருகே உள்ள குதிரையாறு அணைக்கட்டு பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா வந்தனர். பின்னர் மீண்டும் தாராபுரத்திற்கு புறப்பட்டனர். 4 மோட்டார் சைக்கிள்களில் இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு சென்றனர்.

    பழனியிலிருந்து தாளையம் வழியாக தாராபுரம் செல்லும் சாலையில் சந்தன்செட்டிவலசு என்ற கிராமம் அருகே இவர்கள் சென்ற போது ரோட்டின் திருப்பத்தில் இருந்த பாறையில் சரண்ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானது. தொடர்ந்து வேகமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள்களும் கட்டுபாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக அதே பாறையில் மோதியது. இந்த விபத்தில் சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். கார்த்திக், பிரசாந்த் ஆகியோர் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக் காக கோவை கொண்டு செல்லப் பட்டனர். விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×