என் மலர்

  நீங்கள் தேடியது "youth dies"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளிக்குடி 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  பேரையூர்:

  திருமங்கலம் மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், பெயிண்ட் கடை அதிபர். இவரது மகன் சுரேஷ்குமார் (25).

  சகோதரர் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் விருதுநகர் சென்றார். அவருடன் கல்லூரி மாணவரான பிருத்விராஜ் (19) என்பவரும் சென்றார்.

  கள்ளிக்குடி 4 வழிச்சாலையில் சென்றபோது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இந்த விபத்தில் சுரேஷ் குமார் மற்றும் பிருத்வி ராஜ் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்க முயன்றனர். ஆனால் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

  பிருத்விராஜ் காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவகாசியைச் சேர்ந்த கார் டிரைவர் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். டிரைவரை கைது செய்ய கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  நாட்டறம்பள்ளி:

  நாட்டறம்பள்ளி அடுத்த வெட்டபட்டு பகுதியை சேர்ந்தவர் அரிஷ் (வயது 23). இவரது நண்பர்கள் அன்பு (27). நவீன் (26). இவர்கள் 3 பேரும் நேற்று நாட்டறம்பள்ளியில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

  எல்லபல்லி என்ற இடத்தில் பைக் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசபட்டு 3 பேரும் படுகாயமடைந்தனர்.

  நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரிஷ் இறந்தார். அன்பு, நவீன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

  விபத்து பற்றி தகவலறிந்த உறவினர்கள் கார் டிரைவரை கைது செய்ய கோரி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டி.எஸ்.பி முரளி உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் கத்தாரி பகுதியை சேர்ந்த கரியன் என்பரை கைது செய்தனர். இதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி வந்த வாலிபர் மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  வேதாரண்யம்:

  நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகன் சிவதாஸ் (வயது22). இவர் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி அண்டர்காட்டில் இருந்து வேதாரண்யத்துக்கு ஓட்டி சென்றார். அப்போது அந்த வழியாக ஞானவிக்னேஷ், விஜயராகவன் ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவதாஸ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஞானவிக்னேசும், விஜய ராகவனும், காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  சிவதாஸ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிவதாசின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி. ஸ்ரீகாந்த் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்பகோணம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விபத்தில் பெண் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
  கும்பகோணம்:

  நாச்சியார்கோவிலில் இருந்து கும்பகோணத்திற்கு நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் அரவிந்தன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அதே மோட்டார் சைக்கிளில் பின்னால் ஆகாஷ், கவுசல்யா ஆகியோர் அமர்ந்து சென்றனர்.

  கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல அரவிந்தன் முயன்றார்.

  அப்போது எதிரே வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அரவிந்தன் படுகாயமடைந்து பலியானார்.

  ஆகாஷ், கவுசல்யா ஆகிய இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியானவர் எந்த ஊர்? உடன் வந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தலையில் காயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  ஈரோடு:

  ஈரோடு மாமரத்துபாளையம் புது காலனியைச் சேர்ந்தவர் பாலு (வயது 27). தனியார் மில்லில் கேஷியராக உள்ளார். திருமணமாகவில்லை.

  இந்த நிலையில் பாலு சம்பவத்தன்று இரவு காரை வாய்க்கால் சொக்கலிங்கம் வீதியை சேர்ந்த செல்வராஜ (46) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

  மூலப்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த கார் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இதில் பாலு செல்வராஜ் இருவரும் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த பாலு சம்பவ இடத்திலேயே பலியானார். செல்வராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வராஜை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆரல்வாய்மொழியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  நாகர்கோவில்:

  மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் முன்னாசர்தார் (வயது 28). இவர் ஆரல்வாய் மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி வேலைபார்த்து வந்தார்.

  இன்று அதிகாலை அவர் செங்கல் சூளையில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேவசகாயம் மவுண்ட் அருகே அவர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது.

  இதில் தூக்கி வீசப்பட்டு 2 கால்களும் துண்டானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் அதனைப் பார்த்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் அங்கு பிணமாக கிடந்த முன்னாசர்தாரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னா சர்தாரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வந்த பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சாத்தான்குளம்:

  திசையன்விளையை அடுத்த இட்டமொழி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முத்துராஜ் (30). இவர் தனது உறவினரான கீழ கருங்கடல் தெற்கு தெருவை சேர்ந்த மந்திரம் (வயது45) என்பவருடன் கடந்த மாதம் 24-ந்தேதி கீழக்கருங்கடலில் இருந்து சாத்தான்குளத்துக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

  சாத்தான்குளம் அருகே புளியங்குளம் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது பைக்கின் பின்னால் இருந்த முத்துராஜ் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முத்துராஜ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொட்டியம் அருகே கார் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தொட்டியம்:

  நாமக்கல் மாவட்டம் வலையப்பட்டியை சேர்ந்தவர் நவநீதக்குமார் (36). இவர் தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல்நாய்க்கன்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.

  சம்பவத்தன்று நவநீதக்குமார் தனது மொபட்டில் வலைப்பட்டியில் இருந்து திருச்சி-நாமக்கல் சாலையில் மேய்க்கல்நாய்க்கன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தொட்டியம் அடுத்த வாள்வேல் புத்தூர் பிரிவு ரோடு அருகே வந்த போது தஞ்சாவூரில் இருந்துபெங்களூரு நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

  இந்த விபத்தில் நவநீதக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவநீதக்குமார் பரிதாபமாக இறந்தார்.

  இந்த விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டிவனம் அருகே இன்று அதிகாலை மினி வேன் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  திண்டிவனம்:

  சென்னை ஆவடியை சேர்ந்தவர் அனஸ் (வயது 20). இவர் மினி வேன் டிரைவர்.

  இவரும் அதே பகுதியை சேர்ந்த அப்துல்பாஷித் (20), பீர்முகைதீன் (24) ஆகியோர் ஒரு மினி வேனில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சென்றனர்.

  மாநாடு முடிந்ததும் நேற்று நள்ளிரவு அவர்கள் மினி வேனில் சென்னைக்கு புறப்பட்டனர். வேனை அனஸ் ஓட்டி வந்தார்.

  இன்று அதிகாலை 4 மணிக்கு அவர்கள் வந்த மினி வேன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் சாலையில் சென்று கொண்டிருந்தது.

  அப்போது திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ் முன்னால் சென்ற மினிவேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

  இதில் மினி வேன் கவிழ்ந்தது. வேனில் இருந்த அனஸ் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  மேலும் இந்த விபத்தில் வேனில் இருந்த அப்துல்பாஷித், பீர்முகைதீன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தஞ்சாவூர்:

  தஞ்சை மாவட்டம் நாஞ்சிகோட்டை அருகே உள்ள நா.வல்லுண்டாம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 24). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டார் .

  தஞ்சை அருகே கொல்லான்கரை-வடக்குப்பட்டு சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் சூர்யா பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print