search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world cup cricket"

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
    கார்டிப்:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா இங்கிலாந்தில் நாளை மறு நாள் (30-ந் தேதி) முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த 24-ந் தேதி தொடங்கிய பயிற்சி ஆட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) 2 பயிற்சி ஆட்டங்கள் நடக்கிறது. கார்டிப்பில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ஆடவில்லை. தேவையற்ற ஷாட்களை ஆடி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ரவீந்திர ஜடேஜா (54 ரன்கள்), ஹர்திக் பாண்ட்யா (30 ரன்கள்) மட்டுமே சற்று நிலைத்து நின்று ஆடினார்கள்.

    எனவே இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நல்ல நிலைக்கு திரும்பி நம்பிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமானதாகும். மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோத இருந்தது. மழை காரணமாக இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    பிரிஸ்டலில் நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியை சந்திக்கின்றது. இந்திய அணியை வீழ்த்தி இருந்த நியூசிலாந்து அணி தனது வெற்றியை தொடர முயலும். வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதியது. மழையால் இந்த ஆட்டம் பாதியில் ரத்தானது. எனவே இந்த ஆட்டத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி தீவிரம் காட்டும்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
     
    உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று நள்ளிரவு மும்பை விமான நிலையத்தில் இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி  தலைமையிலான இந்திய வீரர்கள் சென்றனர்.

    இந்நிலையில், கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுவிட முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சச்சின் தெண்டுல்கர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:



    உலகக்கோப்பையின் ஒவ்வொரு ஆட்டத்திலும் அணியில் உள்ள மற்ற வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும். தனி ஒருவராக போராடினால் மட்டும் கோப்பையை வென்றுவிட முடியாது.

    இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுபவர்கள். அவர்கள் அணியில் எந்த இடத்தில் இறங்கினாலும் கவலையில்லை. போட்டியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி வீரர்களை களமிறக்குவது முக்கியமானது.

    தற்போதைய சூழ்நிலையில் உலகக்கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு நமக்கு மிகவும் அதிகமுள்ளது என தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவி காலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்தார். #RaviShastri #WorldCup
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரியும், உதவி பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர் (பேட்டிங் பயிற்சியாளர்), பரத் அருண் (பந்துவீச்சு), ஸ்ரீதர் (பீல்டிங்) ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள். 2017-ம் ஆண்டு ஜூலையில் பொறுப்புக்கு வந்த இவர்களின் பதவி காலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் முடிவடைகிறது.

    முன்னாள் ஆல்-ரவுண்டரான ரவிசாஸ்திரி, இந்திய அணி வீரர்களுக்கு பிடித்தமானவராக இருக்கிறார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்தது. உலக கோப்பை போட்டிக்கு பிறகும் கூட அவர் தான் பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று பெரும்பாலான வீரர்கள் விரும்புவார்கள். ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டதில் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பங்களிப்பு முக்கியமானது என்று இந்திய கேப்டன் விராட் கோலி அடிக்கடி சொல்வார்.

    ஆனால் பதவி காலம் முடிந்ததும் அவரை அந்த பணியில் நீட்டிக்க வைப்பதோ அல்லது ஒப்பந்தத்தை புதுப்பிப்பதோ முடியாது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. உலக கோப்பையை இந்திய அணி வென்றாலும் கூட அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது. ஏனெனில் அந்த வகையிலான பிரிவுகள் எதுவும் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    எனவே தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும். பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் வர ரவிசாஸ்திரி விரும்பினால் அவரும் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் நேரடியாக இறுதிக்கட்ட பட்டியலில் இடம் பெற அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சச்சின் தெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்துவார்கள்.

    உலக கோப்பை போட்டி ஜூலை 14-ந்தேதி நிறைவடைகிறது. அந்த மாதத்தின் இறுதியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதாவது 14 நாட்களில் அந்த தொடர் தொடங்குகிறது. எனவே பயிற்சியாளரை தேர்வு செய்யும் நடைமுறை அதற்குள் முடிவடையாவிட்டால் இடைக்கால பயிற்சியாளர் இந்திய அணியுடன் அனுப்பி வைக்கப்படுவார். #RaviShastri #WorldCup
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரைக்கும் விராட கோலிக்கு டோனி தேவை என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் ஒட்டுமொத்த கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்து வருகிறார்.

    37 வயதாகும் டோனி, கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வந்தார். அபாரனமான கிரிக்கெட் திறமை, சிறப்பாக பீல்டிங் அமைப்பு, துல்லியமான ஸ்டம்பிங் ஆகியவற்றில் டோனியிடம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சமீப காலமாக அவரது பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டது.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.



    டி20-யில் இருந்து நீக்கப்பட்ட டோனி உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் திறமை பெற்றுள்ள டோனி உலகக்கோப்பை வரை விராட் கோலிக்கு வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி உலகக்கோப்பை வரை கட்டாயம் விளையாட வேண்டும். விராட் கோலிக்கு டோனி தேவை. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. டோனி பீல்டிங்கை சரியாக நிற்கும்படி அட்ஜஸ்ட் செய்வது உங்களுக்கே தெரியும். பந்து வீச்சாளர்களிடம் எப்படி பந்து வீச வேண்டும் இந்தியில் ஆலோசனை வழங்குவார். இது விராட் கோலிக்கு மிகப்பெரிய அளவில் பிளஸ்-யாக அமையும்’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடம் லெவன் அணி குறித்து இந்திய அணிக்கு தெளிவு இல்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். #TeamIndia
    உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்த தொடருக்கான சிறந்த அணியை கண்டறிவதில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்திய அணியில் ரோகித் சர்மா, தவான், விராட் கோலி ஆகியோருக்கு முதல் மூன்று இடங்கள் உறுதியாகிவிட்டது. அதேபோல் பந்து வீச்சில் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோரது இடம் உறுதியாகியுள்ளது. விக்கெட் கீப்பரில் டோனி இருந்தாலும், சமீப காலமாக அவரது பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டதால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

    4-வது மற்றும் 6-வது இடத்திற்கு பேட்டிங்கில் இந்தியா இன்னும் தீர்வு காணாமல் இருக்கிறது. தற்போது அம்பதி ராயுடை 4-வது இடத்திற்கு இந்தியா தயார் செய்து வருகிறது. உலகக்கோப்பை வரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.



    சுழற்பந்து வீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் கடந்த ஓராண்டிற்கு மேலாக விளையாடி வருகிறார்கள். ஆனால் தற்போது சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் அடிக்கடி நீக்கப்படுகிறார்கள். நேற்றைய போட்டியில் ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஹர்திக் பாண்டியா வெளியில் இருக்கிறார். கலீல் அஹமது 3-வது வேகப்பந்து வீச்சாளரான இடம்பிடித்துள்ளார்.

    இதனால் ஆடும் லெவன் அணி எது என்பதை இந்தியா இன்னும் கண்டறியவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பைக்கான சிறந்த ஆடும் லெவன் அணி எது என்பதில் இந்தியா இன்னும் தெளிவாக இல்லை என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
    ×