search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England World Cup 2019"

    வேறு அணியில் இருந்து ஒரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டுமென்றால், யாரைத் தேர்வு செய்வீர்கள் என்று 10 அணி கேப்டன்களும் பதில் அளித்துள்ளனர்.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை இந்தத்தொடர்  நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் மற்றும் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    ரவுண்டு ராபின் முறையில் இத்தொடர் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    இந்தப்போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் லண்டனில் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினார்கள். அப்போது ஒவ்வொரு அணி கேப்டன்களிடமும் உங்களுக்கு பிடித்த வீரர் யார்? என்று கேட்கப்பட்டது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனக்கு பிடித்த வீரர் தென்ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளிசிஸ் என்று பதில் அளித்தார். இந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்சர் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் தெரிவித்தார்.



    தென்ஆப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் கூறும்போது, “பேட்டிங்கில் விராட் கோலியை பிடிக்கும். பந்து வீச்சில் பும்ரா, ரஷித்கான் ஆகியோரை பிடிக்கும் என்றார். மற்ற கேப்டன்களுக்கு விரும்பிய வீரர்கள் விவரம்:-

    வில்லியம்சன் (நியூசிலாந்து)- ரஷித் கான்.

    மோர்தசா (வங்காளதேசம்)- விராட் கோலி.

    மோர்கன் (இங்கிலாந்து)- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலிய பயிற்சியாளர்களில் ஒருவராக தற்போது இருக்கிறார்).

    சர்பராஸ் அகமது (பாகிஸ்தான்)- பட்லர்.

    ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா)- ரபாடா.

    கருணாரத்னே (இலங்கை)- பென் ஸ்டோக்ஸ்.

    ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்)- எனது அணியில் உள்ள வீரர்களுடன் மகிழ்ச்சி

    குல்பாதின் நைப் (ஆப்கானிஸ்தான்)- யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆட்டத்தை பொறுத்து முடிவு.
    உலகக்கோப்பையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

    இந்த அணியில் உள்ள விராட் கோலி மற்றும் பும்ரா முக்கிய துருப்புச்சீட்டுக்கள். அவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கோல் ஹோல்டிங் கூறுகையில் ‘‘விராட் கோலி, பும்ரா ஆகிய இரண்டு பெயர்களை நான் குறிப்பிடுகிறேன். குவாலிட்டி வீரர்களான இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.



    இங்கிலாந்து அணி அதன் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. சமீப காலமாக அவர்கள் ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் உண்மையிலேயே பேலன்ஸ் அணி.

    இந்தியா சிறப்பாக விளையாடுகிறது. மேலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. நெருக்கடியான நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்று சாம்பியன் அணிக்கு தெரியும். இரண்டு அணிகளில் ஒன்று கோப்பையை வென்றால் நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன்’’ என்றார்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் குறைவு என கவுதம் காம்பிர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகிறது.

    உலகக்கோப்பையை வெல்வதற்கு சாதகமான அணிகள் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகிய குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர்களும் ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களும் உள்ளனர்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் தேவை என முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பிர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் குறைவு என நினைக்கிறேன். பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு உதவியான இன்னொருவர் தேவை. நாம் இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோரை கொண்டுள்ளோம் என்று நீங்கள் வாதம் செய்யலாம், ஆனால், என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



    ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும் என்பதால் இது சிறந்த தொடராக இருக்கும். இது நமக்கும் உண்மையிலேயே சிறந்த உலகக்கோப்பை சாம்பியனை வெளிப்படுத்தும். வருங்காலத்திலும் ஐசிசி இந்த முறையை கடைபிடிக்க வேண்டும்’’ என்றார்.
    உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மட்டுமே வரவில்லை. மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் எச்சரித்துள்ளார். #CWC2019 #WorldCup2019
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற 30-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றில் சிறப்பாக விளையாடி ஆப்கானிஸ்தான் அணி இடம்பிடித்தது.

    அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக ரஷித் கான் உள்ளார். ஐசிசி தரவரிசையில் டி20 கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்கும் ரஷிகத் கான், உலகக்கோப்பையில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு எங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவது குறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடுவது அவசியமானது. உலகக்கோப்பையைில் சும்மா வந்து கலந்து கொண்டு பின்னர் சொந்த நாடு திரும்ப வேண்டும் என்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஒரு அணியாக சரியான திட்டமிடுதலுடன் இங்கிலாந்து செல்வோம்.



    உலகக்கோப்பை தொடரில் விளையாடும் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியதால், உலகக்கோப்பைக்கு தயாராக ஐபிஎல் மிகச்சிறந்த தொடராகும். தலைசிறந்த பயிற்சியாளர்கள் நம்மீது அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். இது எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. மிகவும் சந்தோசமாக ஐதராபாத் அணியில் விளையாடுகிறேன். ஏராளமான நேர்மறையான விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதை உலகக்கோப்பைக்கு எடுத்துச் செல்வேன்.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கு நிச்சயம் இடம் உண்டு என்று டெஸ்ட் அணி துணைக் கேப்டன் ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Rahane
    புவனேஸ்வரில் நடைபெற்ற எகம்ரா விளையாட்டு இலக்கிய விழாவில் ரகானே கலந்து கொண்டார். அப்போது ரகானேவிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் தனக்கு நிச்சயம் இடம் உண்டு என்று ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பேன். இதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. இதற்காகத்தான் நான் விஜய் ஹசாரோ மற்றும் தியோதர் டிராபி தொடரில் விளையாடினேன்.



    இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் போனது. நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம். நாங்கள் சிறந்த அணியாக உள்ளதால், வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன்’’ என்றார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரைக்கும் விராட கோலிக்கு டோனி தேவை என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் ஒட்டுமொத்த கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்து வருகிறார்.

    37 வயதாகும் டோனி, கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வந்தார். அபாரனமான கிரிக்கெட் திறமை, சிறப்பாக பீல்டிங் அமைப்பு, துல்லியமான ஸ்டம்பிங் ஆகியவற்றில் டோனியிடம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சமீப காலமாக அவரது பேட்டிங்கில் தொய்வு ஏற்பட்டது.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.



    டி20-யில் இருந்து நீக்கப்பட்ட டோனி உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் திறமை பெற்றுள்ள டோனி உலகக்கோப்பை வரை விராட் கோலிக்கு வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி உலகக்கோப்பை வரை கட்டாயம் விளையாட வேண்டும். விராட் கோலிக்கு டோனி தேவை. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. டோனி பீல்டிங்கை சரியாக நிற்கும்படி அட்ஜஸ்ட் செய்வது உங்களுக்கே தெரியும். பந்து வீச்சாளர்களிடம் எப்படி பந்து வீச வேண்டும் இந்தியில் ஆலோசனை வழங்குவார். இது விராட் கோலிக்கு மிகப்பெரிய அளவில் பிளஸ்-யாக அமையும்’’ என்றார்.
    ×