search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voters list"

    வரைவு வாக்காளர் பட்டியலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் அரவிந்த் இன்று வெளியிட்டார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் முடிந்தபிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 1,847 பேரும், பெண் வாக்காளர்கள் 2 ஆயிரத்து 392 பேரும், இதர வாக்காளர் ஒருவர் என 4 ஆயிரத்து 234 பேர் சேர்க்கப்பட்டனர்.

    6 தொகுதிகளிலும் 2 ஆயிரத்து 576 ஆண் வாக்காளர்களும், 2 ஆயிரத்து 434 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 18 பேர் என 5 ஆயிரத்து 28 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    இதைதொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் அரவிந்த் இன்று வெளியிட்டார்.

    அதன்படி குமரி மாவட்டத்தில் 15 லட்சத்து 70 ஆயிரத்து 857 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 83 ஆயிரத்து 923 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 86 ஆயிரத்து 739 பேரும், இதர வாக்காளர்கள் 195 பேரும் அடங்குவர்.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 90 ஆயிரத்து 959 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 76 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 46 ஆயிரத்து 771 பேரும், இதர வாக்காளர்கள் 112 பேரும் உள்ளனர்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 248 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 372 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 865 பேரும், இதர வாக்காளர்கள் 11 பேரும் உள்ளனர். குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 817 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 527 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 275 பேரும், இதர வாக்காளர்கள் 15 பேரும் உள்ளனர்.

    பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 425 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 780 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 617 பேரும், இதர வாக்காளர்கள் 28 பேரும் உள்ளனர்.

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 870 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 434 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 26 ஆயிரத்து 426 பேரும், இதர வாக்காளர்கள் 10 பேரும் உள்ளனர். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 538 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 734 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 785 பேரும், இதர வாக்காளர்கள் 19 பேரும் உள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம்கள் 4 நாட்கள் நடக்கிறது. வருகிற 13, 14 மற்றும் 27, 28 ஆகிய 4 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது பெயர்களை சேர்த்து கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    குறைந்த வாக்காளர்களை கொண்ட துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 பேரும், அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியான வேளச்சேரியில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 502 பேரும் உள்ளனர்.
    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை 1.1.2022-ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2022-ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன் தீப்சிங் பேடி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் வெளியிட்டார்.

    இதில் தி.மு.க. நிர்வாகி மதுகணேஷ், அ.தி.மு.க. தரப்பில் மாவட்ட செயலாளர் பாலகங்கா, சரவணன், காங்கிரஸ் சார்பில் பொதுச்செயலாளர் தாமோதரன், பா.ஜ.க. சார்பில் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் நகலினை பெற்றுக்கொண்டனர்.

    பின்னர் இதுகுறித்து ககன் தீப்சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மண்டல அலுவலகங்கள், 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    பொதுமக்கள் தங்களது பெயர்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் படிவம்-6ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும் சமர்ப்பிக்க வேண்டும்.

    சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்ந்த புதிய வசிப்பிடத்தை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8எ-ஐ பூர்த்தி செய்து அதற்கான ஆதார நகலினை இணைத்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    மேலும் வருகிற 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல்-நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

    சென்னை மாவட்டத்தில் 3,750 வாக்குச் சாவடியில் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 297 வாக்குச் சாவடிகளும், குறைந்த பட்சமாக எழும்பூர் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு 19.3.2021 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 40 லட்சத்து 57 ஆயிரத்து 61 மொத்த வாக்காளர்கள் இருந்தனர். நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 40 லட்சத்து 50 ஆயிரத்து 38 வாக்காளர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    இதில் 19 லட்சத்து 92 ஆயிரத்து 198 பேர் ஆண்களும், 20 லட்சத்து 60 ஆயிரத்து 767 பேர் பெண்களும் அடங்குவார்கள். 1,073 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இதில் 10 ஆயிரத்து 621 ஆண் வாக்காளர்கள், 11,862 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 492 வாக்காளர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

    மேலும் 12,928 ஆண் வாக்காளர்கள், 12,568 பெண் வாக்காளர்கள், 19 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 25,515 பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    குறைந்த வாக்காளர்களை கொண்ட துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 பேரும், அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியான வேளச்சேரியில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 502 பேரும் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கூடுதல் மாவட்ட தேர்தல் ஆணையர் விஷூ மகாஜன், மாவட்ட தேர்தல் அதிகாரி குலாம் ஜிலானி பப்பா ஆகியோர் உடன் இருந்தனர்.


    நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் உள்ளனர்.
    சென்னை:

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான திருத்தப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை தொகுதிவாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 26-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் துணைப் பட்டியலின் அடிப்படையில் இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று வெளியிட்டார்.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:-

    திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி:- 9 லட்சத்து 61 ஆயிரத்து 864 ஆண்கள், 9 லட்சத்து 84 ஆயிரத்து 32 பெண்கள், 346 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 19 லட்சத்து 46 ஆயிரத்து 242 வாக்காளர்கள்.

    சென்னை வடக்கு:- 7 லட்சத்து 28 ஆயிரத்து 679 ஆண்கள், 7 லட்சத்து 58 ஆயிரத்து 326 பெண்கள், 456 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14 லட்சத்து 87 ஆயிரத்து 461 பேர்.

    சென்னை தெற்கு:- 9 லட்சத்து 79 ஆயிரத்து 480 ஆண்கள், 9 லட்சத்து 93 ஆயிரத்து 446 பெண்கள், 389 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 19 லட்சத்து 73 ஆயிரத்து 315.

    மத்திய சென்னை :- 6 லட்சத்து 60 ஆயிரத்து 447 ஆண்கள், 6 லட்சத்து 71 ஆயிரத்து 334 பெண்கள், 354 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 13 லட்சத்து 32 ஆயிரத்து 135.

    ஸ்ரீபெரும்புதூர்:- 11 லட்சத்து 22 ஆயிரத்து 731 ஆண்கள், 11 லட்சத்து 29 ஆயிரத்து 970 பெண்கள், 340 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 22 லட்சத்து 53 ஆயிரத்து 41.

    காஞ்சீபுரம்:- 8 லட்சத்து 5 ஆயிரத்து 932 ஆண்கள், 8 லட்சத்து 37 ஆயிரத்து 551 பெண்கள், 173 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 43 ஆயிரத்து 656.

    பெரம்பூர்:- 1 லட்சத்து 44 ஆயிரத்து 866 ஆண்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 684 பெண்கள், 59 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 609.

    பூந்தமல்லி:- 1 லட்சத்து 63 ஆயிரத்து 976 ஆண்கள், 1 லட்சத்து 68 ஆயிரத்து 297 பெண்கள், 48 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3 லட்சத்து 32 ஆயிரத்து 321.

    திருப்போரூர்:- 1 லட்சத்து 33 ஆயிரத்து 301 ஆண்கள், 1 லட்சத்து 37 ஆயிரத்து 433 பெண்கள், 24 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 758.

    தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் வயது வாரியாக உள்ள வாக்காளர்களின் விவரம் வருமாறு:-

    18 முதல் 19 வயது:- 12 லட்சத்து 12 ஆயிரத்து 550

    20 முதல் 29 வயது:- 1 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 249

    30 முதல் 39 வயது:- 1 கோடியே 39 லட்சத்து 44 ஆயிரத்து 994

    40 முதல் 49 வயது:- 1 கோடியே 28 லட்சத்து 7 ஆயிரத்து 48

    50 முதல் 59 வயது:- 96 லட்சத்து 16 ஆயிரத்து 909

    60 முதல் 69 வயது:- 61 லட்சத்து 35 ஆயிரத்து 328

    70 முதல் 79 வயது:- 30 லட்சத்து 50 ஆயிரத்து 173

    80-க்கும் கூடுதலாக:- 10 லட்சத்து 7 ஆயிரத்து 507 
    நாகை பாராளுமன்ற தொகுதியில் 12 லட்சத்து 92 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். #LSPolls
    நாகப்பட்டினம்:

    நாகை பாராளுமன்ற தொகுதியில் 12 லட்சத்து 92 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

    நாகை பாராளுமன்ற தொகுதி 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடங்கியது. இதில் நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளடக்கியது.

    இதில் கடந்த ஜனவரி 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

    நாகை சட்டமன்ற தொகுதியில் 91 ஆயிரத்து 422 ஆண் வாக்காளர்களும், 96 ஆயிரத்து 390 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 817 வாக்காளர்கள் உள்ளனர்.

    கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் 82 ஆயிரத்து 966 ஆண் வாக்காளர்களும், 85 ஆயிரத்து 710 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேர் என மொத்தம் 1 லட்சத்து 68 ஆயிரத்து 678 வாக்காளர்கள் உள்ளனர். வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 90 ஆயிரத்து 228 ஆண் வாக்காளர்களும், 92 ஆயிரத்து 731 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 82 ஆயிரத்து 959 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 716 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 421 பெண் வாக்காளர்களும், 22 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர். நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 379 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 991 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 377 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 15 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 652 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 668 வாக்காளர்கள் உள்ளனர்.

    நாகை பாராளுமன்றத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 726 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 53 ஆயிரத்து 895 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 12 லட்சத்து 92 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் ஆண்களை விட 15 ஆயிரத்து 169 பெண்கள் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

    இத்தகவலை நாகை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். #LSPolls
    திண்டுக்கல் மாவட்டத்தில் 17.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வினய் வெளியிட்டார்.
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் வினய் வெளியிட்டார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் மற்றும் ஒரே தொகுதிக்குள் இடம் மாற்றம் செய்தலுக்காக கடந்த 1.9.2018 முதல் 31.10.2018 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைகளின்படி 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு கல்வி நிறுவனத்தையும் தேர்தல் பணியாளர்கள் நேரடியாக அணுகி தகுதியுள்ள அனைத்து மாணவ-மாணவிகளையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தனர். இதனால் 18 முதல் 19 வயதுடைய 16 ஆயிரத்து 827 பேர் இளைய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 17.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

    மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் நிலையில் தீவிர ஆய்வு செய்து மாவட்டத்தில் 6 ஆயிரத்து 46 மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை சேர்க்கப்படாத தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் யாரும் இருந்தால் 1950 என்ற கட்டணம் இல்லா தொலைபேசியில் தகவல் கொடுத்தால் வீட்டிற்கே சென்று நிலை அலுவலர் உரிய படிவத்தில் மனுவை பெற்று நடவடிக்கை எடுப்பார்.

    வாக்காளர் பட்டியலில் உள்ள புகார்களை தெரிவிப்பதற்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மனோகர், கலெக்டரின் உதவியாளர் ராஜ்குமார், தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணிய பிரசாத் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தாமாகவே முன் வரவேண்டும் என்று ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

    ஊட்டி:

    ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மீதமுள்ள 27 சதவீத வாக்குகள் பதிவாகவில்லை. எனவே இன்றைய இளைஞர்கள் 31.1.2019 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். நமது மாவட்டத்தில் 18 மற்றும் 19 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் தங்களது பெயர்களை சேர்த்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் தங்களது முகவரி பெயர் நீக்கல், சேர்த்தல், பிழைகள் போன்றவைகள் ஏதேனும் இருப்பின் அதனை சரி செய்து கொள்ள வேண்டும். 

    நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 683 வாக்குச்சாவடி மையங்களும், 354 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளிடம் பள்ளி பருவத்திலேயே வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் 18 வயதை அடைந்தவுடன் அவர்கள் தாமாகவே வாக்களிக்க முன் வரவேண்டும். நமது மாவட்டத்தில் சராசரியாக 5 லட்சத்து 62 ஆயிரத்து 883 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 625 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 90 ஆயிரத்து 280 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வாக்காளர் தொடர்பான குறைகள், கருத்துக்கள், தகவல்கள் குறித்து இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

    முன்னதாக வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழி கலெக்டர் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    அனைத்து வாக்காளர்களும் தேர்தல் சம்மந்தப்பட்ட தகவல்கள் பெற கருத்துக்கள் கூற புகார்கள் அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் உதவி மையத்தினையும், நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டள்ள வாக்காளர் விழிப்புணர்வு மையத்தினை அதற்கான வழிகாட்டு புத்தகத்தினை மாவட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு பகுதி மேம்பாடு திட்ட இயக்குநர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதா பிரியா, ஊட்டி கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாளை மறுநாள் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #DMK #MKStalin

    சென்னை, அக். 12-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண் டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப் பதாவது:-

    ஹிட்லர் மற்றும் முசோலினியின் வாரிசுகள் தான் இந்நாட்டை ஆள்கிறார் களோ என்று அனைத்துத் தரப்பு மக்களும் அச்சப்படக் கூடிய அளவிலே, ஜனநாயகத்திற்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் விரோதமான செயல்பாடுகளை மத்தியமாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலை யில், பொதுமக்களின் இறுதி யானதும் உறுதியானதுமான நம்பிக்கையாக இருப்பது தேர்தல் களம் மட்டும் தான். அதுதான் அவர்கள் கையில் உள்ள வாக்குரிமை என்கிற வலிமை மிகுந்த ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்தக் கூடிய இடமாகும்.

    ஆனால், அந்த ஆயுதத்தையும் தந்திரமாகப் பறித்து, தேர்தல் களத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஆட்சியாளர்கள் பல மோசடிகளையும் சூழ்ச்சி களையும் செய்து வருகி றார்கள். இவை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எத்தனையோ புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளின்படி அந்த மோசடிகளைக் களை வதில் உரிய வேகமும் போதிய அக் கறையும் காட்டப்படவில்லை.

    கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில், ஆளுங்கட்சியினர், போலி வாக்காளர்களைப் புகுத்தவும், பாரம்பரியமான கழக வாக்காளர்களை நீக்கவும் முயற்சி செய்வதாக பல இடங்களிலிருந்தும் தகவல்கள் வருகின்றன.

    அவ்வாறு நடைபெறும் அத்துமீறல்களை சட்டவிரோத செயல்களைப் பற்றி, உடனுக் குடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களைக் கொடுத்து உரிய நிவாரணம் பெற்றிட வேண்டும் எனவும், அப்படி புகார் கொடுத்த விவரங்களைக் கழகத் தேர்தல் பணிக்குழுவிற்கும், தலைமைக் கழகத்திற்கும் அவ்வப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனுப்பி வைத்திட வேண்டும்“ என வலியுறுத்தப்பட்டது.

    இதனை கழக நிர்வாகிகள் சரியாகவும் முறையாகவும் கடைப்பிடித்திட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின வாக்கா ளர்களும் நீக்கப்படுகின்றனர். புதிதாகக் குடி வந்தவர்களின் பெயர்களை சேர்ப்பதிலும் அலட்சியம் காட்டப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்படும் புகார்களின் மீது தேர்தல் அலுவலர்கள் உரிய நடவ டிக்கை எடுப்பதில்லை; ஏனோ தயக்கம் காட்டுகிறார்கள்.

    இருப்பவர்களை நீக்குகின்ற அதே நேரத்தில், இறந்து போனவர்களின் பட்டியலை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி, அவர்களை நீக்குமாறு கழகத்தினரும் மற்ற கட்சியினரும் எடுத்துச் சொன்னால் அந்த வாக்காளர்களை நீக்கி விடாதவாறு ஆளுங்கட்சியினர் செயல்படுகிறார்கள். வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள தொழிலாளர்களுக்கு உரிய முகவரியில்லாத போதும் அவர்களின் பெயர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் சேர்த்து, வாக் காளர் அடையாள அட்டை களையும் பெற்றுத் தரும் வேலையை ஆளுந்தரப்பு மேற்கொள்கிறது.

    இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உள்ளிட் டோரின் பெயர்கள் நீக்கப் படுவதில் அலட்சியமும், கழகத்தினர்,சிறுபான்மையினர், தோழமைக் கட்சியினர் ஆகியோர் சார்ந்த வாக் காளர்கள் பெயர் களை நீக்குவதில் அதிதீவிர அக்க றையும் காட்டி ஆளுங்கட் சியினர் செயல்பட்டு வரு கின்றனர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, 14-ந்தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் கழகத்தின் முகவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் தான், வாக்காளர் பட்டியல் மோசடியைத் தடுத்திட முடியும்.

    புதிய இளம் வாக்கா ளர்களை சேர்ப்பது என்பதும் மிகவும் முக்கியமான பணியாகும். 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியுடன் 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்பதால், அத்தகைய இளை ஞர்கள் உரிய சான்றுகளுடன் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திட கழக முகவர்கள் துணை நிற்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புக்கான கடைசி முகாம் நடைபெறும் அக்டோபர் 14 காலை முதல் மாலை வரை இந்தப் பணியில் சிறிதும் சோர் வின்றிச் செயல் பட்டால் தான் ஆளுந்தரப்பு மேற்கொள்ளும் மோசடிகளைத் தடுத்திட முடியும். வாக்காளர் பட்டிய லில் உள்ள களைகளை நீக்கினாலே, வெற்றி எனும் பயிர் விரைந்து விளையும். சமுதாய சீர்திருத்தமும் தேர் தல் கள அரசியலும் கழகத்தின் இரு கண்கள்.

    வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு வாக்கும் நெல்மணிகள். ஒரு நெல் வீணானாலும், தேவையற்ற பதர்கள் பெருகினாலும் அது வெற்றியினைப் பாதிக்கும். இளையான்குடி தொகுதி யில் கழக வேட்பாளர் மலைக் கண்ணன் ஒரேயொரு வாக் கில் வெற்றி வாய்ப்பை இழந்ததனை கலைஞர் பல முறை சுட்டிக்காட்டி நமக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தி யிருக்கிறார். அந்த விழிப்புணர் வுடன் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் முகாமில் கவனம் செலுத்திட வேண்டும்.

    இன்று நீங்கள் காட்டும் அக்கறை, நாளை நம்மை வெற்றிக் கரை சேர்க்கும். விழிப்புடன் செயல்பட்டு, வெற்றியினை உறுதி செய்வீர்!

    சென்னையில் 3754 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. #VotersList
    சென்னை:

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    நாளை 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23-ந்தேதி, அடுத்த மாதம் 7 மற்றும் 14-ந்தேதி ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    இந்த சிறப்பு முகாம்கள் அனைத்தும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடத்தப்பட உள்ளன. சென்னையில் 3754 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-ஐயும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்ய படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்ய வேண்டும். ஒரே தொகுதிக்குள் இடம் மாறி இருந்தால் படிவம் ‘8ஏ’ வை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


    4 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலம் பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து கொள்ள விண்ணப்பிக்கலாம். மேலும் மற்ற நாட்களில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். அதுவரை ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    "நே‌ஷனல் ஓட்டர்ஸ் போர்ட்டல்" வழியாகவும் tn.election.gov.in  என்ற இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு முகாம்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது உதவி தலைமை ஆசிரியர் தலைமை அலுவலகராகவும் அவருக்கு கீழ் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு ஊழியர் வீதம் செயல்படுவார்கள் என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    2 மாத பெயர் சேர்த்தல், நீக்கம் முகாம் நடந்து முடிந்த பிறகு விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஜனவரி முதல் வாரம் இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.  #VotersList
    வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு தீவிர சிறப்பு சுருக்க திருத்தம், வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 86 ஆயிரத்து 758 பேரும், பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 37 ஆயிரத்து 103 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 118 பேரும் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

    வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக 1,681 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும். பொதுமக்கள் அனைவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்று சரிபார்க்கலாம்.

    பெயர் சேர்க்க படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, திருத்தம் மேற்கொள்ள படிவம்-8, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ ஆகிய விண்ணப்பங்களை பெற்று திருத்தங்களை சரி செய்து கொள்ளலாம்.

    இந்த விண்ணப்பங்களை பெறும் வாக்காளர்கள் சமீபத்தில் எடுத்த வண்ண புகைப்படத்தை மட்டுமே ஒட்ட வேண்டும். கருப்பு- வெள்ளை புகைப்படம் ஏற்று கொள்ளப்படாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வருகிற 9-ந் தேதி, 23-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 7-ந் தேதி, 14-ந் தேதி ஆகிய நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம்.

    அதேபோல் வேலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தி வாக்காளர் பட்டியலை வாசித்து காண்பிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, அனைத்து கிராமங்களிலும் வருகிற 8-ந் தேதி, 22-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதி, 13-ந் தேதி ஆகிய நாளில் சுருக்க திருத்தம்-2019 வரைவு வாக்காளர் பட்டியலை பார்வைக்கு வைத்தல் என்ற பொருளுடன் கிராம சபை கூட்டம் நடத்த உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்.

    கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் 30 லட்சத்து 51 ஆயிரத்து 171 பேர் இடம் பிடித்திருந்தனர். அதையடுத்து நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 10 ஆயிரத்து 883 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். 38 ஆயிரத்து 75 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தேர்தல் தாசில்தார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
    ×