search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குமரி மாவட்டத்தில் 15 லட்சத்து 70 ஆயிரத்து 857 வாக்காளர்கள்

    வரைவு வாக்காளர் பட்டியலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் அரவிந்த் இன்று வெளியிட்டார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் முடிந்தபிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 1,847 பேரும், பெண் வாக்காளர்கள் 2 ஆயிரத்து 392 பேரும், இதர வாக்காளர் ஒருவர் என 4 ஆயிரத்து 234 பேர் சேர்க்கப்பட்டனர்.

    6 தொகுதிகளிலும் 2 ஆயிரத்து 576 ஆண் வாக்காளர்களும், 2 ஆயிரத்து 434 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 18 பேர் என 5 ஆயிரத்து 28 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    இதைதொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் அரவிந்த் இன்று வெளியிட்டார்.

    அதன்படி குமரி மாவட்டத்தில் 15 லட்சத்து 70 ஆயிரத்து 857 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 83 ஆயிரத்து 923 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 86 ஆயிரத்து 739 பேரும், இதர வாக்காளர்கள் 195 பேரும் அடங்குவர்.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 90 ஆயிரத்து 959 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 76 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 46 ஆயிரத்து 771 பேரும், இதர வாக்காளர்கள் 112 பேரும் உள்ளனர்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 248 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 372 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 865 பேரும், இதர வாக்காளர்கள் 11 பேரும் உள்ளனர். குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 817 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 527 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 275 பேரும், இதர வாக்காளர்கள் 15 பேரும் உள்ளனர்.

    பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 425 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 780 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 617 பேரும், இதர வாக்காளர்கள் 28 பேரும் உள்ளனர்.

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 870 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 434 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 26 ஆயிரத்து 426 பேரும், இதர வாக்காளர்கள் 10 பேரும் உள்ளனர். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 538 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 734 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 785 பேரும், இதர வாக்காளர்கள் 19 பேரும் உள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம்கள் 4 நாட்கள் நடக்கிறது. வருகிற 13, 14 மற்றும் 27, 28 ஆகிய 4 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது பெயர்களை சேர்த்து கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Next Story
    ×