search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "volleyball"

    • தமிழக அணி 2-ம் இடம் பெற்று தமிழ்நாட்டுக்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.
    • மாணவன் கதிர்வேல் தமிழக அணிக்காக கலந்துகொண்டு விளையாடினார்.

    திருப்பூர்:

    தேசிய அளவிலான எறிபந்து போட்டி நடைபெற்றது. இதில் திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி மாணவன் கதிர்வேல் தமிழக அணிக்காக கலந்துகொண்டு விளையாடி வெற்றி பெற்றார். தமிழக அணி 2-ம் இடம் பெற்று தமிழ்நாட்டுக்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.

    வெற்றி பெற்ற மாணவனுக்கு பள்ளி தலைவர் மோகன் கே.கார்த்திக், தாளாளர் வினோதினிகார்த்திக், செயலாளர் நிவேதிகாஸ்ரீராம், நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ், பள்ளி முதல்வர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    • திருக்கனூரை சேர்ந்த இளைஞர்கள் நேற்று கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்
    • அப்போது பந்து அங்குள்ள அம்சவள்ளி என்பவருடைய வீட்டில் விழுந்தது.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே உள்ள விநாயகம்பட்டு கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது பந்து அங்குள்ள அம்சவள்ளி  என்பவருடைய வீட்டில் விழுந்தது.

    இதனை அம்சவள்ளியும் அவரது கணவர் கனகராஜ் மற்றும் உறவினர்கள் முரளி, மூர்த்தி ஆகியோர் கண்டித்தனர். கைப்பந்து விளையாடிய இளைஞர்களுக்கு ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த திருவண்ணாமலை பாதையில் வசிக்கும் வீரா சாமி  என்பவர் அம்சவள்ளி தரப்பினரிடம் கேட்டுள்ளார்.

    இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசி, கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் கனகராஜின் கார் தாக்கப்பட்டு சேதமடைந்தது.

    இதுகுறித்து இரு தரப்பினரும் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக உடையாப்பட்டியில் நடைபெற்றது.
    • சேலம், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.

    சேலம்:

    சேலம் மாவட்ட கைப்பந்து கழகம், ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப், இயற்கையை நேசி அமைப்பு ஆகியவை சார்பில் மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக உடையாப்பட்டியில் நடைபெற்றது. இதில் சேலம், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.

    இறுதியில் ஆண்கள் பிரிவில் ஏ.வி.எஸ். கல்லூரி அணி முதல் இடத்தை வென்றது. வி.வி.சி. அணி 2-வது இடமும், சாய்டிரைலர்ஸ் அணி 3-வது இடமும், ஓமலூர் கொங்குபட்டி அணி 4-வது இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை ஏ.என்.மங்கலம் செயின்ட் மேரிஸ் பள்ளி அணி வென்றது. சக்தி கைலாஷ் கல்லூரி அணி 2-வது இடத்தையும், ஆத்தூர் பாரதியார் பள்ளி அணி 3-வது இடத்தையும், சென்னை மினிஸ்போர்ட்ஸ் அணி 4-வது இடத்தையும் பெற்றன.

    பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் இயக்குனர் சீனிவாசன் வரவேற்று பேசினார். போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா கலந்து கொண்டு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார்.

    • மதுரையில் கைதிகளுடன், போலீசார் கைப்பந்து விளையாடினர்.
    • கைதிகள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கைதிகளின் உடல் திறனை மேம்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையில் அனைத்து மத்திய சிறைகளிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை மத்திய சிறையில் ஏற்கனவே கைப்பந்து, இறகுப்பந்து, கேரம், செஸ் ஆகியவற்றுக்கான உள்-வெளி அரங்கங்கள் உள்ளன. அங்கு கைதிகள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கைதிகள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். அங்கு வந்த மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பரசுராமன் மற்றும் அதிகாரிகள் கைப்பந்து விளையாடும் கைதிகளுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தனர்.

    • பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கேரளா மேற்கு வங்காளத்தை வீழ்த்தியது.
    • ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு சர்வீசஸ் அணியை வென்றது.

    சென்னை:

    36-வது பெடரேசன் கோப்பை கைப்பந்து போட்டி காரைக்காலில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கேரளா 25-18, 25-21, 25-17 என்ற நேர் செட் கணக்கில் மேற்கு வங்காளத்தை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் கேரளா-ரெயில்வே அணிகள் மோதுகின்றன.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு 25-22, 24-26, 25-19, 19-25, 15-10 என்ற கணக்கில் போராடி சர்வீசஸ் அணியை வென்றது.

    மற்ற ஆட்டத்தில் ஜார்க்கண்ட் 3-1 என்ற கணக்கில் கர்நாடகாவையும், ரெயில்வே 3-0 என்ற கணக்கில் புதுச்சேரியையும், அரியானா 3-1 என்ற கணக்கில் ராஜஸ்தானையும் வீழ்த்தியது.

    • சிறுவாச்சூரில் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் போட்டி தொடக்கம்
    • போட்டிகளில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது.

    பெரம்பலூர்

    தேசிய பாராஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர், மாநில தலைவர் ராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய பாராஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு, மாநில பாரா வாலிபால் சங்கம், மாவட்ட வாலிபால் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் சேம்பியன்ஷிப்-2023 போட்டி சிறுவாச்சூர் தனியார் பள்ளியில் இன்று (7ம்தேதி) மாலை 6 மணியளவில் தொடங்குகிறது. போட்டியை பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைக்கிறார்.

    இந்த போட்டியில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என 3 வகையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஜார்கண்ட் உட்பட 20 மாநிலங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டிகளில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ராம்குமார், துணை தலைவர் மோகனசுந்தரம் ஆகியோர் செய்துள்ளனர் என தெரிவித்தனர்.

    • போட்டியில் 9 மாவட்டங்களை சேர்ந்த 26 அணிகள் பங்கேற்றது.
    • குத்தாலம் அரசு கல்லூரி 2-ம் இடம், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி 3-ம் இடம் பிடித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா கடற்கரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தஞ்சாவூர் மாவட்ட பிரிவு சார்பில் திருச்சி மண்டல அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

    இதன் இறுதி போட்டியை நேற்று சனிக்கிழமை மாலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். முன்னதாக இரண்டு அணிகளின் வீரர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), பயிற்சி ஆட்சியர் விஷ்ணுபிரியா, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர்

    மு.கி.முத்துமாணிக்கம், தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், சேது பாவசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன், மீனவர் பேரவை மாநில துணைச் செயலாளர் தாஜூதீன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த 26 அணிகள் பங்கேற்றது.

    இதில் திருச்சி ஜமால் கல்லூரி அணியினர் முதலிடம் பெற்றனர். குத்தாலம் அரசு கலைக் கல்லூரி அணியினர் இரண்டாம் இடமும், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி அணியினர் மூன்றாவது இடமும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற அணியினர் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கையுந்து போட்டியில் கலந்து கொள்வார்கள் என கூறினர்.

    • முதலாவதாக வந்த சென்னை அணிக்கு முதல் பரிசாக 20000ரூபாய் வழங்கப்பட்டது.
    • லீக் மற்றும் நாகௌட் முறையில் நடைபெற்றது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி காந்திமைதானத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோத்தகிரி கைப்பந்து கழகம் சார்பில் 11-வது மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.இந்த கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு, கேரளா, சென்னை, கோவை என பல மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

    இந்த கைப்பந்தாட்ட போட்டி லீக் மற்றும் நாகௌட் முறையில் நடைபெற்றது. இந்த கைப்பந்தாட்ட காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டி பகல் நேரங்களில் நடைபெற்றது. இறுதிப்போட்டியானது நேற்று இரவு நடந்தது. இதில் சென்னை அணியும், நெல்லை கண்ணன் அணியும் மோதின. இந்த போட்டிக்ஷயில் 19-24 என்ற நேர் செட் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலாவதாக வந்த சென்னை அணிக்கு முதல் பரிசாக 20000ரூபாயும், நெல்லை கண்ணன் அணிக்கு 2-ம் பரிசாக 15000 ரூபாயும் அணிக்கு 3-ம் விவி பிரதர்ஸ் அணி 3பரிசாக 10000 ரூபாயும், 4-ம் பரிசாக ஆல்வின் பிரதர்ஸ் அணிக்கு 7000 ரூபாயும் வழங்கப்பட்டது.

    • இமாசலபிரதேசம் சிம்லாவில் கேலோ இந்தியா என்ற அகில இந்திய அளவில் (19 வயதுக்கு உட்பட்ட) பெண்களுக்கான ஜூனியர் கைப்பந்து போட்டி நடைபெற்றது
    • இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

    சேலம்:

    இமாசலபிரதேசம் சிம்லாவில் கேலோ இந்தியா என்ற அகில இந்திய அளவில் (19 வயதுக்கு உட்பட்ட) பெண்களுக்கான ஜூனியர் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

    இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், இமாசல பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    தமிழ்நாடு அணி சார்பில் சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சி பாரதியார் கலை அறிவியல் கல்லூரி மாணவி கார்த்திகா, ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நித்திஷா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர்.

    இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதனை தொடர்ந்து அகில இந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் சாதனை படைத்த 2 வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று அழகாபுரத்தில் நடந்தது. இதில், சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு சேலத்தை சேர்ந்த 2 வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், மாவட்ட துணைத்தலைவர் ராஜாராம், கைப்பந்து பயிற்சியாளர் பரமசிவம், நிர்வாகி நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 17 வயதுக்குட்பட்ட பிரிவில் இறகு பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவில் தேர்வு பெற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவிகள் குருகுல நிர்வாகி கயிலைமணி வேதரத்தினம் மற்றும் உடற்கல்வி இயக்குனர் கவிதா தலைமையாசிரியர் செல்வி உட்பட பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கஸ்தூர்பா காந்திகள்யாகுருகுலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நாகை மாவட்ட அளவில் நடந்த வாலிபால் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட பிரிவில் 17 வயதுக்குட்பட்ட பிரிவினும் முதலிடம் பெற்று மாநில அளவில் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விளையாட்டு திடலில் வேதாரண்யம் நாகை கீழையூர் கீவளுர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வேதாரணியம் குருகுலம் பள்ளி மாணவிகள் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மேசை பந்து மற்றும் வாலிபால் போட்டிகள் இரண்டாம் இடமும் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் இறகு பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவில் தேர்வு பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவிகள் குருகுல நிர்வாகிகயிலைமணி வேதரத்தினம் மற்றும் உடற்கல்வி இயக்குனர் கவிதா தலைமையாசிரியர் செல்வி உட்பட பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.

    • இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. கே.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
    • நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.

    தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜே. நிறுவன ஆதரவுடன் 70- வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.

    லீக் மற்றும் நாக்- அவுட் முறையில் நடத்தப்படும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., இந்தியன் வங்கி, தமிழ்நாடு போலீஸ், சென்னை ஸ்பைக்கர்ஸ், சுங்க இலாகா, வருமன வரி, ஐ.ஓ.பி.செயின்ட் ஜோசப் உள்பட 32 அணிகளும், பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், தமிழ்நாடு போலீஸ், பி.கே.ஆர்.(கோபி) எஸ்.ஆர்.எம்., எஸ்.டி.ஏ.டி, ஜி.கே.எம்., ஐ.சி.எப். தமிழ்நாடு தபால் துறை பாரதியார் (ஆத்தூர்) செயின்ட் மேரிஸ், ராணி மேரி கல்லூரி உள்பட 49 அணிகளும் பங்கேற்கின்றன.

    இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. கே.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச் செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் தெரிவித்துள்ளார்.

    • எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 3 நாட்கள் போட்டி நடைபெறுகிறது.
    • வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகையுடன் சான் அகாடமி கோப்பைகள் வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி ஆதரவுடன் மாவட்ட பள்ளிகள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (3-ந்தேதி) தொடங்குகிறது. 5-ந்தேதி வரை 3 நாட்கள் போட்டி நடைபெறுகிறது.

    சிறுவர்கள் பிரிவில் 25 பள்ளிகளும், சிறுமிகள் பிரிவில் 16 பள்ளிகளும் ஆக மொத்தம் 41 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகையுடன் சான் அகாடமி கோப்பைகள் வழங்கப்படும். இது தவிர தனி நபர் பரிசு தொகையும் அளிக்கப்படும்.

    மேற்கண்ட தகவல்களை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜுன் துரை தெரிவித்துள்ளார்.

    ×