search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைப்பந்து போட்டி"

    • கைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
    • தமிழ்நாடு போலீஸ் 2-0 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பையும் தோற்கடித்தன.

    நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    'ஏ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஐ.ஓ.பி. 25-22, 25-19 என்ற கணக்கில் எஸ்.டி.ஏ.டி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. இந்த பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வருமானவரி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

    'பி' பிரிவில் நடந்த ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். 26-24, 25-16 என்ற கணக்கில் இந்தியன் வங்கியை தோற்கடித்தது. இந்தியன் வங்கி அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது. மற்றொரு போட்டி டி.ஜி. வைஷ்ணவா 2-1 என்ற கணக்கில் ஜி.எஸ்.டி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

    பெண்கள் பிரிவில் ஐ.சி.எப்.2-0 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்.அணியையும், தமிழ்நாடு போலீஸ் 2-0 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பையும் தோற்கடித்தன.

    • 15 அணிகள் கலந்து கொண்டன
    • போட்டியில் முதலிடத்தை சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலைக்கல்லூரி பெற்றது

    மார்த்தாண்டம் :

    கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடை யேயான ஆண்கள் கைப்பந்து போட்டி நடை பெற்றது. போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 15 அணிகள் கலந்து கொண்டன. இதன் நிறைவு விழா கல்லூரி அரங்கில் நடந்தது. துணை உடற்க ல்வித்துறை இயக்குனர் பி.அனுஷா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தி னராக மனோ ன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் ஆறுமுகம் மற்றும் கன்வீனர் ஜான் ரஸ்கின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    போட்டியில் முதலி டத்தை சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராம லிங்க தேவர் கலைக்கல்லூ ரியும், 2-வது இடத்தை தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியும், 3-வது இடத்தை சூசைபுரம் புனித அல்போன்சா கல்லூரியும், 4-வது இடத்தை அம்பை ஆர்ட்ஸ் கல்லூரியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு புனித அல்போன்சா கல்லூரி தாளா ளர் மற்றும் செய லாளர் அருட்பணியாளர் ஆன்றனி ஜோஸ், முதல்வர் அருட்பணியாளர் மைக்கேல் ஆரோக்கிய சாமி, கல்லூரி வளாக வழிகாட்டி அருட்ப ணியாளர் அஜின்ஜோஸ், துணை முதல்வர் ஆர்.சிவனேசன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    • பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் பரமக்குடி அணி முதலிடம் பெற்றது.
    • சென்னை முகமது ஏ.ஜே. பொறியியல் கல்லூரியின் இயக்குனர் சதக் தம்பி நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    கீழக்கரை முகமது சதக் அறக்கட்டளை 50-வது ஆண்டு பொன் விழாவை யொட்டி ராமநாதபுரம் மாவட்ட பெண்களுக்கான கைப்பந்து போட்டி முகமது சதக் விளையாட்டு மைதா னத்தில் நடைபெற்றது. போட்டியில் மாவட்டத்தில் இருந்து 20 அணிகள் நாக் அவுட் முறையில் மோதின.

    அதில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் தங்க பதக்கத்தை பரமக்குடி ஆர்.எஸ்.வி.சி. அணியினரும் 2-ம் பரிசு ரூ.8 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை ராமநாதபுரம் வேலு மனோ கரன் கலை மற்றும் அறி வியல் கல்லூரி அணி மாணவிகளும் 3-ம் பரிசு ரூ.6 ஆயிரம் மற்றும் வெண் கல பதக்கத்தை கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி அணி மாணவிகளும் 4-ம் பரிசை ராமநாதபுரம் செய்யது அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளும் கைப்பற்றினர்.

    பரிசளிப்பு விழாவுக்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப் தலைமை தாங்கினார்.அறக்கட்டளை நிர்வாக இயக்குனர்கள் ஹாமிது இபுராகிம், ஹபீப் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நவ்ரா பாத்திமா வரவேற்றார். முடிவில் சென்னை முகமது ஏ.ஜே. பொறியியல் கல்லூரியின் இயக்குனர் சதக்தம்பி நன்றி கூறினார்.

    இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முஹைதீன் இப்ராகிம், கவுன்சிலர் முக மது காசிம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
    • போட்டியினை கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் சீலன், அனிஷா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

    கருங்கல் :

    கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்லூரிகள் பங்கேற்றன. தொடக்க விழாவில் லட்சுமிபுரம் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஜெறின்ஜோஸ் வாழ்த்துரை வழங்கினார்.போட்டியில் முதல் பரிசை புனித அல்போன்சா கல்லூரியும், 2-வது பரிசை லட்சுமிபுரம் கல்லூரியும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவவர்களுக்கு கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி, கேம்பஸ் மினிஸ்டர் அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவ னேசன் ஆகியோர் பரிசு களையும், கேடயங்களையும் வழங்கியதோடு தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டனர். போட்டியினை கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் சீலன், அனிஷா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

    • தேசிய கைப்பந்து போட்டி நடந்தது.
    • மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டிகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    நாகப்பட்டினம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு மைதானத்தில் பள்ளி கல்வித்துறை, இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டி நடந்தது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முத்து நடேஷ், நிதீஷ் குமார், மணிகண்டன் ஆகியோர் தேசிய கைப்பந்து போட்டிக்கு தேர்வாகினர். மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டிகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளி செயலர் கிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீதரன், தலைமையாசிரியர் கண்ணன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பொன்னியின் செல்வன், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
    • 17 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் சி.இ.ஓ.ஏ. மதுரை அணியினர் முதல் பரிசை பெற்றனர்

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளி முன்னாள் நிர்வாகி எஸ்.கே.பி. குத்தாலிங்க நாடார் நினைவு கைப்பந்து போட்டி நேற்று மடத்தூரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் மதுரை மேட்டுப்பட்டி அணியினர் முதல் பரிசும், சி.இ.ஓ.ஏ. மதுரை அணியினர் 2-வது பரிசும், மடத்தூர் இந்து நடுநிலைப் பள்ளி அணியினர் 3-ம் பரிசும், நான்காம் பரிசை மம்சாபுரம் அணியினரும் பெற்றனர்.

    மாணவிகள் பிரிவில் முதல் பரிசு பரமகல்யாணி பள்ளி அணியினரும், 2-வது பரிசை எஸ்.என். அகாடமி அணியினரும், 3-ம் பரிசினை அழகர் கோவில் அணியினரும், 4-வது பரிசினை மடத்தூர் இந்து நடுநிலை பள்ளி மாணவிகளும் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் முதல் பரிசை சி.இ.ஓ.ஏ. மதுரை அணியினரும், 2-வது பரிசினை மம்சாபுரம் அணியினரும், 3-ம் பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் அணியினரும், 4-ம் பரிசை ராமேஸ்வரம் அணியினரும் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடு களை பிரவீன் அகஸ்டின் செய்திருந்தார்.

    • வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்கள், மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா நினைவு மாநில கைப்பந்து போட்டி வி.எஸ்.ஏ.கல்லூரியில் நடத்தின.
    • இந்தபோட்டியில் 25-15,25-16, 18-25 25-17என்ற புள்ளிகணக்கில் சேலம் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

    சேலம்:

    சேலம் வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்கள், மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா நினைவு மாநில கைப்பந்து போட்டி வி.எஸ்.ஏ.கல்லூரியில் நடத்தின.

    19 வயதுக்கு உட்பட்ட இந்த போட் டியில் ஆண்கள் பிரிவில் 38 அணிகளும், பெண்கள் பிரிவில் 31 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. முடிவில் பெண்கள் பிரிவில் சேலம் மற்றும் சென்னை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று நேற்று மாலை விளையாடின. இந்தபோட்டியில் 25-15,25-16, 18-25 25-17என்ற புள்ளிகணக்கில் சேலம் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட் டத்தை தட்டி சென்றது. சென்னை அணி 2-ம் பரிசும், ஈரோடு அணி 3-ம் பரிசும் கிருஷ்ணகிரி அணி 4-ம் பரி சும் பெற்றன. மற்றொரு ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் கோவை மற்றும் நெல்லை அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று மோதின. முடிவில் கோவை அணிமுதலிடமும், நெல்லை அணி இரண்டாம் இடமும் நாகை அணி மூன்றாம் இடமும், கிருஷ்ணகிரி அணி நான்காம் இடமும் பிடித்தன. இதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் வி.எஸ்.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி கலந்து கொண்டு வெற்றி பெற்ற கைப்பந்து அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர்கள் ராஜாராம், அகிலா தேவி, ரான்சன், லாரன்ஸ் பாஸ்கர், டாக்டர். செந்தில் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏலகிரி அரசு பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.

    இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 15 பள்ளிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் தொப்பூர் அரசு பள்ளி 4-வது இடத்தையும், கடத்தூர் அரசு பள்ளி 3-ம் இடத்தையும், சீந்தல்பாடி அரசு பள்ளி 2-ம் இடத்தையும், ஏலகிரி அரசு பள்ளி மாணவர்கள் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர். இது தவிர 4 சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். மேலும் சிறந்த வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் கைப்பந்து கழக சேர்மன் பூக்கடை ரவி, நிர்வாகிகள் இளவரசன், டி.ஜி. மணி, மணிவண்ணன், செயலாளர் தங்கராஜ், இணை செயலாளர் நிர்மல் குமார், பயிற்சியாளர்கள் மாது வணங்காமுடி, ஜெயபால், ஜீவா, சசிகுமார், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலமேட்டில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.
    • முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டன.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்த நாளையொட்டி காமராஜர் கைப்பந்து குழு சார்பில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. முன்னாள் பேரூராட்சி சேர்மன் கஜேந்திரன் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சந்துரு, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்திக், நாடார் உறவின்முறை சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரேந்திரன் வரவேற்றார். பாலமேடு பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் திண்டுக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. 2 நாட்கள் நடந்த போட்டியில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என தனித்தனியே முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டன. 

    • போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 8 அணிகள் பங்கேற்றன.
    • ஆண்கள் பிரிவில் முதல் பரிசை கோவை அணி பெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாள் விழா மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 9-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

    தருவைகுளம் முத்து ரஜினிகாந்த் கைப்பந்து கழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்மன்றமும் இணைந்து நடத்திய போட்டியில் தூத்துக்குடி, சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 8 அணிகள் பங்கேற்றன.

    2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற கோவை அணியும், 2-ம் பரிசை பெற்ற சென்னை அணிக்கும் பெண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற ஈரோடு அணிக்கும், 2-ம் பரிசை பெற்ற சென்னை அணிக்கும் ரொக்க பரிசு மற்றும் வெற்றி கோப்பைகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கர்நாடக மாநில ரஜினிகாந்த் ரசிகர்மன்ற தலைவர் சந்திரகாந்த் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்மன்றத்தினர் விஜய் ஆனந்த், ஜெயபால், அசோக்ராஜ், விஜய் சாம்சன், ரமேஷ் கார்த்திகேயன், கண்ணன், லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாநகராட்சி 5-வது வார்டு சேது பாதை ரோடு பகுதியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு லதா ரஜினிகாந்த் பாரத சேவா நிர்வாகிகள், துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினர். விருதுநகர் மண்டல பொறுப்பாளர் ரஜினி முருகன் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலெட்சுமி சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இணை ஒருங்கிணைப் பாளர் ராஜமனுவேல், நிர்வாகிகள் குமாரசாமி, செல்வம், சிரிதேவி, முனீஸ்வரி, ஜோதி காமாட்சி, கோவில்பட்டி முத்து மாரியப்பன், விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கேரளா மேற்கு வங்காளத்தை வீழ்த்தியது.
    • ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு சர்வீசஸ் அணியை வென்றது.

    சென்னை:

    36-வது பெடரேசன் கோப்பை கைப்பந்து போட்டி காரைக்காலில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கேரளா 25-18, 25-21, 25-17 என்ற நேர் செட் கணக்கில் மேற்கு வங்காளத்தை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் கேரளா-ரெயில்வே அணிகள் மோதுகின்றன.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு 25-22, 24-26, 25-19, 19-25, 15-10 என்ற கணக்கில் போராடி சர்வீசஸ் அணியை வென்றது.

    மற்ற ஆட்டத்தில் ஜார்க்கண்ட் 3-1 என்ற கணக்கில் கர்நாடகாவையும், ரெயில்வே 3-0 என்ற கணக்கில் புதுச்சேரியையும், அரியானா 3-1 என்ற கணக்கில் ராஜஸ்தானையும் வீழ்த்தியது.

    • ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் தொடங்கி வைத்து மாணவர்களை உற்சாக மூட்டினார்.
    • விழாவில் தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இளைஞர்களையும், மாணவ மாணவியரையும் ஊக்கப்படுத்தும் வகையில் கைப்பந்து, கிரிக்கெட், இறகு பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் ஒன்றியம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக பையர் நத்தம் அம்பேத்கர் கைப்பந்து கழகம் ஏற்பாட்டின் பேரில் கைப்பந்து போட்டி அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இதனை ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் தொடங்கி வைத்து மாணவர்களை உற்சாக மூட்டினார்.

    இந்த விழாவில் தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பொ.மல்லாபுரம் பேரூர் கழக செயலாளர் கவுதமன், பொ.மல்லாபுரம் பேரூராட்சி கவுன்சிலர் கோகுல்நாத், ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×