search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி
    X

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி

    • மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.
    • முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகள் சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.

    கல்வி நிறுவனங்களின் தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் கிருஷ்ணகரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்கள் கைப்பந்து போட்டியையும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரி ஆங்கில துறை தலைவர் கல்பனா பெண்களுக்கான கைப்பந்து போட்டியையும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பர்கூர் துணை போலிஸ் சூப்பிரண்டு மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்.

    ஆண்கள் பிரிவில் தொப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதல் பரிசையும், அரசம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2-ம் பரிசையும், ஓசூர் ஆர்.வி. ஆண்கள் பள்ளி அணி 3-ம் பரிசையும் பெற்றனர். பெண்கள் பிரிவு போட்டியில் ஓசூர் ஆர்.வி. பெண்கள் பள்ளி அணி முதல் பரிசையும், ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளி அணி 2-ம் பரிசையும், புதுப்பேட்டை அரசு பெண்கள் பள்ளி அணி 3-ம் பரிசையும் பெற்றனர். ஆண்கள் அணிக்கு தலா ரூ.10 ஆயிரம், ரூ.7,500, ரூ.5 ஆயிரம் முறையே முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பை வழங்கப்பட்டது.

    பெண்கள் அணிக்கு தலா ரூ. 7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் முறையே முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பேராசிரியர்கள், துறை தலைவர்கள். மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை உடற்கல்வி இயக்குனர் திருப்பதி, நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தனர்.

    Next Story
    ×