search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீச் வாலிபால் போட்டி; கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    பீச் வாலிபால் போட்டியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    பீச் வாலிபால் போட்டி; கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • போட்டியில் 9 மாவட்டங்களை சேர்ந்த 26 அணிகள் பங்கேற்றது.
    • குத்தாலம் அரசு கல்லூரி 2-ம் இடம், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி 3-ம் இடம் பிடித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா கடற்கரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தஞ்சாவூர் மாவட்ட பிரிவு சார்பில் திருச்சி மண்டல அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கடற்கரை கையுந்து பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

    இதன் இறுதி போட்டியை நேற்று சனிக்கிழமை மாலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். முன்னதாக இரண்டு அணிகளின் வீரர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), பயிற்சி ஆட்சியர் விஷ்ணுபிரியா, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர்

    மு.கி.முத்துமாணிக்கம், தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், சேது பாவசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன், மீனவர் பேரவை மாநில துணைச் செயலாளர் தாஜூதீன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த 26 அணிகள் பங்கேற்றது.

    இதில் திருச்சி ஜமால் கல்லூரி அணியினர் முதலிடம் பெற்றனர். குத்தாலம் அரசு கலைக் கல்லூரி அணியினர் இரண்டாம் இடமும், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி அணியினர் மூன்றாவது இடமும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற அணியினர் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கையுந்து போட்டியில் கலந்து கொள்வார்கள் என கூறினர்.

    Next Story
    ×