search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle accident"

    • கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண் டிருந்தது.
    • அவினாசிபாளையம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பொங்கலூரில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடத்தில் இருந்து கிழக்கு நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் பின்னால் மற்றொரு கார் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அது எதிர்பாராத விதமாக முன்னால் வந்த கார் மீது மோதியதில் அந்த காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

    மேலும் இதில் காயம் அடைந்த அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிவகங்கை அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதி 20 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டை இடித்துக்கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.

    தேவகோட்டை

    சிவகங்கையில் செயல் பட்டு வரும் தனியார் பள்ளியில் சிவகங்கை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களை அழைத்து வருவதற்காக இன்று காலை தாயமங்கலத்தில் இருந்து பள்ளி வாகனம் வந்துள்ளது.

    இந்த வாகனம் தாயமங்கலம், சாத்திரசன்கோட்டை பகுதியில் 22 மாணவ-மா ணவிகளை ஏற்றிக்கொண்டு வேலாங்குளம் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டை இடித்துக்கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த வேலான்குளம் கிராமத்தினர் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், மேலும் 10 பேர் சாத்திரசன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். சிவகங்கை தாலுகா போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பள்ளி வாகனம் தாமதமாக வந்ததாகவும், ஓட்டுநர் வேகமாக இயக்கியதும், பள்ளி வாகனத்தில் உதவியாளர் யாரும் இல்லாததும், ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    • ரோட்டை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாவை அடுத்த வன்னிவேடு பகுதி பைபாஸ் ரோட்டில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்த இறந்தவர் யார் என்பது குறித்தும் விபத்துக்கு காரணமான வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே வாகனம் மோதி 2 பேர் பலியானார்கள்.
    • இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருமங்கலம் மேலஉரப்பனூர், இந்திரா காலனி, நேதாஜிநகரை சேர்ந்தவர் ராமநாதன்(வயது32). இவர் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் ராமநாதன் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.

    அவர் எஸ்.ஆர்.கண்ணன் தோப்பு கண்மாய் முன்பு சென்றபோது அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமநாதன் உயிருக்கு போராடினார். அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.

    மதுரை பசுமலையில் நேற்று நள்ளிரவு 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்தவிபத்து குறித்து திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் மனோஜ் கொடுத்த புகாரின்பேரில், மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இவர் இருசக்கர வாகனத்தில் பொர சப்பட்டு அருகில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார்,
    • அங்கு எதிரே நடந்து வந்தவர் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டை அடுத்த ஈருடையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஈசாக் (வயது 43) கூலி தொழிலாளி. இவர் இருசக்கர வாகனத்தில் பொர சப்பட்டு அருகில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிரே நடந்து வந்தவர் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஈசாக் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஈசாக் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டிவனம் அருகே வாகன விபத்தில் தனியார் வங்கி ஊழியர் பலியானார்.
    • குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே சாரம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (வயது35). இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை சாரத்திலிருந்து இருசக்கர வாகனத்தின் மூலமாக தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது பலமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டீபன் ராஜ் சம்பவ இடத்தில் பலியானார் .

    இது குறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் அங்கு விரைந்து அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றார்கள்.

    • வாகன விபத்தில் வக்கீல் உட்பட 2 பேர் காயம் ஏற்பட்டது
    • காரில் சென்ற போது ஏற்பட்ட சம்பவம்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ளே சிக்கப்பட்டியை சேர்ந்த குமரேசன் மகன் கன்ராக் (எ) கணேசன் (வயது 31) அரசு வக்கீல். இவர் நேற்று புதுக்கோட்டை நீதிமன்றம் சென்று விட்டு மீண்டும் ஆலங்குடி நோக்கி நண்பர்கள் இருவருடன் காரில் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியும், கணேசன் ஓட்டி சென்ற காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் கணேசன் படுகாயமடைந்தார். இதற்கிடையே அந்த வழியாக கீழக் கரும்பிரான்கோட்டையை சேர்ந்த வடிவேல் மகன் சந்தோஷ் (19) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் அவரும் படுகாயமடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    விழுப்புரம் மாவட்டம் நந்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி, (வயது, 70) விவசாயி.

    இவர் நந்தியவாடி கிராமத்திலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். அப்போது சேத்துப்பட்டு ஆரணி சாலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் பழனி, மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரதேபரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் பழனி, வைத்திருந்த டைரியில் இருந்த செல்போன் மூலம் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடந்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 75). இவர் பி.கே. புரம் அருகில் குடியாத்தம் - காட்பாடி தேசிய நெடுஞ் சாலையில் நள்ளிரவில் சாலையை கடந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அதே இடத்தில் சகுந்தலா பலியானார்.

    இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகுந்தலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சீர்காழியிலிருந்து பூம்புகார், திருவெண்காடு மங்கைமடம் செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
    • விபத்து தடுக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறை சார்பில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மேற்பார்வையில் பேரிகார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் சீர்காழியில் இருந்து காரைக்கால், நாகப்பட்டினம், வேதாரணியம், செல்லும் சாலை மற்றும் சீர்காழியிலிருந்து பூம்புகார், திருவெண்காடு மங்கைமடம் செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.

    இதனை தடுக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறை சார்பில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மேற்பார்வையில் பேரிகார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் வைத்தீஸ்வரன் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன், உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர். மேலும் அப்பகுதியில் காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கபடும் என இன்ஸ்பெக்டர் மணிமாறன் தெரிவித்தார்.

    சங்கராபுரம் அருகே பஸ்சுக்கு காத்திருந்த தாய்-மகன் மீது வாகனம் மோதியது. இதில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சங்கராபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மைக்கேல்புரத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர் இவரது மனைவி ஜாக்குலின் (வயது 33).

    இவர்களது மகன் மரியசெல்வம் (14). 9-ம் வகுப்பு படித்து வந்தான். தேர்வு முடிந்து விட்டதால் விடுமுறையில் இருந்து வந்தான். ஜான்பீட்டர் தற்போது பெங்களூருவில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தாயும், மகனும் பெங்களூரு சென்று ஜான்பீட்டரை பார்க்க முடிவு செய்தனர். அதன்படி இதைத் தொடர்ந்து அவர்கள் இன்று காலை மைக்கேல்புரம் பஸ் நிலையத்துக்கு வந்து பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜாக்குலின், மரியசெல்வம் ஆகியோர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தாயும்-மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து சங்கராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-மகன் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரியில் இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் 6 பேர் பலியாகினர். #Accident
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் தனியார் வாகனம் ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. டர்ஹல் பகுதியில் சென்றபோது வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்தது.

    இதில் நிலைகுலைந்த வாகனம் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர். இதையடுத்து, சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆனது. தொடர்ந்து மீட்புக் குழுவினர் போலீசார் அங்கு போக்குவரத்தை சீர்செய்தனர். #Accident 
    ×