search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரிகார்டு"

    • நகர சபை ஆணையர் மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் ஆகியவற்றிற்கு நேரில் சென்று ஒரு கோரிக்கை மனு கொடுத்த னர்.
    • பொதுமக்கள் போலீசாரின் இந்த கெடுபிடியால் கடை தெருவுக்குள் வருவதையே தவிர்த்து விடுகின்றனர்

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் டிடி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகளும் வியா பாரிகளும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர், நகர சபை ஆணையர் மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் ஆகிய வற்றிற்கு நேரில் சென்று ஒரு கோரிக்கை மனு கொடுத்த னர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது,

    திருக்கோவிலூர் நகர போலீஸ் நிலையம் சார்பில் கட்ட கோபுரம் அருகே பேரிகார்டு வைக்கப்பட்டு அனைவருமே கட்ட கோபுரத்தின் வாயில் வழியாக கடைத்தெருவிற்கு செல்லும் வகையில் வைத்துள்ளனர். அதேபோல் போக்குவரத்து காவல்துறை சார்பில் கட்ட கோபுரத்திற்கு முன்னதாக எம்ஜிஆர் சிலை அருகில் போக்குவரத்திற்கு இடையூறாக சாமியான பந்தல் போட்டு கடை தெருவுக்கு செல்லும் ரோட்டையே ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து கடை தெருவுக்கு வரும் பொதுமக்கள் போலீசாரின் இந்த கெடுபிடியால் கடை தெருவுக்குள் வருவதையே தவிர்த்து விடுகின்றனர். திருக்கோவிலூர் நகர பொதுமக்கள் மற்றும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களை நம்பி கட்டை கோபுர தெரு கடைவீதி பள்ளிவாசல் வீதி மற்றும் சின்ன கடை தெருவில் உள்ள சுமார் 600க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் உள்ளன. அது தவிர சுமார் 200க்கும் மேற்பட்ட தெருவோர பாதசாரி வியாபாரிகளும் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் எங்களைப் போன்ற வணிக நிறுவனங்களும் பாதசாரி வியாபாரிகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே கட்ட கோபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேரீகார்டரை அகற்றிவிட்டு கடைத்தெருவுக்குள் வருவ தற்கு ஒரு வழியா கவும் கோபுரத்தின் வழியே வெளியே செல்லும் வழியா கவும் மாற்றி யமைத்தல் வியாபாரிகளின் வியாபாரம் கெடாது. எனவே வியா பாரிகள் மற்றும் பாதசாரி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பேரிகார்டுகளால் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப் உத்தவிட்டார்.

    மாமல்லபுரம்:

    இ.சி.ஆர் சாலையில் இரவு நேரம் வேகத்தடைக்காக வைக்கப்படும் பேரிகார்டுகளால் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுக்க அப்பகுதிகளில் வெளிச்சத்தை ஏற்படுத்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப் உத்தவிட்டார்.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எல்கை துவங்கும் பகுதியான திருவிடந்தை இ.சி.ஆரில், மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகளில் சீரியல் விளக்குகள் அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்கள் நின்று நிதானமாக செல்கிறது.

    • சீர்காழியிலிருந்து பூம்புகார், திருவெண்காடு மங்கைமடம் செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
    • விபத்து தடுக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறை சார்பில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மேற்பார்வையில் பேரிகார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் சீர்காழியில் இருந்து காரைக்கால், நாகப்பட்டினம், வேதாரணியம், செல்லும் சாலை மற்றும் சீர்காழியிலிருந்து பூம்புகார், திருவெண்காடு மங்கைமடம் செல்லும் சாலை ஆகிய இரு சாலைகளும் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.

    இதனை தடுக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவில் காவல்துறை சார்பில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மேற்பார்வையில் பேரிகார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் வைத்தீஸ்வரன் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன், உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர். மேலும் அப்பகுதியில் காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கபடும் என இன்ஸ்பெக்டர் மணிமாறன் தெரிவித்தார்.

    • திண்டிவனம் பகுதியில் அதிக விபத்தினை தடுப்பதற்கு உயர்கோபுர மின் விளக்குகள் ,திண்டிவனம் உட்கோட்டம் போலீஸ் டி.எஸ்.பி. அபிஷக் குப்தாவால் ஆய்வு செய்யப்பட்டது.
    • விபத்துகளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ரோசனை மற்றும் ஒலக்கூர் போலீசாரிடம் அறிவுறு த்தினார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் உட்கோட்டம் போலீஸ் டி.எஸ்.பி. அபிஷக் குப்தா திண்டிவனம் உட்கோட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அதிகம் விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    அதாவது திண்டிவனம் பாதிரி ஜங்ஷன், கூச்சி கொளத்தூர் ஜங்ஷன், சாரம் பி.டி.ஓ. ஆபீஸ் ஜங்ஷன், சலவாதி ஜங்ஷன் ஆகிய பகுதிகளை அவர் பார்வையிட்டார். மேலும் மேற்படி இடங்களில் விபத்துகள் நடக்காத வண்ணம் அந்த இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு மற்றும் பேரிகார்டு மற்றும் பிளிங்கர் லைட் ஆகியவற்றின் மூலம் விபத்துகளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ரோசனை மற்றும் ஒலக்கூர் போலீசாரிடம் அறிவுறு த்தினார்.

    ×